கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம்

 
புதிய தலைமை செயலகம் வேண்டாம்!  கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம்!

 பட்டினம்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.


செப்.3ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சென்னையில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய ஒருங்கிணைந்த தலைமை செயலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.

இதுதான் தற்போது புதிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.


புதிய தலைமை செயலக வளாகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட பட்டினம்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.


இந்த குடும்பங்களின் நிலை என்ன? இவர்களை எங்கு அப்புறப்படுத்தப்போகிறீர்கள்? போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.





இது குறித்து மக்களின் மனநிலையை அறிய சென்றது. மீனவ மக்கள் அனைவரும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.


"வலைக்கு போவது, பிடிக்கப்படும் மீன்களை விற்று குடும்பத்தை நடத்துவது. இதுதான் எங்க வாழ்வாதாரம். அவங்க சொல்றதை போல நாளைக்கு இங்க புது தலைமை செயலகம் வருதுன்னா..


கவுச்சு நாத்தம் அடிக்குது, எல்லோரையும் காலி பண்ணுங்கனு சொல்லிடுவாங்க. பார்வைக்கு நல்லா டீசண்டா இருக்கனும்னு சொல்லுவாங்க. மீன் கடையை போட கூடாதுனு சொல்லுவாங்க.


அப்போ நாங்க எங்க போகுறது? தலைமுறை தலைமுறையாக நாங்க இந்ததான் வாழ்ந்து வரோம். அதிகாரிங்க வராங்க..


அவங்க வராங்க, இவங்க வராங்கனு சொல்லி, மீன் கடையை எடுக்க வச்சா நாங்க எங்க போகுறது?


ஒடுக்கப்பட்ட, உழைக்கக்கூடிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய, எங்களை மாதிரியான விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய கடல் சார்ந்த தொழில், சிறு குறு கடைகள் அனைத்தும் அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்படும். மக்கள் ஓட்டு போட்டுதான் நீங்க ஆட்சிக்கு வந்திருக்கீங்க..


ஆனா, இதுநாள் வரை எங்களை வந்து யாராச்சும் பா்த்து இருக்கீங்களா? எங்களின் வாழ்க்கை எப்படி இருக்குனு தெரியுமா? போன மாதம் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியிருந்தோம் யாராவது வந்தார்களா? யாரும் வரவில்லை.


இப்படி இருக்கும்போது.. திடீர்னு எங்க இடத்துல வந்த தலைமை செயலகம் கட்டுறோம்னு சொன்னா நாங்க எப்படி ஒப்புக்கொள்வோம்?


எவ்வளவோ திரைப்படங்களில் பார்த்ததில்லையா? பெரிய கட்டிடங்கள் வருகிறது எனில், மொதல்ல எங்களை போன்ற சிறிய வியாபாரிகளை காலி பண்ணிடுவாங்க.

அவங்களுக்கு இதை பார்க்கும்போது அசுத்தமாகவும், நாற்றமாகவம் தெரிகிறது. ஆனால் எங்களுக்கு இதுதான் சோறு போடுது.


ஏற்கெனவே திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ஓமந்தூரார் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது.

அதையெல்லாம் விட்டுவிட்டு புதிய கட்டிடம் எதற்கு? திமுக ஆட்சியில் வீடு இல்லாதோருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டதே.. அப்படி மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுங்க.


எங்க தாத்தா காலத்தில் தொடக்கத்தில்.. லைட்ஹவுஸ் முதல் பட்டினம்பாக்கம் வரை மீனவர்களாகிய நாங்கள்தான் இங்கு இருக்கிறோம். எங்க பூர்வீகம் இதுதான்,


ஆனா இங்க இருந்து போக சொன்னா எங்க போகுறது? எங்கள் வீட்டில் படித்த பிள்ளைகள் கூட.. இந்த இடம் அசுத்தம் என நினைத்து வெளியே போகவில்லை.


தலைமை செயலகம் கட்டிவிட்டால், இங்கிருந்து நாற்றம் வருகிறது, அசுத்தமாக இருக்கிறது, ரோடு சுத்தமாக இல்லை என்று சொல்வீர்கள்.


அப்படியெனில் எங்கள் வாழ்வாதாரத்தை விட்டுவிட்டு நாங்கள் போக முடியுமா?" என்று மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

திமுக ஆட்சியில் எவ்விதத் தவறுகளும் நடக்கவில்லை,!

சட்டபேரவையில் முதல்வர் விஜய் மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

மேலும், மு.க.ஸ்டாலின் தாடை உடைக்கப்பட்டது குறித்து செய்கையை செய்து காட்டினார் முதல்வர் விஜய் .

 இதற்கு அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து சட்டபேரவையில் நான் உள்நோக்கத்துடன் அந்த செய்கை செய்யவில்லை என்று முதல்வர் விஜய் விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும், திமுக சார்ப்பில் விஜய்யை கண்டித்து மாநிலம் முழுதுவம் போராட்டங்கள் நடத்தப்பட்டது. 

அதன்படி, கரூரில் நடந்த போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சட்டமன்றத்தில் பேச வேண்டிய ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டு, சினிமா கிளைமாக்ஸ் காட்சியில் பேசுவது போல திமுக தலைவர்கள் மீது வசனங்களை மட்டுமே முதல்வர் விஜய் பேசியுள்ளார். 

ரியல் ஆட்சியைத் தராமல் ‘ரீல்ஸ்’ ஆட்சியைத் தான் தவேக அரசு நடத்தி வருகிறது.மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்று கூறினார்.

எத்தனை ஆண்டுகள் தேடினாலும் எந்த தவறுகளையும் கண்டுபிடிக்க முடியாது

மேலும் சட்டமன்றத்தில் என்னிடம் 3 துறைகளை சார்ந்த கோப்புகள் உள்ளது. அதை திறக்க வேண்டாம் என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

அப்போது அந்த கோப்புகளைத் திறந்து காட்டுங்கள்.. நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல் நாளிலேயே சவால் விடுத்தார்.

 ஆனால், பழைய வழக்குகள் மற்றும் மனுக்களின் அறிக்கை களை மட்டுமே வைத்துக்கொண்டு ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போல முதலமைச்சர் விஜய் ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்.

திமுக ஆட்சியில் எவ்விதத் தவறுகளும் நடக்கவில்லை. எத்தனை ஆண்டுகள் தேடினாலும் திமுக தவறுகளையும் கண்டுபிடிக்க முடியாது என்று கூறினார்.

 எங்கள் ஆட்சியில் மின்சார வாரியம் திறம்படச் செயல்பட்டது. ஆனால், இன்றைய தவேக ஆட்சியில் எந்தவித முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

போதிய மின் உபகரணங்களோ, மீட்டர்களோ கையிருப்பில் இல்லை. இதனால் மாநிலம் முழுவதும் கடுமையாக மின்வெட்டு ஏற்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பணிகளைப் கவனிக்கும் ‘பகுதி நேர’ அதிகாரியாகச் செயல்படுகிறார். 

அதைத் தாண்டி மாநிலத்தில் நடக்கும் எந்தப் பிரச்சனையையும் அவர் கண்டுகொள்வதில்லை” என்றும் வி. செந்தில் பாலாஜி கடுமையாக விமரிசித்துள்ளார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி