இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா ?

🔹 டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம். தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வாய்ப்பு.🔹 காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை. சர்க்காரியா ஆணையம், அமலாக்கத்துறை அறிக்கையில் திமுக மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டு ஆவேச பேச்சு🔹 முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் தர்ணா. பேச அனுமதிப்பதாகக் கூறி சபாநாயகர் திடீரென முடிவை மாற்றிக் கொண்டதால் சட்டப்பேரவையில் இருந்து திமுக வௌிநடப்பு.🔹 சினிமா சூட்டிங்கிற்கு தேவையானதை தயாரித்து ரீல்ஸுக்காக மட்டுமே முதலமைச்சர் பேசியதாக உதயநிதி விமர்சனம். சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பழி சுமத்தும் நோக்கத்தில் மட்டுமே பேசியதாக பதிலடி.🔹 திமுக பேச வாய்ப்பு தருவதாக கூறிய இரண்டே நிமிடத்தில் முடிவை மாற்றிய சபாநாயகர். துண்டு சீட்டு வந்தவுடன் முடிவை மாற்றிக்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றச்சாட்டு. 🔹 விஜய் வெறும் கூச்சல் பேச்சு முறையால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம். சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றும் வீரபாண்டியன் வலியுறுத்தல்.🔹 முதலமைச்சர் விஜயின் பதிலுரையில் எந்த பதிலும் இல்லை என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம். சட்டமன்றத்தை தனிமனித தாக்குதல்களுக்கான இடமாக மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயல் என்றும் பெ.சண்முகம் கண்டனம்.🔹 முதலமைச்சர் விஜயை பவர் சென்டர்கள் தான் இயக்குவதாக புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு. முதலமைச்சர் என்ற எண்ணமும், பொறுப்பும் விஜய்க்கு வந்ததாக தெரியவில்லை என காட்டம்🔹 சென்னையில் உள்ள அமைச்சர் புஸ்ஸிஆனந்த் இல்லத்தை முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள். நள்ளிரவில் மழையையும் பொருட்படுத்தாமல் போராடியவர்களை அப்புறப்படுத்திய போலீசார்.🔹 மேலூர் ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் தேடப்பட்ட தம்பதி நீதிமன்றத்தில் சரண். மோசடி தம்பதியிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.

🔹 சீர்காழி அருகே கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. உரிய இழப்பீடு வழங்கி அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.
🔹 கும்பகோணம் அருகே பிரியாணி சாப்பிட்ட எட்டு குழந்தைகள் உள்ளிட்ட 10 பேருக்கு வாந்தி,மயக்கம். கடை திறந்த முதல்நாளே வாடிக்கையாளர்கள் உடல்நிலை பாதித்ததால் அதிர்ச்சி.

🔹 ரஷ்யாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு. மலையேற்றத்தின் போது மாயமான 6 பேரை தேடும் பணி தீவிரம்.

இதற்க்குத்தான் இவ்வளவு பில்டப்பா ?


50 ஆண்டு பழைய மாவை அரைத்த விஜய்!

 சட்டசபையில் கடந்த வாரம், "என் மேஜையில் எதிர்க்கட்சி தொடர்பான மூன்று முக்கியக் கோப்புகள் இருக்கின்றன, அவற்றை விரைவில் திறப்பேன்" என்று பேசி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கினார் விஜய்.


ஆளுங்கட்சி தரப்பிலிருந்து ஏதோ அதிரடியான புதிய ஆவணங்களோ அல்லது மாநில லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய புலனாய்வு முடிவுகளோ வெளிவரப் போகின்றன என்றே அரசியல் பார்வையாளர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்தனர்.


ஆனால், சட்டசபையில் அவர் பேசிய விவரங்களைப் பார்க்கும்போது, அதில் புதிதாக எந்தத் தகவலும் இடம்பெறவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

அரை நூற்றாண்டுக்கு முந்தைய புஸ்வாண சர்காரியா கமிஷன் அறிக்கையையும், ஏற்கனவே ஊடகங்களில் வெளியான ஒன்றிய அமலாக்கத்துறையின் பழைய குறிப்புகளையுமே அவர் வாசித்துக் காட்டியுள்ளார்.


பொதுவாக ஓர் அரசு வசம் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகள், முந்தைய ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஆவணங்களைத் திரட்டி, முதல்வரின் பார்வைக்கு வைப்பது வழக்கம்.

அ@ஃஅஅஅ@ஃ@@முதல்வர் விஜய் "என் டேபிளில் 3 ஃபைல்கள் உள்ளன" எனக் குறிப்பிட்டபோது, அத்தகைய புதிய கோப்புகள் குறித்துதான் பேசப்போகிறார் என்ற பிம்பம் உருவானது.

ஆனால், அவையில் அவர் குறிப்பிட்ட உதாரணங்கள் இரண்டுமே பல ஆண்டுகளாகப் பொதுவெளியில் புழக்கத்தில் இருக்கும் பழைய ஆவணங்கள்தான்:


1. 50 ஆண்டு கால சர்காரியா அறிக்கை: 1970-களில் வீராணம் குடிநீர் திட்டம் தொடர்பாக சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திடம் இரண்டரை சதவீத கமிஷன் பெறப்பட்டதாகக் கூறப்படும் விவரம் 1976-ல் அமைக்கப்பட்ட சர்காரியா கமிஷன் அறிக்கையில் இருப்பது. இது பல பத்தாண்டுகளாகத் தமிழக அரசியல் மேடைகளில் எதிரொலிக்கும் ஐம்பதாண்டு உப்பு,சப்பற்றம்ப் பழைய வரலாறு.


"இதுவும் காவல்துறை மானிய பேச்சுதான்”


2. அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகள்: ஒப்பந்தங்களில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குறிப்பிட்டதாக அவர் சுட்டிக்காட்டியதும், ஏற்கனவே ஒன்றிய புலனாய்வு அமைப்புகளால் நீதிமன்றங்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்த பழைய விவரங்களின் தொகுப்புதான்.இதிலும் எந்த ஆதாரமும் இல்லை .


ஒரு புதிய அரசு பொறுப்பேற்று ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய தற்போதைய விசாரணைகள், புதிய வழக்கு ஆவணங்கள் அல்லது புதிய ஆதாரங்கள்தான் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படும்.


மாறாக, ஒன்றிய அரசால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சர்காரியா கமிஷன் குறிப்புகளையும், அமலாக்கத்துறையின் தோல்வியடைந்த ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளையும் மட்டுமே சட்டப்பேரவையில் மேற்கோள் காட்டியிருப்பது, எதிர்க்கட்சிகள் மீதான வழக்கமான அரசியல் விவாதத்தைத் தாண்டி எந்தவொரு புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தவில்லை.

அந்த மூன்று கோப்புகளைப் பிரிப்பதற்கு முன்னால் ஒரு சாம்பிள் பார்ப்போம்" என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டிருந்தாலும், அந்த மாதிரியே புதிய விவரங்கள் இல்லாத பழைய அறிக்கைகளாக அமைந்தது அரசியல் பார்வையாளர்களை யோசிக்க வைத்துள்ளது.


உண்மையில் ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் இல்லையா?

அல்லது பழைய விவகாரங்களையே மீண்டும் சட்டசபையில் பேசி விவாதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க ஆளுங்கட்சி முயற்சிக்கிறதா ?

அல்லது எல்லாமே அரசியல் பொய்யா

அப்படி அவரிடம் ஒரு ரிப்போர்ட்டே இல்லையா? என்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன.


சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரத்தில், பழைய அவதூறுகளைத் தூசிதட்டி எடுப்பது, இன்றைய தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி எனவும்,

 எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி அவர்கள் எங்கே அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில், 

அவருடன் நேரடியான விவாதத்தையே தவிர்க்கும் அளவுக்கு ஜனநாயகம் பாதாளத்திற்குப் போய் விட்டது என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

ஊழல்  பற்றி பாடம்?


ஊழலைப்பற்றிப் பாடம் எடுக்கும் உத்தமரே! 


ஊரெங்கும் நடக்கும் கொலைகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன தொடர்பு? அமலாக்கத்துறையில் அதிக வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது யார்?


 அரசியல் காரணமாக அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களையும் முதலமைச்சர் அடுத்த முறை வாசிப்பாரா? உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் என் தந்தை மறைந்த திரு.முரசொலி மாறன். 

வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர். உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சும் ஒரு முதலமைச்சர் மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்களைப் பற்றிப் பேசலாமா? 


இன்று அவரைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சர் அவர்கள், அதே முரசொலி மாறனின் மகனான எனது அழைப்பை ஏற்று, 


ஜனவரி 2006-இல், அப்போதைய பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, “பொங்கல் சிறப்பு தபால் தலை” வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த சமயத்தில், திரு.விஜய் அவர்கள் மீது வருமானவரி வழக்கு நிலுவையில் உள்ளதால், அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் திரு.விஜய் அவர்களை மேடையில் ஏற்றக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் எதிர்ப்பினை கடுமையாக தெரிவித்தப்போது,


 உடனடியாக அதற்கு ஆட்சேபனையைத் தெரிவித்து, திரு.விஜய் அவர்களை மேடையில் நிற்க வைத்து, தபால் தலையை பெறுவதற்கான உரிய மரியாதையை வாதாடி அவருக்கு பெற்றுத் தந்தது முரசொலி மாறன் மகன்தானே? 


 அந்த தபால் தலையை பெற்றுக் கொண்டு சிரிக்கும்போது, இப்போதைய ஞானோதயம் இல்லாமல் ஞானசூனியமாக இருந்தாரா? முதலில், ஊழலைப் பற்றியோ மிசாவைப் பற்றியோ பேசும் அருகதை இந்த முதலமைச்சருக்கு உள்ளதா?


 போர்பந்தரில் பிறந்தவரின் வாரிசாக தன்னைத் தானே யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது… இந்த வீராதி வீரர் கொடநாட்டில் தனது திரைப்படத்திற்காக, ஒருநாள் முழுவதும் அங்கேயே காத்திருந்து, வீடியோவில் கைகட்டி வாய்பொத்தி முனகியதையும் மறந்துவிடலாகாது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இப்படித்தான் 


ஆகஸ்ட் 2026-இல் நடந்த கொலைகளுக்கு எமெர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கையில் பதில் தேட வேண்டியிருக்கும்! 


 தேடி முடிக்கும் முன் அடுத்த கொலைகள் நடந்தேறிச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!

                                            -தயாநிதி மாறன். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி