சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல.

🔷 புதிய தலைமைச்செயலகம் அமைப்பதற்கு எதிராக வரும் 29-ம் தேதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம். பட்டினப்பாக்கம் பகுதியை மீனவர்களின் நீண்டகால குடியிருப்பு பகுதியாக அறிவிக்க வலியுறுத்தல்.🔷 சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு. தவெக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்திலும் திமுக சார்பில் மனு🔷 மதுராந்தகம் தொகுதியில் வாக்காளர்களுக்கு தவெகவினர் பணப்பட்டுவாடா. தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.🔷 மதுராந்தகம் தொகுதியில் பரப்புரைக்கு சென்ற புஸ்சி ஆனந்துக்கு எதிராக மக்கள் முழக்கம். தாராபுரத்தில் கடும் எதிர்ப்பால் காவலர்கள் புடைசூழ வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் சத்யபாமா.🔷 தமிழ்நாடு முழுவதும் 43 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. கணக்கில் வராத ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஜிபே பரிவர்த்தனை கண்டுபிடிப்பு.🔷 பாலியல் வழக்கில் கைதான தொழிலதிபர் வீரமணியின் உதவியாளர் கணேசனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல். போக்சோ நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையிலடைப்பு.ராசிபுரம் அருகே மருந்தகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட காய்ச்சல் பாதித்த சிறுவன் பலி. நர்ஸிங் மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது.🔷 முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் பயனாளிகள் கடும் அவதி. சிவகங்கையில் பேருந்தில் வரவே கடன் வாங்கி ஆட்சியர் அலுவலகம் வந்த முதிய தம்பதி.🔷 மேட்டூர் அணை திறந்து 22 நாட்களாகியும் டெல்டா விவசாயிகள் தவிப்பு. போதுமான தண்ணீர் கிடைக்காததால் தொடங்கப்படாத சம்பா சாகுபடி.🔷 நெல்லை அருகே தண்ணீரின்றி தரிசாக மாறும் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலம். பாசன கால்வாய்களை சீரமைத்து தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை.🔷 சென்னை ஆலந்தூர் சுற்றுவட்டாரத்தில் ஷூக்களை மட்டும் திருடும் இளைஞர். 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கைவரிசை காட்டியவரை தேடும் போலீஸ்.🔷 சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் வளாக ஒப்பந்ததாரர் மீது பல கோடி ரூபாய் மோசடி புகார். கடைகளை அகற்ற அதிகாரிகள் வற்புறுத்தும் நிலையில், பணத்தை மீட்டுத் தர கோரிக்கை.🔷 இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் விடுவிப்பு. தலா இரண்டரை லட்சம் ரூபாய் அபராதத்துடன் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு.🔷 தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இயல்பைவிட அதிக மழைக்கு வாய்ப்பு. பருவமழைக்கு முன்பே நீர்நிலைகளை முழுமையாக ஆய்வு செய்ய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை🔷 பேச்சுவார்த்தைக்கு வர தவறினால் ஈரான் மீண்டு எழ முடியாத அளவுக்கு தாக்குதல் நடத்தப்படும். ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை. .


5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.!

சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல.


சொல் புத்தியும் இல்லாமல், சுய புத்தியும் இல்லாமல் தற்குறித்தனமாக ஏனோ, தானோ என்று செயல்பட்டு

தமிழக விவசாயிகளையும், ரேஷன் அரிசியை நம்பியிருக்கும் ஏழை மக்களை த.வெ.க. அரசு வாட்டி வதைப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.



மழையின் காரணமாக 5 லட்சம் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் விளையாட்டுப் பிள்ளைகளால் நடத்தப்படும் த.வெ.க. கூட்டணி ஆட்சியில், விவசாயிகளுக்கு ஏற்படும் தொடர் பாதிப்புகள் சொல்லி மாளாத வகையில் உள்ளது.

டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை, இந்த பொய்க்கால் குதிரை அரசு முறையாக கொள்முதல் செய்வதில்லை என்று புகார்கள் எழுந்தன.


அதே நேரம் அரையும், குறையுமாக கொள்முதல் செய்த நெல்மணிகளை சேமிப்புக் கிடங்குகளில் முறையாக பாதுகாக்காததால் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்ததாகச் செய்திகள் வருகின்றன. 


 5 லட்சம் நெல் மூட்டைகள் சேதம்

இவைகளையெல்லாம் மிகுந்த அக்கறையோடு சுட்டிக் காட்டினால், குறைகளைக் களைய முறையான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பிரச்சனைகளை திசை திருப்பும் விதத்தில் இந்த த.வெ.க. அரசு அலட்சியப் போக்கோடு நடந்துகொள்கிறது.


கடலூர் மாவட்டம் முழுவதும் 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இடப் பற்றாக்குறை காரணமாக வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் நெல் மூட்டைகள் முறையாக தார்பாய் கொண்டு மூடாததால், கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில் நனைந்து கடுமையாக சேதமடைந்துள்ளது வருந்தத்தக்கதாகும்.


இதுபோன்று மழையில் நனைந்து சேதமடைந்த நெல்மணிகளை அரிசியாக்கி புழுத்துப்போன நிலையில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் நிலை ஏற்படும். த.வெ.க. ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் நெல்மணிகள் சேதமடைகிறது.


கொள்முதல் செய்த நெல்மணிகளும் முறையான பராமரிப்பு இல்லாததால் மழையில் நனைந்து விணாகிப் போகிறது.


விவசாயிகளை வாட்டி வதைக்கும்தவெகஅரசு

சொல் புத்தியும் இல்லாமல், சுய புத்தியும் இல்லாமல் ஏனோ, தானோ என்று தற்குறித்தனமாக செயல்பட்டு


தமிழக விவசாயிகளையும், ரேஷன் அரிசியை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் வாட்டி வதைக்கும் த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல்லை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு த.வெ.க. அரசை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி