பொய்யிலே பிறந்து...

 📰 மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு . டெல்டா பாசனத்திற்காக 45 நாட்களுக்கு நீர் திறந்து விடப்படும் என தகவல்.📰 பாசன கால்வாய்களை தூர்வாராமல் தண்ணீர் திறப்பதா என விவசாயிகள் வேதனை. கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை.தவெக ஆட்சிக்கு ‘மைனஸ் 80 மார்க்’- நயினார் நாகேந்திரன் மதிப்பீடு📰 நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 939 ஆக அதிகரிப்பு. 3 ஆயிரத்து 925 பேரை காணவில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு.📰 ரூ.1000 கோடி FQL ஆன்லைன் முதலீட்டு மோசடியில் 4வது நாளாக ஆயிரக்கணக்கானோர் புகார்.சர்வதேச தொடர்பு இருப்பதால் வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்.📰 FQL ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சி. இளைஞர் சடலத்துடன் நத்தம்- மதுரை சாலையில் உறவினர்கள் மறியல்.📰 பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 44 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சட்டப்பேரவையில் அறிவிப்பு.📰 பிரதமர் வேட்பாளர் விஜய் என்பது நடப்பாண்டின் மிகப்பெரிய காமெடி என டிடிவி.தினகரன் விமர்சனம். இன்ஸ்டா ஆட்சிக்கு விரைவில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள் என்றும் திட்டவட்டம்.📰 தூத்துக்குடியில் தனியார் பங்களிப்புடன் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தேவையற்றது. மின் கட்டணத்தை உயர்த்தவே வழிவகுக்கும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு.📰 பயிக்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் இன்று முதல் போராட்டம். 35 விவசாய சங்கங்கள் இணைந்து சென்னையில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்.📰 சிந்து நதிநீர் ஒப்பந்த விவகாரத்தில் சர்வதேச தீர்ப்பாயத்தின் உத்தரவு நிராகரிப்பு.நாட்டின் இறையாண்மை முடிவுகளில் தலையிட அதிகாரம் இல்லையென இந்தியா திட்டவட்டம்.



பொய்யிலே பிறந்து... 

பொய்யிலே புரண்டு...!

'சொன்னது எதையும் செய்ய மாட்டேன்' என்று சபதம் எடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய். கொடுத்த வாக்குறுதிகளை அவர் மறந்து விட்டார்

. நினைவுக்கு வந்த ஒருசில வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றுகிறார். பொய்யிலே பிறந்த அவரது ஆட்சி பொய்யிலே புரண்டு கொண்டு இருக்கிறது.

'நான் வாக்குறுதி கொடுத்தால் அனைவருக்கும் கொடுப்பேன். தி.மு.க.மாதிரி அதில் அளவுகோல் வைத்து, அவர்களுக்கு கிடையாது, இவர்களுக்கு கிடைக்காது என்று சொல்ல மாட்டேன்' என்று வாய்க்கு வந்த படி உளறினார். தேர்தல் முடிந்து, ஆட்சிக்கு வந்த பிறகு அவர் செய்வது அனைத்தும் முழுமையானது அல்ல. அரைகுறையானது தான்.

* அனைவருக்கும் 6 சிலிண்டர் இலவசம் என்று சொன்னார் விஜய். 'ஒவ்வொரு குடும்பத்துக்கும்' என்று சொன்னார் விஜய். இப்போது 3 சிலிண்டர் தான் தரப்போவதாகச் சொல்கிறார்.

 அதுவும் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே சிலிண்டர் கிடைக்குமாம்.

 அதாவது மாதம் 20 ஆயிரம் ஊதியம் வாங்குகிறவர்களுக்கு மட்டும்தான் 3 சிலிண்டராம். 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டம் என்பது, 'அன்னபூரணி சூப்பர் மூன்று’ ஆகிவிட்டது.

* அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தேர்தலுக்கு முன்னதாகச் சொன்னார் விஜய். 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று முதலமைச்சர் ஆனதும் அறிவித்திருக்கிறார் விஜய்.

* அனைத்து விவசாயிகளுக்கும் அவர்கள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தேர்தலுக்கு முன்னதாகச் சொன்னார் விஜய். 

இப்போது அதிலும் அரைகுறையான அறிவிப்பு தான். 50 ஆயிரம் வரை தள்ளுபடி என்றார். அடுத்து 70 ஆயிரம் வரை தள்ளுபடி என்றார்.

