நாங்கள் வேண்டுமா?
தலைமைச் செயலர் சாய்குமார் வேண்டுமா??
மேல்நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு வாகனம் தட்டுத் தடுமாறி அதே இடத்தில் நின்று, அதன்பிறகு பாதாளத்தை நோக்கி வந்துவிட்டால், மீண்டும் அதை மேல்நோக்கிச் செலுத்துவது எவ்வளவு கடினமோ, அதேபோல்தான் தமிழ்நாட்டுக்கும் நடந்திருக்கிறது என்று முதலமைச்சர் விஜய்யை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அவர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். உயர் கல்வி அமைச்சரின் பதில் ஏற்புடையதாக இல்லை. நடந்ததை மூடி மறைக்கும் நிகழ்வாக தான் அவரின் பதில் இருக்கிறது.
சிபிஐ, சிபிஎம் தடை செய்யப்பட்ட கட்சிகளா?
அரசு அமைய ஆதரவு தந்த நாங்கள் வேண்டுமா?
அதிகாரிகள் வேண்டுமா? முதல்வர் கையில்தான் முடிவு உள்ளது’’ என சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலர்கள் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர்கள் அதிகபட்ச வயது 70 ஆகவும், பேரூர் செயலர் வயது 60 ஆகவும், மாநகர, நகர, பேரூர் வட்டச் செயலர் வயது 50 ஆகவும், கிளைச் செயலர் வயது 45 ஆகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒருவர் 3 முறை மாவட்ட செயலர் பதவி வகிக்கலாம் என தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கூடு, கண்ணூர் செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து கொச்சிக்கு ரூ5,336 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ14,843 ஆகவும், திருவனந்தபுரத்திற்கு ரூ5,853 ஆக இருந்த கட்டணம், ரூ14,700 ஆகவும், கோழிக்கூடுவுக்கு ரூ6,158 ஆக இருந்த கட்டணம், ரூ17678 ஆகவும், கண்ணூருக்கு ரூ5,655 ஆக இருந்த கட்டணம், ரூ12,270 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சியாகிள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், உயர் ஜாதியினருக்கான இ.டபிள்யூ.எஸ் இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் திராவிடர் கழகம் சார்பில் இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் சென்னை பெரியார் திடலில் இருந்து தொடங்கியது. இன்றைய பரப்புரை பயணம் ஐஸ் அவுஸ், ஆயிரம் விளக்கு, கலைஞர் கருணாநிதி நகர், வடபழனி, எம்.எம்.டி.ஏ, பெரம்பூர், மூலக்கடையில் நிறைவடைகிறது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டமன்றத்தில் இன்று நேரலை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், எந்த எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் சொந்தமாக வழங்கப்படாது.அது யாருடைய சொந்த காரும் கிடையாது.
5 வருடங்கள் பயன்படுத்துவதற்குதான் கார் வழங்கப்படும். 5 ஆண்டுகள் முடிந்ததும் கார் திரும்ப பெறப்படும் என்றார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது, மொத்தமாக 48 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருது தமிழகத்தில் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, புளியம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ், மற்றும் மதுரையை சேர்ந்த பிஎம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் அமுதாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் முகத்தில் கரி ...!
கேரள காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிற்கு வருவதாகச் சொல்லிவிட்டு வர மறுத்தவர் விஜய். ‘டெல்லி வரும் போது சோனியாவையும் ராகுலையும் சந்திப்பேன்’ என்று சொல்லி விட்டுச் சந்திக்காமல் திரும்பி வந்தவர் விஜய். (இரண்டாவது முறை சென்றபோதுதான் சந்தித்தார்!)
வைகோ புத்தகத்தை ராகுல் வெளியிடும் போது முதல் பிரதியை வாங்கிக் கொள்வதாக ஒப்புக் கொண்ட விஜய், திடீரென வர மறுத்தார்.
இந்தியா கூட்டணிக்குள் அவர் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது காங்கிரஸ். அதையும் விஜய் ஏற்றுக் கொள்ளவில்லை. விஜய் இல்லாமல்தான் இந்தியா கூட்டணிக் கூட்டமும் நடந்தது.
இந்த வரிசையில் தொகுதி மறுவரையறை விவகாரத்திலும் காங்கிரஸ் முகத்தில் கரியைப் பூசி இருக்கிறார் விஜய்.
மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரம் ஆக்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தனது நிலைப்பாடாகச் சொன்னார் முதலமைச்சர் விஜய். மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்றும் சொன்னார்.
இதையே 12.8.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார்கள்.
காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியும் நாடகம் போட்டார் முதலமைச்சர் விஜய். இவரின் நாடகத்தைப் புரிந்துகொண்ட தி.மு.க., இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
உடனே, ‘பார்த்தீர்களா? பா.ஜ.க.வுடன் சேர்ந்து விட்டது தி.மு.க.’ என்று திசை திருப்பியது த.வெ.க.
தொகுதி மறுவரையறை பிரச்சினையை முழுமையாக விளக்கி போராட்டங்களைத் தொடங்கியதும், அதனை இந்தியப் பிரச்சினையாக ஆக்கியதும் திராவிட முன்னேற்றக் கழகமே!
தி.மு.க. தலைவராக மட்டுமல்ல; தமிழ்நாடு முதலமைச்சராகவும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரத்தில் மிகச் சரியாகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார்.
செயல்பட்டு வருகிறார்.
தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் எதிர்க்கவில்லை.
ஆனால் அந்த நடவடிக்கையானது நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம். இந்தப் போராட்டம், எல்லை வரையறைக்கு எதிரானது அல்ல. இந்தப் போராட்டம் நியாயமான எல்லை வரையறையை வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டார்கள்.
“This fight is not against delimitation. This fight is for fair delimitation” என்று குறிப்பிட்டார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இதனைப் புரிந்து கொள்ளாமல் த.வெ.க. அமைச்சர்கள் விமர்சித்தார்கள்.
‘தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்’ என்று காங்கிரஸ் கட்சியும் விமர்சித்தது.
துரோகம் இழைப்பதும், உடனிருந்து கொல்வதும் காங்கிரஸ் கட்சிக்குக் கைவந்த கலையாகும். அதனைத் தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி செய்து
வருகிறது. தமிழ்நாட்டிலும் செய்தது. தி.மு.க. கூட்டணியில் வென்று விட்டு, த.வெ.க. ஆட்சியில் இரண்டு பதவியைப் பெற்றுவிட்டு, ‘தமிழ்நாட்டில் காங்கிரஸ் அலை’ என்று கூச்சம் இல்லாமல் சொல்வதற்கு காங்கிரஸ் கட்சியால் தான் முடியும்.
இத்தகைய சூழலில் தங்களது கைப்பாவையாக விஜய்யை மாற்ற நினைத்தது காங்கிரஸ் கட்சி.
ஆனால் நிமிடத்துக்கு நிமிடம் நிறம் மாறும் தன்மை கொண்டவன் நான் என்பதை விஜய் நிமிடத்துக்கு நிமிடம் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்.
41 பேர் மரணத்துக்குக் காரணமான கரூர் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிப்பதாலும், பல்வேறு வருமான வரி வழக்குகளாலும் பா.ஜ.க. என்ற பெயரையே உச்சரிக்கப் பயந்து கொண்டு இருப்பவர் முதலமைச்சர் விஜய்.
அவரது ஆட்சிக்கு இரண்டு உறுப்பினர்களைக் கொண்டு முட்டுக் கொடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி. எனவே காங்கிரஸ் கட்சியையும் அவரால் பகைத்துக் கொள்ள முடியாது.
எனவேதான் காங்கிரஸ் இழுப்புக்காக ஒரு கூட்டத்தைப் போட்டார் விஜய். உள்துறை அமைச்சர் அமித்ஷாவைப் பார்த்ததும், அவர் சொல்வதற்கும் தலையாட்டி விட்டு வந்து விட்டார் விஜய்.
20.8.2026 அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், உரையாற்றிய முதலமைச்சர் விஜய், ‘’நமது பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது. மாநிலங்களைத் தண்டிக்கக் கூடாது.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதன் காரணமாக எந்தவொரு மாநிலத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ சதவிகிதமும் குறையாது என்ற தெளிவான சட்டபூர்வமான உறுதிமொழியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்’’ என்று பேசி இருக்கிறார் விஜய்.
அதாவது ‘எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை அமைய வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார் விஜய். ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்டி அடித்து விட்டார் விஜய்.
இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளின் பதில் என்ன? ‘தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பர்கள்’ என்று ராகுல் காந்தி சொன்னார். யாரைச் சொன்னார் ராகுல்?
ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக்காக ஒரு கூட்டம் போட்டு அவர்கள் கணக்கை முடித்த விஜய், கரூர் 41 பேர் மரண சம்பவத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க. சொல்வதையும் ஆதரித்துவிட்டார்.
இப்படி பச்சையாக நிறம் மாறுவதை தைரியமாகச் செய்வது தான் விஜய்யின் துணிச்சல் ஆகும்.
,‘சத்தமாகச் சொல்லி விட்டால் பொய்யும் உண்மையாகும்’ என்பதைப் போல!



