மோ(ச)டி வித்தை
📰 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப் 17 ராக்கெட். 18வது நிமிடத்தில் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்.
📰 கேள்விகளுக்கு திங்கள்கிழமை பதில் அளிப்பதாக கூறிவிட்டு அவையில் இருந்து வெளியே சென்ற முதலமைச்சர் விஜய். சட்டப்பேரவையில் இருந்து ஓடியது யார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாக உதயநிதி பதிலடி.
📰 டிவி சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்பது போல் அமைச்சர்கள் பேரவையில் பதில். முதலமைச்சர் கவனிக்கும் துறைகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பது பற்றி உதயநிதி விமர்சனம்.
📰 தவெக ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. தனது தோட்டத்திலேயே மின் வயர்கள் திருடப்பட்டதாக புகார்.
📰 காவல்துறை மானியக் கோரிக்கையில், எஸ்.ஐ. தேர்வு குறித்து தவறான தகவல். எழுத்துத் தேர்வு முடியாதநிலையில், உடல் தகுதித் தேர்வு முடிந்ததாக அறிவிப்பு.
📰 சென்னை மற்றும் புறநகரில் காற்றுடன் பெய்த கனமழை. மதுரையில் கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள்.
📰 தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்திலும் வாட்டி வதைக்கும் வெயில். அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு.
📰 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 5 மாத குழந்தை உயிரிழப்பு. ஆம்புலன்ஸில் செயற்கை சுவாசம் அளிக்காததே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு.
📰 கடும் வறட்சி காரணமாக தருமபுரியில் கரும்பு விளைச்சல் பாதிப்பு. உருண்டை வெல்லத்தை அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை.
📰 மும்பையில் சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது மோதிய மின்சார கார். பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் விபரீதம்.
📰 நேபாள பெருவௌ்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1252ஆக உயர்வு. வெள்ளம் ஏற்பட்டு 9 நாட்கள் ஆகிவிட்டதால் காணாமல் போன 4216 பேரை மீட்பதில் சிக்கல்.
📰 ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. 40 எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்புடன் கடந்து சென்றதாக ட்ரம்ப் தகவல்.தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் வாக்குறுதி முரண்பாடுகளைக் கடுமையாக சாடினார்.
மக்கள் சார்பாக ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்கவே எதிர்க்கட்சியாகத் தங்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், பழிபோடும் தந்திரங்களில் ஈடுபடாமல் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
2024-ம் ஆண்டை விட 2025-ல் வழிப்பறி, திருட்டு, கொலை, கலவரம், சாதியப் பாகுபாடு உள்ளிட்ட குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதன்மூலம் கடந்த திராவிட மாடல் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டதை ஆளும் அரசே தனது கொள்கைக் குறிப்பில் பெருமையுடன் ஒப்புக்கொண்டிருக்கிறது எனக் கூறி நன்றி தெரிவித்தார்.
ஆட்சிப் பொறுப்பேற்று 116 நாட்கள் ஆன போதிலும், புதிய நலத்திட்டங்களை உருவாக்குவதை விட முந்தைய அரசு கொண்டுவந்த திட்டங்களின் பெயர்களை மாற்றுவதும்,
பரந்தூர் விமான நிலையம், மாமல்லன் கால்வாய் போன்ற மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்வதுமே அரசின் சாதனையாக உள்ளது.
முழு விவசாயக் கடன் தள்ளுபடி, மகளிருக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், அனைத்துப் பேருந்துகளிலும் இலவசப் பயணம் எனத் தேர்தல் களத்தில் அள்ளிவீசிய வாக்குறுதிகளைப் பாதியளவே அறிவித்துவிட்டு நாடகம் ஆடுகின்றனர்.
இது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அல்ல; பொதுமக்களுக்கு காது குத்தும் திட்டம் என்று கடுமையாக விமர்சித்தார்.
அன்று எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘எங்களுக்கு சாரி வேண்டாம், நீதிதான் வேண்டும்’ என ஆவேசமாகப் பேசிய இன்றைய முதலமைச்சர், தனது 116 நாள் ஆட்சியில் அரங்கேறியுள்ள 8 காவல் மரணங்களுக்கு இதுவரை நீதியும் பெற்றுத் தரவில்லை, ஒரு ‘சாரி’ கூட சொல்லவில்லை
. எம்ஜிஆர் நகர் வெங்கடேசன், கதிரேசன், அருணாச்சலம், பூசாரி பரமசிவம் உள்ளிட்டோர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்; பலர் அவமானத்திலும் சிறைக் காவலிலும் இறந்துபோயுள்ளனர்.
முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் உள்துறையும், உளவுத்துறையும் ஒட்டுமொத்தமாகச் செயலிழந்துவிட்டன என குற்றம்சாட்டினார்.
காவல் துறையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டிய அவர், “சமூகத்தில் குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல் துறை, அரசை ஜனநாயக ரீதியாக விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர், ஜென்சி இளைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறது.
ஆனால் முதலமைச்சரை வெளிப்படையாகத் தாக்கிப் பேசும் பாஜக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
எங்களுக்கு வந்தால் ரத்தம், பாஜகவுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
அவர்கள் அடித்தாலும் வெளியே சொல்லக் கூடாது என்ற ஆளும் கட்சியின் இந்த விசித்திரமான அரசியல் உத்தியை இதுவரை யாரும் பார்த்ததில்லை” என்று ஆவேசமாக பேசினார்.
மோ(ச)டி வித்தை
ஒன்றிய பாஜக அரசு “இந்தியா 7.8சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சியுடன் உலகிலேயே மிகவேகமாக வளரும் பொருளாதாரம்” என்று முரசு கொட்டுகிறது.
ஆனால், மக்களின் நுகர்வு வளர்ச்சி வெறும்3.9 சதவிகிதத்திற்குள்ளே இருப்பது எப்படி?
உண்மையான ஜிடிபி என்பது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பும், மக்களின் ஒட்டுமொத்த செலவினம், தனியார் மற்றும்அரசின் ஒட்டு மொத்த முதலீட்டுச் செலவினம் உட்பட ஒட்டு மொத்த செலவின் மதிப்பும் சமமாகஇருக்க வேண்டும்.
ஆனால் இங்கு செலவின வழி ஜிடிபி தொடர்ந்து சரிந்து கொண்டே போகிறது. மக்கள் கையில் பணமில்லை; பொருட்களுக்கான நுகர்வு குறைந்து கொண்டே வருகிறது.
செலவழிக்கும் சக்தி குறையும் போது ஜிடிபி மட்டும் எப்படி 7.8சதவிகிதம் உயரும்? இந்த முரண்பாட்டைச் சரிசெய்ய ஆட்சியாளர்கள் ‘புள்ளிவிவரச் சரிசெய்தல்’ மற்றும் விற்காத ‘சரக்கு இருப்புகளை’ நேர்மறையாகக் கணக்கில் சேர்த்து செயற்கையாக வளர்ச்சி பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
ஜிஎஸ்டி வசூல் மாதம் ரூ.2 லட்சம் கோடியைத் தொட்டு சாதனை படைத்துவிட்டது என்று கொண்டாடுகிறார்கள்.
ஆனால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டிவசூலில் உள்நாட்டு உற்பத்தி சார்ந்த வரியை விட, வெளிநாட்டு இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வரியே 29சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.சொந்த நாட்டில் உற்பத்தியை அதிகரிக்காமல், இறக்குமதியைச் சார்ந்து வாழும் ஒரு பொருளாதாரம் எப்படி வளர்ச்சியாக இருக்கும்? அது வீழ்ச்சியின் வெளிப்பாடே.
ஒருபக்கம் நாடு வளர்கிறது என்று சொல்லிக்கொண்டே, மறுபக்கம் பிரதமர் “சுயசார்பு இந்தியா” என்று ஏன் பேச வேண்டும்?
நிஜமாகவே உற்பத்தித் துறை வளர்ந்திருந்தால் சுயசார்பைப் பற்றிய பயம் ஏன் வரவேண்டும்?
அதேபோல, 7.8 சதவிகிதம் ஜிடிபி வளரும் ஒரு நாட்டில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஏன் தொடர்ச்சியாக வீழ்ச்சியடையவேண்டும்?
ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளால் இன்று பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே வளர்கின்றன. இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளைத் தருகிறசிறு-குறு தொழில்களை அழித்து, அவற்றின் சந்தையைப் பெரு நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன.
சிறு தொழில்களின் அழிவைப் பெரு நிறுவனங்களின் “வளர்ச்சி” என்று அரசு தவறாகக் கணக்கிடுகிறது. இது உண்மையான பொருளாதார வளர்ச்சி அல்ல; சிறிய மீன்களைப் பெரிய மீன் விழுங்கும் ஆபத்தான போக்கு.
மக்களைப் பொறுத்தவரை ஜிடிபி என்பது காகிதத்தில் அச்சிடப்படும் எண்கள் அல்ல;
அவர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் வாங்கும் சக்தியின் வளர்ச்சி என்பதே. புள்ளிவிபரங்களை மாற்றி மக்களைக் கொஞ்ச காலம் ஏமாற்றலாம்.
ஆனால், இறக்குமதியை நம்பி,முறைசாராத் துறையை அழித்து, கடனில் கட்டப்படும் இந்த போலி ஜிடிபி கோபுரத்தை நீண்டகாலத்திற்கு உண்மை என்று நம்ப வைக்க முடியாது.



