ஒரு போட்டோ எடுக்க ரூ.6 கோடி.

◼️ மதுரையில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் கொட்டித் தீர்த்த கனமழை. கர்டர் ரயில்வே தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியதால், போக்குவரத்து நிறுத்தம்.◼️ திங்கள் அல்லது செவ்வாய் முதல் கிராமப்புற ரேஷன் கடைகளிலும் வெங்காயம் விற்பனை. அடுத்த மாதம் முதல் கோதுமை மாவு பாக்கெட் விற்கப்படும் என்றும் அமைச்சர் வெங்கடரமணன் தகவல்.◼️ அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக தொடர விரும்பி இசக்கி சுப்பையா கடிதம் அளித்த விவகாரம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி.◼️ தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொலை. முதற்கட்டமாக இரண்டு பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை.◼️ நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பஞ்சாயத்து தலைவர் செங்கல்லால் அடித்துக் கொலை. தனது வீட்டிற்கு குடிநீர் வரவில்லை எனக் கூறி தாக்குதல் நடத்தியவர் கைது.◼️ ஓசூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் லஞ்சம் வாங்கிய விவகாரம். கைதான இடைத்தரகரின் சேலம் வீட்டில் 6 கிலோ தங்கம், 27 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்.◼️ டெல்லியில் ஏர் இந்தியா விமானம் தாழ்வாக பறந்து விபத்து ஏற்பட்ட சம்பவம். தலைமை விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து, பணி நீக்கம்.


திங்கள் (7)அன்று சவால்விட்ட முதல்வரி்டம் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி மட்டுபல்ல யாருமே கேள்வி கேட்க முடியாது.அன்று சட்டசமையில் 'கேள்வி'நேரம் தடை.என பேச்சு எழுகிறது.


ஒரு போட்டோ எடுக்க ரூ.6 கோடி. ?

டெல்டா மாவட்­டங்­கள் வறண்டு கிடக்­கின்­றன. அதைப் பற்றி கொஞ்­ச­மா­வது முத­ல­மைச்­சர் விஜய்க்கு கவலை இருக்­கி­றதா? இல்லை. 

உழ­வர்­களுக்கு உதவி செய்ய ஏதா­வது புதுத் திட்­டம் உண்டா? சொல்லி இருக்­கி­றாரா என்­றால் அது­வும் இல்லை.

மேட்­டூர் அணை ஆண்­டு­தோ­றும் ஜூன் 12 ஆம் தேதி­யன்று திறக்­கப்­ப­டும். இந்த ஆண்டு திறக்­கப்­பட்­டதா என்­றால் அது­வும் இல்லை. திறப்­ப­தற்­கான முயற்­சி­யா­வது எடுத்­தாரா? அது­வும் இல்லை. 

ஆண்­டு­தோ­றும் வழக்­க­மா­கத் திறக்­கும் நாளில் மேட்­டூர் அணை­யைத் திறக்க முடி­ய­வில்­லையே என்ற கவலை அல்­லது வருத்­த­மா­வது முத­ல­மைச்­சர் விஜய்க்கு

இருக்­கி­றதா? இல்லை.ஜூன் 12 ஆம் தேதி திறக்க வேண்­டிய மேட்­டூர் அணையை செப்­டம்­பர் 1 ஆம் தேதி திறந்து வைக்க பட்­டு­வேட்டி சட்­டை­யோடு போன முத­ல­மைச்­சர், விஜய்­யாக மட்­டுமே இருக்க முடி­யும். இவ­ருக்­கு­தான் என்ன செய்­கி­றோம்

என்­ப­தைத் தெரிந்து செய்­கி­றாரா? இல்லை தெரி­யா­மல் தான் செய்­கி­றாரா?

82 நாட்­கள் தாம­த­மாக மேட்­டூர் அணை திறக்­கப்­ப­டு­கி­றது. இத­னால் ஒன்­றரை லட்­சம் ஏக்­க­ரில் சாகு­படி குறை­யும் என்­கி­றார்­கள்.

 இதற்கு முத­ல­மைச்­ச­ரின் பதில் என்ன? ‘செல்­லம் பாட்­டிக்கு கூலிங்­கி­ளாஸ் கொடுத்­து­விட்­டேன்’ என்­பது தான் அவர் இந்த மாநி­லத்­துக்­குச் சொல்­லும் பதிலா?

ஒரே ஒரு பாட்­டிக்கு கூலிங்­கி­ளாஸ் கொடுத்து விட்­டால் கோடிக்­க­ணக்­கான உழ­வர்­களை கூல் செய்து விட முடி­யுமா?

மூதாட்­டி­யைக் கட்­டிப் பிடித்து போட்டோ எடுப்­ப­தெல்­லாம் 50 ஆண்­டு­க­ளுக்கு முன்பே எம்.ஜி.ஆர். செய்­து­விட்­டுப் போய்­விட்­டார். இன்­னும் அந்த அத­ரப்­ப­ழைய பாணி தனக்கு கைகொ­டுக்­கும் என்று விஜய் நம்­பு­கி­றாரா?

‘அர­சாங்­கம் மாசா மாசம் கொடுக்­கும் ஆயி­ரம் ரூபாய்ல தான் என் வாழ்க்­கையே ஓடுது’ என்று விஜய்­யி­டமே சொல்லி இருக்­கி­றார் அந்த மூதாட்டி. 

ஆயி­ரம் ரூபாய் நோட்­டில் தெரி­வது திரா­விட நாய­கன் மு.க.ஸ்டாலின் அவர்­களின் முகம் அல்­லவா? இவ­ரைப் போன்­ற­வர்­களை ஏமாற்ற முடி­யாது.

கர்­நா­டகா மாநி­லம் தமிழ்­நாட்­டுக்­குத் தர வேண்­டிய தண்­ணீரை உரிய அள­வில் வழங்­கு­வது இல்லை. அதைத் தட்­டிக் கேட்க முது­கெ­லும்பு இல்­லாத முத­ல­மைச்­ச­ராக விஜய் இருக்­கி­றார். 

அதை மறைக்க ‘மேட்­டூர்சூட்­டிங்’ போல, ‘மைசூர் சூட்­டிங்’ எடுக்க நினைத்­தார் விஜய். ஆனால்

கர்­நா­டக அமைப்­பி­னர் கடு­மை­யான எதிர்ப்பு தெரி­வித்த நிலை­யில் பின் வாங்­கி­னார் விஜய்.

காவிரி உரிமை நீரைத் தடுக்க மேக­தாது அணை­யைக் கட்­டு­கி­றது கர்­நா­டக மாநி­லம். இத­னைத் துணிச்­ச­லோடு எதிர்க்­க­வில்லை முத­ல­மைச்­சர் விஜய். பாவலா காட்­டிக் கொண்டு இருக்­கி­றார். 

இந்த உரி­மை­க­ளுக்­காக ஒன்­றிய அர­சி­டம் பேச வேண்­டிய தமிழ்­நாடு சிறப்பு பிர­தி­நிதி, ஏதோ ஒரு விழா­வில் நடி­கை­யு­டன் கைகோர்த்து ஆடிக் கொண்டு இருக்­கி­றார்.

 தனது படத் தயா­ரிப்­பா­ள­ருக்கு ஏற்­பட்ட நஷ்­டத்­துக்கு ஈடு­கட்ட வழங்­கப்­பட்ட பதவி அது.

தனது அதி­கா­ரத்­துக்கு உட்­பட்ட மாநி­லத்­தில் உழ­வர்­க­ளுக்கு நன்மை செய்­தாரா முத­ல­மைச்­சர் விஜய் என்­றால் அது­வும் இல்லை.

 அனை­வ­ருக்­கும் பயிர்க்­க­டன் என்று சொல்லி விட்டு, அதி­லும் பல்­வேறு நிபந்­த­னை­களை வைத்து உழ­வர்­களை ஏமாற்­றி­னார் விஜய்.

இதன் தொடர்ச்­சி­யா­கத்­தான் மேட்­டூர் ‘சூட்­டிங்.’ மேட்­டூர் அணையை தண்­ணீ­ரைத் திறந்து வைக்க வருகை தரும் இவ­ருக்கு ஆன செலவு மட்­டும் ரூபாய் 5 கோடி­யைத் தொடு­கி­ற­தாம். 

இவ­ரைப் பாது­காக்­கி­றார்­க­ளாம்? யாரி­டம் இருந்து? அவ­ரது ரசி­கர்­க­ளி­டம் இருந்து. உல­கத்­தில் சொந்த ரசி­கரை ‘பேரி­கார்டு’ வைத்து தடுத்து தன்­னைப் பாது­காத்­துக் கொள்­ளும் அள­வுக்கு பயந்து போயி­ருக்­கி­றார் விஜய்.

தேவை­யான அளவு தண்­ணீரே இல்லை. பயிர் விளைச்­ச­லுக்கு இது போது­மா­ன­தும் இல்லை. 

அரை­குறை நிலை­யில் மேட்­டூர் அணை­யைத் திறந்து வைக்க கோடி­களை வாரி இறைக்க வேண்­டுமா? அர­சாங்­கக் காசில் தனது விளம்­பர வெறி­யைத் தீர்த்­துக் கொள்ள வேண்­டுமா?திரா­விட மாடல் ஆட்­சி­யில் ஒவ்­வொரு ஆண்­டும் மிகச் சரி­யாக ஜூன் மாதத்­தில் மேட்­டூர் அணை நீர் திறந்து வைக்­கப்­பட்­டது.

 2022 ஆம் ஆண்டு ஒரு மாதம் முன்­ன­தா­கவே திறந்து வைக்­கப்­பட்­டது. இதெல்­லாம் இன்­றைய முத­ல­மைச்­ச­ருக்­குத் தெரி­யுமா?

மேட்­டூர் அணை திறந்து வைக்­கப்­பட்­டால் 200 நாட்­கள், 180 நாட்­கள் என தண்­ணீர் பாயும். அது­தான் உழ­வர்­களை மகிழ்­வித்­தது. 

இன்று மூன்று மாத காலம் தாம­த­மா­கத் திறப்­ப­தால் மொத்­தமே 45 நாட்­கள் தான் தண்­ணீர் பாயும். இது போதாது, காணாது என்­கி­றார்­கள் உழ­வர்­கள். இது­வா­வது முத­ல­மைச்­ச­ருக்கு சொல்­லப்­பட்­டதா?

“டெல்டா பாச­னத்­துக்­காக செப்.1–ம் தேதி முதல் 45 நாட்­க­ளுக்கு மேட்­டூர் அணை திறக்­கப்­ப­டும்” என அரசு அறி­வித்­துள்­ளது விவ­சா­யி­கள் மத்­தி­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

ஏனென்­றால் மேட்­டூர் அணை­யில் தற்­போ­தைய நீர்­மட்­டம் 90 அடி­யா­கத் தான் உள்­ளது. இத­னால், அணை­யில் இருந்து 40 முதல் 50 நாட்­கள் வரை மட்­டுமே தண்­ணீர் திறக்க முடி­யும். இது சம்பா சாகு­ப­டிக்கு போது­மா­ன­தாக இருக்­காது.

எனவே, அணைக்கு நீர்­வ­ரத்­தும் 8 ஆயி­ரம் முதல் 12 ஆயி­ரம் கன­அடி வரை இருக்­கும் நிலை­யில், அணை­யின் நீர்­மட்­டம் 100 அடியை எட்­டிய பிறகோ அல்­லது செப்.10–ம் தேதிக்கு பிறகோ பாச­னத்­துக்­காக தண்­ணீர் திறந்­தால்­தான் ஒரு போக சம்பா சாகு­ப­டியை விவ­சா­யி­கள் முழு­மை­யாக செய்ய முடி­யும்” என்று விவ­சாய சங்­கங்­கள் சொல்­வதை முத­ல­மைச்­சர் விஜய்க்கு யாரா­வது சொன்­னார்­களா?

அல்­லது, ‘சூட்­டிங் தானே போய் வரட்­டும்’, ‘அவர் மேட்­டூர் அணை­யைத் திறக்­கப் போக­வில்லை, செல்­லம் பாட்­டிக்கு கூலிங்­கி­ளாஸ் கொடுக்­கத் தானே போகி­றார்’ என்று அதி­கா­ரி­கள் விட்­டு­விட்­டார்­களா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி