ஊசிக்குள் மென்பொருள்
நேபாள வெள்ளத்தில் சிக்கிய நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட 84 தமிழர்களின் நிலை என்ன? உறவினர்களின் டி.என்.ஏ. அறிக்கை 2 நாட்களில் நேபாளம் அனுப்பப்படும் என தகவல்.
🔹ஈரான் எண்ணெய் கப்பல் மீது அடுத்தடுத்து ஏவுணைகளை வீசி தாக்குதல்; அமெரிக்காவின் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்.
🔹சென்னையின் 2-வது விமான நிலையத்தை செய்யூர் அல்லது கும்மிடிப்பூண்டியில் அமைக்க திட்டம்; 2 இடங்களை தேர்வு செய்து விமான நிலைய ஆணையத்திற்கு விஜய் அரசு கடிதம்.
🔹ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுக்கும் தவெக; முடிவெடுக்க அவகாசம் உள்ளதாக தவெக அமைச்சர்கள் மழுப்பல்.
🔹பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில்அமித்ஷாவின் சென்னை வருகைக்கு பிறகே தவெக நிலைப்பாட்டில் மாற்றம் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு.
புற்றுநோயை mRNA தடுப்பூசி!
எப்படி செயல்படுகிறது
புற்றுநோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், நோயாளிக்கு ஏற்றபடி உருவாக்கப்படும் mRNA தடுப்பூசி தொழில்நுட்பம் மருத்துவ உலகில் கவனம் பெற்றுள்ளது.
‘Software in a Syringe’ என அழைக்கப்படும் இந்த அணுகுமுறையில், நோயாளியின் புற்றுநோய் செல்களில் இருக்கும் தனித்துவமான மரபணு மாற்றங்களை அடையாளம் கண்டு, அதற்கேற்ப தடுப்பூசி வடிவமைக்கப்படுகிறது.
கணினி மென்பொருள் எப்படி குறிப்பிட்ட பணியைச் செய்ய வழிமுறைகளை வழங்குகிறதோ, அதுபோல mRNA தடுப்பூசி உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு புற்றுநோய் செல்களை அடையாளம் காணும் தகவலை வழங்குகிறது.
இதில் வைரஸ் போன்ற உயிரியல் பொருளை செலுத்துவதற்குப் பதிலாக, செல்களுக்கு தேவையான மரபணு வழிமுறைகளை வழங்கும் mRNA பயன்படுத்தப்படுகிறது.
இந்த சிகிச்சை முறையில், நோயாளியின் புற்றுநோய் திசு மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு DNA/RNA வரிசைமுறை பரிசோதனை செய்யப்படுகிறது.
பின்னர் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புற்றுநோய் செல்களில் காணப்படும் குறிப்பிட்ட பிறழ்வுகள் கண்டறியப்படுகின்றன.
அந்தத் தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நோயாளிக்காக தனிப்பயனாக்கப்பட்ட mRNA தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
உடலுக்குள் செலுத்தப்படும் mRNA, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் T-செல்களுக்கு புற்றுநோய் செல்களை அடையாளம் காண உதவும் தகவலை வழங்குகிறது.
இதன் மூலம் மறைந்திருக்கும் புற்றுநோய் செல்களை கண்டுபிடித்து தாக்கும் திறனை நோய் எதிர்ப்பு மண்டலம் பெறுகிறது.
கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளைப் போல ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படாமல், புற்றுநோய் செல்களை குறிவைப்பதே இந்த அணுகுமுறையின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
மெலனோமா, கணையம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சில வகைகளுக்கான மருத்துவப் பரிசோதனைகளில் இந்த தொழில்நுட்பம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
BioNTech, Moderna உள்ளிட்ட நிறுவனங்களும் தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளன.
எனினும், இது இன்னும் மருத்துவப் பரிசோதனை கட்டத்திலேயே உள்ளது.
எனவே, தற்போது பொதுமக்கள் பயன்படுத்த இயலாது.
விமான நிலையம்: செய்யூர், கும்மிடிப்பூண்டி பரிசீலனை!
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சென்னையின் 2-வது விமான நிலையத்திற்காக செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணல்லூர் ஆகிய இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்கள் தொடர்பாக விமான நிலைய ஆணையத்திடம் முன் சாத்தியக்கூறு ஆய்வு நடத்த தமிழக அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
1,541 காவல் நிலையங்களில் புதிய டெக்னாலஜி!
தமிழகம் முழுவதும் 1,541 காவல் நிலையங்களில் CCTNS 2.0 மற்றும் டிஜிட்டல் கைரேகை சேகரிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குரல் மூலம் புகார்/எஃப்ஐஆர் பதிவு, நேரடி குற்றக் காட்சிப் பதிவு மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் வசதிகள் காவல்துறையின் விசாரணை முறையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் போராட்டம் 200 கடைகள் திறப்பு!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடங்கி 500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை பாதித்த பணியாளர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. சென்னையில் மட்டும் 200 டாஸ்மாக் கடைகள் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன; பணிக்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.
உடன்குடி அனல் மின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின் நிலையத்தின் முதல் அலகு 660 மெகாவாட் திறனுடன் வணிக ரீதியான மின் உற்பத்தியை தொடங்கியுள்ளது. ₹13,076 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், தமிழகத்தின் மொத்த நிறுவப்பட்ட அனல் மின் திறனை மேலும் அதிகரிக்கிறது.
கே.என்.நேரு தொடர்பான இடங்களில் சோதனை!
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். 2,538 பேர் நியமனம் தொடர்பான முறைகேடு புகாரை அடிப்படையாகக் கொண்டு சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த நடவடிக்கையை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் பழிவாங்கல் என விமர்சித்துள்ளார்.
செப்.9-ல் முக்கிய ஆலோசனை: ?
தவெக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ள நிலையில், கூட்டணியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு தடுப்பு : 1.2 லட்சம் வீடுகளில் ஆய்வு!
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 70 வார்டுகளில் சுமார் 700 கொசு ஒழிப்பு பணியாளர்கள் களமிறக்கப்பட்டு, ஒரு வாரத்தில் 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன; 4,500-க்கும் மேற்பட்ட கொசு உற்பத்தி இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்தியா 5 S-400 ஏவுகணை வாங்க திட்டம்!
ரஷ்யாவிடம் இருந்து மேலும் 5 S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னேறி வருகின்றன. இதற்கான செலவு மற்றும் கட்டுமானப் பொருட்கள் தொடர்பான BOQ முன்மொழிவை ரஷ்யா இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு.
அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை வார இறுதியில் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பணவீக்கம் மற்றும் எரிபொருள் செலவுகள் தொடர்பான அழுத்தம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.