* மகளிருக்கு தமிழ்நாடு முழுவதும் கட்டணமில்லாப் பயணம் என்று தேர்தலுக்கு முன்னதாகச் சொன்னார் விஜய். மாநகர, நகரப் பேருந்துகளில் மட்டுமே கட்டணமில்லாப் பயணம் என்று இப்போது அறிவித்துள்ளார்.

* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் தொகை 5 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயரும் என்று பரபரப்பாக அறிவித்தார். 

ஆண்டு வருமானம் 1.20 லட்சம் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதாவது குடும்பத்தின் மாத வருமானம் 10 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால்தான் இதில் பங்கெடுக்க முடியும்.

* பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் என்று அறிவித்தார் விஜய். 

இப்போது அரசாங்க மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தான் என்று அறிவித்துள்ளார் விஜய்.

பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

"தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். உலகத்துல மனுஷனா பிறக்கிறதே பெரிய விஷயம். அதுவும் நம்ம தாய்நாடான தமிழ்நாட்டுல பிறக்கிறது மிகப்பெரிய வரம். அப்படி நம்ம தமிழ்நாட்டுல பிறக்கிற குழந்தைகளை வரவேற்கிற திட்டம்தான் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம்.

 தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்கமோதிரம் வழங்கப்படும். கூடவே ஒரு பேபி வெல்கம் கிட்டும் வழங்கப்படும்.” என்றார். 

இப்போது அரசாங்க மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் என்று சொல்வது மோசடி அல்லவா?

தான் எவ்வளவு பெரிய பொய்யர் என்பதை தினந்தோறும் மெய்ப்பித்துக் கொண்டு வருகிறார் முதலமைச்சர் விஜய்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் மாதந்தோறும் 2,500 ரூபாய் தருவோம் என்றவர் அவர். பெண்கள் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கமும், பட்டுச்சேலையும் வழங்குவோம் என்றவர் அவர்.

 மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க பெற்றோருக்கு 15 ஆயிரம் தருவேன் என்றவர் அவர்.

மற்றவர்களை மாதிரி அடித்துவிட மாட்டோம். நிறைவேற்ற முடிந்த வாக்குறுதியைத்தான் சொல்வோம்' என்றார் விஜய். 

ஏன் அவரால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிறைவேற்ற முடியவில்லை. நிறைவேற்றுவதற்காக ஏதாவது முயற்சி எடுத்தாரா? இல்லை.

தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த நெல் குவிண்டாலுக்கு 3,500, கரும்பு டன்னுக்கு 4,500 விலை தருவேன் என்பது அறிவிக்கப்படவில்லை. தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையைத் தீர்ப்பேன் என்றார்.

 தினமும் அவர்கள் போராடி வருகிறார்கள். 'அண்ணனை எங்கே காணோம்' என்று கேட்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். 'அடுத்த பிறவியில்விவசாயியாக பிறப்பேன்' என்று சொன்னவர் இந்த பிறவியில் விவசாயிகளை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறார்.

முதலமைச்சர் விஜய்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவரால் வீட்டிலும் இருக்க முடியவில்லை. தலைமைச் செயலகத்திலும் இருக்க முடியவில்லை. சட்டசபையிலும் இருக்க முடியவில்லை.

 ஜெயிலுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குமாக அலைகிறார்?

 என்னதான் ஆய்வு பண்ணுகிறாரோ?மீண்டும். போர்? 

ஈரானிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.

 இதற்கிடையே, ஈரான் ஜோர்டான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

 திங்களன்று தங்கள் வான்வெளிக்குள் நுழைந்த 8 ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டான் ராணுவம் தெரிவித்துள்ளது.

லராக் தீவின் மீதான அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி. கூறியதை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது.

 "இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் (IRGC) வீரர்கள், ஹார்முஸ் ஜலசந்திக்குள் கடல் கண்ணிவெடிகள் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகளை ஏவுவதற்குத் தயாராவதைக் கண்டதாக, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) செய்தித் தொடர்பாளர் டிம் ஹாக்கின்ஸ் கூறினார்.அமெரிக்க ராணுவம் அப்பகுதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்த முக்கிய கடல் மார்க்கத்தின் வழியாக வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதிசெய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

 நீண்ட காலமாக தேக்கநிலையில் இருந்த அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இரு தரப்பும் தாக்குதல்களை தொடர்ந்தால், மீண்டும் இது ஒரு தீவிர போராக மாறும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் இழுபறியில் இருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்க, இரு தரப்பும் ஏதேனும் ஒரு சாக்கை வைத்து தாக்கதல்களையும் நடத்தி வருகின்றன.

இதனால், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது தொடங்கியுள்ள இந்த பரஸ்பர தாக்குதல், உலக நாடுகளிடையே மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி