கண்ணியம் மறந்ததேன்?

 🔹மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் இ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் எஸ்.சுகன்யா போட்டி என திமுக தலைமை அறிவிப்பு


🔹இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, ஆதரவு திரட்டுவதில் தீவிரம். பாஜகவை அடுத்து ஏ.சி.சண்முகம், பாரிவேந்தரை சந்தித்து ஆதரவு கோரிய அதிமுக நிர்வாகிகள்.


🔹தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று லண்டன் புறப்படுகிறார் முதலமைச்சர் விஜய். 6 நாட்கள் பயணத்தில் முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.


🔹சென்னை பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமைச் செயலகம். ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கான அரசாணை வெளியீடு.


🔹அமெரிக்காவில் இடைத்தேர்தலுக்கு பிறகு ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் என டிரம்ப் கணிப்பு. தேர்தல் மீது தாக்கத்தை ஏற்படுத்தவே ஈரான் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அறிவிப்பு.

கண்ணியம் மறந்ததேன்?

அப்போது திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்கள் குறித்து பேசிய விஜய், “எதற்கெடுத்தாலும் திமுகவினர் மிசா , மிசா என்கிறார்கள். மிசாவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்” எனக் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. 

இதன்போது விஜய் தனது தாடையில் கையை வைத்து செய்த சைகை அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜய்யின் இந்த சைகை, மிசா காலத்தில் சிறையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்ட சம்பவத்தை கேலி செய்யும் வகையில் இருந்தது. 

இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகமும் விமர்சனம் செய்திருந்தார். 

முதல்வர் ஒருவர் சட்டப்பேரவையில் இவ்வாறு சைகை செய்வது கண்ணியமான செயல் அல்ல என அவர் கருத்து தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில் பேசிய ஸ்டாலின், விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் தனது வீட்டுக்கு தன்னை சந்திக்க வந்ததை நினைவுகூர்ந்தார். தேர்தல் பிரசாரத்தின்போது தன்னை கடுமையாக விமர்சித்ததற்காக அப்போது விஜய் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கு தான் “பரவாயில்லை பிரதர். 

ஆனால் நீங்கள் இப்போது ஒரு மாநிலத்தின் முதல்வர். இனிமேல் யாரைப் பற்றி பேசும்போதும் கொஞ்சம் கண்ணியத்துடன் பேசுங்கள்” என்று கூறியதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

அந்த அறிவுரையை விஜய் மறந்துவிட்டாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“எனக்கு சிறை வரலாறு இருப்பதால் பேசுகிறேன்”

மேலும், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பேச்சால் தமிழக மக்களிடமும் திமுகவினரிடமும் கோபமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறினார். 

மிசா காலத்தில் தான் சிறையில் இருந்த வரலாறு இருப்பதால் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது நடைபெற்ற கொடுமைகளை நினைவுகூர்ந்த ஸ்டாலின், எமர்ஜென்சிக்கு எதிராக அப்போதைய முதல்வர் கருணாநிதி குரல் கொடுத்ததை தொடர்ந்து, தன்னை கைது செய்ய காவல்துறையினர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்ததாக தெரிவித்தார்.

மிசா கால சிறை அனுபவங்களை விவரித்த ஸ்டாலின், மிகவும் மோசமான சூழலில் தான் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், காவல்துறையினரின் தாக்குதலுக்கு தான் உள்ளானதாகவும் கூறினார்.

தன்னை பாதுகாக்கும் வகையில் அடிபட்ட தனது அண்ணன் சிட்டிபாபு உயிரிழந்ததாகவும் ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்தார்.மேலும், “சட்டப்பேரவையில் நீங்கள் தாடையில் கையை வைத்து செய்த சைகை உண்மைதான். 

மிசாவில் சிறை வைக்கப்பட்டபோதுதான் எனக்கு தாடை உடைந்து இப்படி ஆனது” என விஜய்யை நேரடியாக சாடினார். 

யார் தன்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது எனக் கூறிய ஸ்டாலின், சட்டப்பேரவையில் நூலகம் இருப்பதாக விஜய் கூறியதை சுட்டிக்காட்டி, அங்கு சென்று மிசா வரலாற்றை,மட்டுமல்ல அரசியலையும்,சட்டமன்றத்தில் கண்ணியமாக நடந்து கொள்வது பற்றியும படித்து தெரிந்துகொள்ளுமாறும்,அதன்படி அரசியல் செய்யவும் அறிவுறுத்தினார்.



அமைச்சர் ஸ்ரீநாத் தமிழக அமைச்சரவையில் இருந்து விடுவிப்பு? 


விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என்று கூறப்படும் நிலையில், நிதித்துறை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்கள் மாற்றம் செய்யப்படவுள்ளதாக  தெரிகிறது.

 இந்த சூழலில் தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத் குறித்து முக்கிய முடிவெடுக்க முதலமைச்சர் விஜய் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. முதல்முறை கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்யப்பட்டது. தவெக, திமுக இடையில் அனல் பறக்கும் விவாதங்களை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் பார்த்தனர். இந்த கூட்டத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு பாராட்டு தெரிவிக்கவுள்ள முதலமைச்சர் விஜய், வரும் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதில் தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

லண்டன் பயணம் முடிந்ததும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நிதித்துறை அமைச்சர் மரியவில்சனுக்கு பள்ளிக் கல்வித்துறையும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு நிதித்துறையும் வழங்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படவுள்ளன.

அதுமட்டுமின்றி சிலரை அமைச்சரவையில் இருந்து நீக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த லிஸ்டில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பெயர் அடிபடுகிறது. ஸ்ரீநாத்தை பொறுத்தவரை விஜய்யின் நீண்ட கால நண்பர். பல்வேறு திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். விஜய் தனது நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். அதில் ஸ்ரீநாத்தும் இடம்பெற்றிருப்பார்.

இதுபோன்ற குழப்பங்களுக்கு மத்தியில் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் வந்தது. வேட்பாளர் தேர்வில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அஜிதா விஷயத்தை கருத்தில் கொண்டு நம்பிக்கைக்குரிய ஆட்களை விஜய் தேடினார். அப்போது தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத் பெயரை டிக் அடித்து வேட்பாளர் பட்டியலில் சேர்த்து அம்மாவட்டத்தை சேர்ந்த தவெகவினருக்கு ஆச்சரியம் அளித்தார்.

இதையடுத்து மீன்வளத்துறையை ஒதுக்கி அமைச்சரவையில் சேர்த்து ஸ்ரீநாத்திற்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தினார். சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சை முதலமைச்சர் விஜய் பெரிதும் ரசித்து பார்த்தார். ஆனால் அமைச்சராக ஸ்ரீநாத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று உளவுத்துறை மூலம் நோட் கிடைத்துள்ளது.

துறை சார்ந்த விஷயங்களை ஆர்வத்துடன் கற்பதில் பின்னடைவை சந்தித்து வருகிறாராம். அதிகாரிகள் உடனும் பெரிதும் இணக்கம் இல்லையாம். மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சிப்பதிலும் பூஜ்யம்தானாம்.ஆனால் அதற்குள் ரூ150 கோடிகளுக்கு மேல் சம்பாதித்து விட்டாராம்,

இதுதவிர மேலும் சில செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சருக்கு நோட் சென்றிருக்கிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தவெக அமைச்சரவையில் இருந்து விலக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

MISA: மிசா!

ஒரே பானையில் 10 கைதிகளும் சிறுநீர் கழிக்கணும்!

துர்நாற்றம் வீசும்!

-ஸ்டாலின் உருக்கம்

 மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது தனக்கு நடந்த கொடுமைகளை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் உருக்கமாக விவரித்துள்ளார்.


வீடியோவில் ஸ்டாலின் கூறியதாவது: என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்.. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களு்கும் நம் உடன்பிறந்தவர்களுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன்.

அதுவும் இந்த சர்ச்சையில் என்னுடைய சிறை வரலாறும் இருக்கிறதால், அதை பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தம்பி விஜய் நீங்க சொல்றது உண்மை தான். பொய் எல்லாம் அல்ல.. எமெர்ஜென்சில் காலத்தில் அதை எதிர்த்து கருணாநிதி மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மிசா சட்டத்தை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து அப்போது இருந்த ஒன்றிய அரசு 30.01.1976 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை கலைத்தார்கள்.

ஆட்சியை கலைத்த அடுத்த நொடி மிசா சட்டத்தில் என்னை கைது செய்வதற்காக கோபாலபுரம் வீட்டிற்கு போலீஸார் சென்றனர்.


அன்னைக்கு நான் வீட்டில் இல்லை. "பையன் பிரசாரத்திற்கு போய் இருக்கான். நாளை வந்துவிடுவான். வந்ததும் நானே போன் பண்ட்ரேன்.. வந்து அரெஸ்ட் பண்ணிக்கோங்க" என கருணாநிதி போலீஸிடம் சொன்னார்.


அடுத்த நாள் போலீசிடம் என்ன கைது செய்ய சொல்லிவிட்டார்.


சிறையில் எனக்கு பல கொடுமைகள் நடந்துச்சு.. என்னை கொண்டு போய் அடைத்ததே தொழு நோயாளிகள் இருக்கும் இடத்தில் தான்.


10 பேரை ஒரு சின்ன அறைக்குள் அடைத்து வைத்தார். அந்த அறைக்குள் ஒரு பானை தான் இருக்கும். அதில் தான் அனைவரும் சிறுநீர் கழிக்க வேண்டும்.

சொன்னதை மறந்துட்டீங்களா விஜய்.. மிசா கைதின் போது என்ன நடந்துச்சு தெரியுமா? வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

ரொம்ப துர்நாற்றமாக இருக்கும். இந்த அறையில்தான் நாங்கள் தூங்க வேண்டும். நைட்டில் தூங்க விடாமல் போலீஸ் லத்தியால் அடிப்பாங்க..


பூட்ஸ் காலால் மிதிப்பாங்க.. இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனை கைதியை வைத்து கொடூரமாக அடிப்பாங்க.


அவங்க அடித்ததில் என் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு ஜெயிலிலேயே இறந்து போனார்.


அவங்க அடிச்சதில் என்னுடைய தாடை எலும்பு உடைந்தது.

நீங்கள் கூட இப்படி கை வைத்து தாடையை காண்பித்தீர்கள் அல்லவா?

அது சரிதான்.


நான் அடி வாங்கிய தழும்புகள் இன்றைக்கும் எனக்கு இருக்கிறது. நான் இல்லை என சொல்லவில்லை.


யார் என்னை கொச்சைப்படுத்தினாலும், வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்திற்கும் அப்படியேதான் இருக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, முக்கியமாக தமிழர்களுக்காக போராடும் நிறைய பேருக்கு இந்த மாதிரி அடக்குமுறை நடந்துள்ளது.


போராளிகள் எல்லாம் இதை தாண்டிதான் வந்துள்ளோம்.


இவ்வாறு ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி