தொடரும் நேபாளம்,..?

📰  மேட்டூர் அணையில் இருந்து 20000 கனஅடி நீர் திறந்தால் மட்டுமே கடைமடைக்கு வரும். கர்நாடகா வழங்க வேண்டிய நீரை கேட்டு பெற தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்.📰  நேபாளத்தில் ஒரே வீட்டில் இருந்து 23 உடல்கள் மீட்பு. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 50ஆக அதிகரிப்பு.📰  ஈரான் மீது அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதால் பதற்றம். அமெரிக்காவின் தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்படும் ஈரான் எச்சரிக்கை.📰  அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில் திடீர் திருப்பம். எம்எல்ஏவாக தொடர அனுமதிக்கக் கோரிய இசக்கி சுப்பையா மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்.📰 இலவச மும்முனை மின்சாரத்திற்காக தட்கல் முறையில் விண்ணப்பித்த 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்பு. விண்ணப்பித்தவர்களிடம் வசூலித்த 2 ஆயிரத்து 400 கோடி ரூபாயை என்ன செய்தீர்கள் என தவெக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி.📰  சட்டப்பேரவையில் பட்டாசு ஆலை உரிமம் தொடர்பாக காரசார விவதாம். ஆதாரம் இன்றி பேசியஅமைச்சர் கீர்த்தனா பேச்சுக்கு திமுக எதிர்ப்பு. 📰  சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை வெளியிட்ட விவகாரம். சுற்றறிக்கை பிறப்பிக்க டி.ஜி.பி-க்கு என்ன அதிகாரம் உள்ளது? என உயர்நீதிமன்றம் கேள்வி.📰  தமிழ் தேசியப் போராளி தமிழரசனின் நினைவேந்தலுக்கு சென்ற பழ.நெடுமாறன் கைது. போலீசார் எதற்கு இவ்வளவு கெடுபிடி செய்கிறார்கள்? என தவெக அரசுக்கு பழ.நெடுமாறன் கேள்வி.📰  பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் வெடித்த இரு பகுதி சிறுவர்களிடையே வெடித்த கோஷ்டி மோதல். 15-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு.📰  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்.📰  சென்னை தண்டையார்பேட்டையில் 4 ஆயிரம் ரூபாய் கட்டியவருக்கு 20 ஆயிரம் ரூபாய் வந்த மின்கட்டணம். திடீர் மின் கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.📰  சிவகாசி அருகே 90 சதவீதம் நிறைவடைந்த சாலை பணிகளை கிடப்பில் போட்ட தவெக அரசு. பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை.📰  கடல்மட்டம் உயர்வால் கொல்கத்தா, மும்பை நகரங்களுக்கு ஆபத்து. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழக்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை.📰  கோஷி ஆற்றில் கிடைக்கும் வழக்கத்திற்கு மாறான மீன்களை உண்ண வேண்டாம். பீகார் மக்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தல்.📰  ஜார்கண்ட்டில் சி.என்.ஜி. எரிபொருள் நிரப்பும்போது கோர விபத்து. எரிபொருள் நிரப்பும் குழாய் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு📰  சர்க்கரை வியாபாரிகளுக்கான கையிருப்பு அளவை குறைத்தது ஒன்றிய அரசு. விலையேற்றத்தை பயன்படுத்தி பதுக்கல் அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை.நேபாளத்தில் பேரழிவு!

நேபாள நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 788 ஆக உயர்ந்துள்ளது.

 320 வெளிநாட்டினர் உள்பட 2,502 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் உலகையே உலுக்கிய சோகமாக இது அமைந்துள்ளது.

திபெத் எல்லையையொட்டிய நேபாளப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26- ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவால் போடே கோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

 இதில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் அடித்துச் செல்லப் பட்டன. 8 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் காணாமல் போனார்கள்.

சீன, நேபாள எல்லையில் இமயமலையின் லாங் டாங் லிங் சிகரம் அமைந்துள்ளது. சுமார் 8,000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த சிகரத்தில் பனிப்பாறைகள் உடைந்தன. 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை உடைந்து ஏரியில் விழுந்தது.

 இதன் காரணமாக ஏரி உடைந்து திபெத் பகுதியின் போய்கு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுபோன்ற பெருவெள்ளம், பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம் என்றழைக்கப்படுகிறது.

திபெத்தின் போய்கு நதி நேபாளத்தில் போடே கோசி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திபெத்தில் இருந்து சீறிப் பாய்ந்த வெள்ளம் நேபாளத்தின் போடே கோசி, திரிசூலி, நாராயணி நதிகளில் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் நேபாளத்தின் பல மாவட்டங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கின. இரு மாவட்டங்களில் உள்ள 13 நீர் மின் நிலையங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

 சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நேபாள நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்ததால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.

வெள்ளத்தில் சிக்கிய 275 இந்தியர்கள் மற்றும் 128 இந்திய வம்சாவளியினரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், 108 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. திபெத்தில் 49 இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் மாயமாகி உள்ளனர்.

சிதாவன் மாவட்டத்தில் 264 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது.

 சித்வானில் மருத்துவமனைகளில் போதிய இடவசதி மற்றும் குளிர்சாதன வசதிகள் இல்லாததால், உடல்களைப் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதுடன், அவை தொடர்ந்து அழுகி வந்ததால் தொற்று அபாயம் அதிகரித்து வருகிறது.

உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு DNA மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு உடலுக்கும் தனித்துவமான அடையாள எண் மற்றும் சடலம் மீட்கப்பட்ட இடம் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன.

 உடல்கள் பின்னர் எளிதாகத் தோண்டி எடுக்கப்படும் வகையில் 1.5 மீட்டர் ஆழத்தில் அடக்கம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு உடலுக்கும் இடையே 40 செ.மீ. இடைவெளியும் விடப்படுகிறது.

‘நேபாள வெள்ளப் பேரழிவு.. உலகையே உலுக்கிய சோக நிகழ்வு.. இயற்கையின் எச்சரிக்கை’ - முரசொலி தலையங்கம்!

பேரிடர் நிகழ்ந்த போடே கோஷி ஆற்றில் மேலும் ஒரு ஏரி உருவாகி இருப்பதும், அது எந்த நேரத்திலும் உடைந்து மேலும் ஒரு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. போடேகோஷி ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்தது. எனவே பதற்றம் தொடர்கிறது.

தேசியப் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRA) வெளியிட்ட தகவலின்படி, நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய 933 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க அரசின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “இமயமலைப் பகுதியில் 4.4 ரிக்டர் அலகில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பனிமலைகள் உடைந்து நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கருதப்பட்டது.

 ஆனால் தீவிர ஆய்வில் அங்கு நிலநடுக்கம் ஏற்படவில்லை. பனிமலை உடைந்தே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக புவியியல் ஆராய்ச்சியாளர் விஷால் நாத் கூறும்போது, "இமயமலைச் சிகரத்தில் சுமார் அரை கி.மீ. தொலைவு அகலம் கொண்ட பனிமலை உடைந்து சுமார் 20 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் சுனாமி அலையாக சீறிப் பாய்ந்திருக்கிறது.

பல அடி உயரத்துக்கு போடே கோசி, திரிசூலி நதிகளில் அலைகள் எழுந்துள்ளன. இது இமய மலையில் உருவான சுனாமி ஆகும். பருவநிலை மாறுபாட்டால் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நேரிடுகின்றன” என்று தெரிவித்தார்.

நேபாள் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால், "சீனா, நேபாளம், இந்தியாமற்றும் பூடான் ஆகிய நாடுகள் சூழலியல் ரீதியாக

இணைக்கப்பட்டுள்ளன. இமயமலைச் சூழலியலைப் பாதுகாப்பதில்தான் நமது கூட்டு வாழ்வும் எதிர்காலமும் இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படும் பிராந்தியம் இமயமலைப் பகுதி என்பதால், நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

நில நடுக்கம் காரணமா, பனிப்பாறை வெடிப்பு காரணமா என்ற முடிவுக்கு இன்னும் உலக நாடுகள் வரவில்லை. எதுவாக இருப்பினும் இந்தப் பேரழிவுஉலகத்தையே உன்னிப்பாக கவனிக்கச் சொல்கிறது. 

குறிப்பாக இமயமலைப் பகுதி பாதுகாப்பு கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. ஆறு மாநிலங்களை உள்ளடக்கியது இமயமலைப் பகுதி. இந்தியாவின் காலநிலையை தீர்மானிப்பதில் இமயமலை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆறுகள் உற்பத்தி யாகும் பகுதியாகவும் இது அமைந்துள்ளது.

 எனவே இமயமலைப் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நேபாள பேரழிவு எச்சரிக்கிறது.

மத்திய ஆசியாவில் மங்கும்

இந்தியாவின் செல்வாக்கு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர் மற்றும் குடியரசு நாடுகளுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.


உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் கிர்கிஸ் குடியரசு ஜனாதிபதி சதிர் ஜபரோவ் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தப் பயணம், மத்திய ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் வீழ்ச்சியடைந்துவரும்செல்வாக்கை மீட்டெடுப்பதற்கான ஒரு பின்தங்கிய முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.


கடந்த 2015-ஆம் ஆண்டில் அனைத்து மத்திய ஆசியநாடுகளுக்கும் பயணம் மேற்கொண்ட உற்சாகம் தற்போது இல்லாமல் போனதற்கு, புவிசார் அரசியல் மாற்றங்களும் ஒன்றிய பாஜகஅரசின் திறனற்ற வெளியுறவுக் கொள்கைகளுமே முக்கியக் காரணமாகும்.


​மத்திய ஆசியாவில் சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ (BRI) திட்டம் மிகப்பெரிய அளவில்காலூன்றி செல்வாக்கு செலுத்தி வருகிறது. 2025-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி சீனா-மத்திய ஆசியாவர்த்தகம் 106 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ள நிலையில், இந்தியாவுடனான வர்த்தகம் வெறும் 2பில்லியன்டாலர்களைத் தாண்டி மிக மந்தமாகவே தொடர்கிறது.


போக்குவரத்துச் சவால்கள் மற்றும் நேரடித்தொடர்பின்மை காரணமாக, பிராந்தியத்தின் பொருளாதார வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் இந்தியாபின்தங்கியுள்ளது.


அறிவிக்கப்பட்ட இந்தியா-மத்திய ஆசியா உச்சி மாநாடு 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதே இந்தியாவின் தேக்கத்திற்குச் சான்றாகும்.

​ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் அவையின் 2028-2029 காலத்திற்கான சுழற்சி முறை இடத்திற்கு மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானும் இந்தியாவும் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.


சமீபகால ஐ.நா பொதுச்சபை வாக்கெடுப்புகளில் ஜெர்மனி மற்றும்பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தோல்வியடைந்ததைப்போல, ராஜ தந்திரப் பலவீனங்களால் இந்தியாவும் பின்னடைவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தஜிகிஸ்தானின் போட்டியை விலக்கிக்கொள்ளச் செய்வதற்காகஅந்நாட்டு ஜனாதிபதி இமோமலி ரஹ்மானுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


​மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தக மற்றும் ராணுவப் பாதுகாப்புத் தொடர்புகளை வலுப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் மோடிஅரசு, பிராந்தியத்தின் மாறும் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப துரிதமாகச் செயல்படத் தவறிவிட்டது.


கார்ப்பரேட் சார்புப் பொருளாதாரக் கொள்கைகளிலும் உள்நாட்டு அரசியல் பிரச்சாரங்களிலும் மட்டுமேகவனம் செலுத்தும் அரசு,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி