இஸ்மாயில். ஆணையம்
செயல்படாத சென்னை ரேடார்
சென்னை துறைமுகக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சென்னை வானிலை மையத்தின் ரேடார் கடந்த 2018-ஆம் ஆண்டிலேயே பழுதடைந்தது. அதற்கான உதிரி பாகங்கள் கிடைக்காததால் பழுது நீக்குவதில் தற்போது வரை சிக்கல் நீடித்துவருவதுடன், அவ்வப்போது செயல்பட்டு வந்தாலும் முழுமையான செயல்பாடு இல்லாமல் உள்ளது
அதே சமயம், பருவமழை நெருங்கும் சூழலில், பள்ளிக்கரணை NIOT வளாக ரேடார், ஸ்ரீஹரிகோட்டா ரேடார், திருவனந்தபுரம் இஸ்ரோ ரேடார்கள் மற்றும் காரைக்கால் ரேடார் ஆகியவற்றின் தரவுகள் மூலமே தற்போதைய வானிலை கணிக்கப்பட்டு வருகிறது
மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சட்டமன்ற மாண்பை கெடுத்த த.வெ.க அரசின் முகத்திரையை கிழிக்க இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற வேண்டிய கட்டாயம் என்று மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 8 மணி நிலவரப்படி 2,281 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேவேளையில், அணையின் நீர்மட்டம் 84.84 அடியாக குறைந்துள்ள நிலையில், டெல்டா பாசனத் தேவைக்காக அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த செப்டம்பர் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் பட்டினப்பாக்கம், பாலவாக்கம், காசிமேடு உட்பட 5 இடங்களில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டன.சிலைகள் கரைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தேங்கிய மரக்கழிவுகள் மற்றும் இரும்பு கழிவுகள் உள்ளிட்ட மொத்தம் 926 மெட்ரிக் டன் அளவிலான கழிவுகள் சென்னை மாநகராட்சியால் தீவிரமாக அகற்றப்பட்டுள்ளன
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் நீர்த்துப் போகச் செய்ததாக, அரசியல் ஆதாயத்திற்காக நிர்மல் குமார் பேசியிருப்பது முற்றிலும் தவறானது.2025 நவம்பர் 7-ல் திமுக ஆட்சியில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரின் வீடு சோதனையிடப்பட்டு அப்போதைய ஆதாரங்களின் அடிப்படையில் புலன் விசாரணை செய்யப்பட்டது. ‘வழக்கை கைவிடவில்லை, உரிய ஆதாரங்கள் கிடைக்கும் வரை மேல் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என்றே போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது.
திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ கண்டனம்.
பதவி விலகிய எம்.எல்.ஏ-க்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க நீதிமன்றமா சட்டதிருத்தம் செய்ய முடியும்? தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது.என்று தேர்தல் செலவை ராஜினாமா எம்எல்ஏக்களிடம் வசூலிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
சந்தையில் முக்கிய தனியார் பால் நிறுவனமான ஆரோக்கியா பாலின் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லிட்டர் 86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறதுபொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான ஒரு லிட்டர் தயிரின் விலையும் 88 ரூபாயில் இருந்து 90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திடீர் பால் மற்றும் தயிர் விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
« அரசியல் கைதிகளாக கைதாகி சிறையில் இருந்தவர் என்ற அடிப்படையில் ஆணையத்தில் 1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் நாள் சாட்சியம் அளித்துள்ளார் தலைவர் மு.க.ஸ்டாலின். (பக்கம் 287)
« 1977 ஆம் வருடம் மார்ச் மாதம் 7 ஆம் நாளிட்ட O.S. 1830/77 இல் I.A. 4817/ 77 ல் திரு.எம்.கே.ஸ்டாலின் தாக்கல் செய்த ஆதரவான உறுதிமொழிப் பத்திரம் – முக்கியமான ஆதாரமாக ஆணையத்தில் இருக்கிறது.
« இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு அரசு உள்துறை அரசாணை எண் 379 ஐ 15.12.1978 அன்று வெளியிட்டுள்ளது.
9 ஆவது பிளாக்கில் வைக்கப்பட்ட கைதிகள் 2.2.1976 அன்று அடிக்கப் பட்டார்களா? என்ற கேள்விக்கு, ‘ஆம் தடுப்புக் காவல் கைதிகள் அடிக்கப்பட்டனர்’ என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
‘இவர்கள் தங்கள் கட்சியில் இருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டனர்’ என்றும் அந்த அரசாணையில் உள்ளது. இதனை எழுதி இருப்பவர் அன்றைய தலைமைச் செயலாளர் சி.வி.ஆர்.பணிக்கர்.
இவற்றை எல்லாம் சொன்னால், அகில இந்திய ரீதியில் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜே.சி.ஷா கமிஷன் அறிக்கையில் ஏன் இல்லை என்று கேட்கிறார்கள். ஏற்கனவே கவர்னர் பிரபுதாஸ் பட்வாரியால் எம்.எம்.இஸ்மாயில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் இது பற்றி இன்னொரு ஆணையம் விசாரிக்க வேண்டியது இல்லை என்பதால் ஷா கமிஷன் இதனை விசாரிக்கவில்லை. இதுவும் ஷா கமிஷன் அறிக்கையில் பக்கம் 148 இல் இருக்கிறது.
‘‘TAMIL NADU – 20.125 An Enquiry Commission has already looked into the conditions of jails in Tamil Nadu. Therefore the Commission is not recording a note on the conditions in jails in Tamil Nadu. (Page 148)” என்று ஷா கமிஷன் அறிக்கையில் இருக்கிறது. சென்னை சிறைத் தாக்குதல் குறித்துதான் ஷா கமிஷன் விசாரிக்க வில்லையே தவிர மற்ற சிறைகளில் நடந்தவை அதில் உள்ளது.
தமிழ்நாட்டில் கைதானவர் எண்ணிக்கைப் பட்டியல் ஷா கமிஷன் அறிக்கை பக்கம் 35 இல் இருக்கிறது. தி.மு.க.வினர் தான் தமிழ்நாட்டில் அதிகம் கைதானார்கள் என்பது பக்கம் 42 இல் இருக்கிறது. சென்னை சிறை நீங்கலாக மற்ற சிறைகளில் நடந்த விவகாரங்கள் பற்றி பக்கம் 107 – 108 இல் இருக்கிறது. கட்டாய கர்ப்பத்தடை நடந்ததா என்பது பற்றி பக்கம் 192இல் இருக்கிறது. இவை அனைத்தும் வரலாற்று ஆவணங்கள் ஆகும்.
ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பது போல இதை மறைக்க முடியாது. தற்குறிகள் அரசாண்டால் வரலாற்றுப் புத்தகங்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் என்பதைத் தான் நடைமுறையில் பார்க்கிறோம்





