மக்களாட்சியை கேலிக் கூத்தாக்கும்
மக்களாட்சியை கேலிக் கூத்தாக்கும் மக்கள் விரோதிகள்..!
தமிழகத்தில் மே 10ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்ற, 5 மாதத்தில் தாராபுரம், மதுராந்தம் ெதாகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது.
தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா மூலம் ஒரு தொகுதியை ஏற்கனவே இழந்துள்ள தவெக அரசுக்கு, காங்., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததன்மூலம் அரசுக்கு பெரும்பான்மை கிடைத்தது.
இந்த சூழலில் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு அதிமுகவில் ஒரு பிரிவினர் தவெக ஆதரவு நிலை எடுத்தனர். இதில் அதிமுக எம்எல்ஏக்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இதையடுத்து முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு உட்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழலில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
இதையடுத்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்.6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது.இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக, அதிமுக கட்சிகள் வெளியிட்டுள்ளன.
தவெக சார்பில் ஏற்கனவே அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோரே, முறையே மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜினாமா செய்ததுமே, தவெக வேட்பாளர்களாக இந்த இருவர்தான் அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல அறிவிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், தவெக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, கஜானா காலி என கிடைக்கும் இடமெல்லாம் தவெக அரசின் முதல்வர் முதல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரை கூறி வருகின்றனர்.
அரசுக்கு பெரும்பான்மை கிடைத்தும் தூண்டிலிட்டு அதிமுக எம்எல்ஏக்களை இழுத்ததோடு, தற்போது இடைத்தேர்தலுக்காக ஆகும் செலவினங்களை எந்த கணக்கில் சேர்ப்பீர்கள்?
அது அநாவசிய செலவு பட்டியலில் சேராதா?
ஒரு தொகுதியில் எம்எல்ஏ இறந்தால், தவிர்க்க முடியாத சூழலில் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் நடத்தலாம்.
ஆனால், பதவி ஆசைக்காக கட்சி மாறி ராஜினாமா செய்வது எந்த மாதிரியான அரசியல் சேவை என்ற கேள்வி எழுகிறது. உங்களை அரியணையில் அமர்த்துவதற்காக மக்கள், சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையில் நின்று வாக்களித்திருக்கிறார்கள்.
அவர்களை மீண்டும் சந்தித்து, வேறு கட்சிக்காக ஓட்டு கேட்டு செல்வது நியாயமான செயல்தானா?
இந்த தேர்தலுக்காக அரசு செலவிடும் மொத்தப் பணத்தையும் முன்பு தேர்தலில் நின்று வென்று சுயலாபத்திற்காக. பதவி விலகி மீண்டும் நடக்கும் தேர்தலிலும் வேட்பாளர்களாக போட்டியிடும் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும்,மக்களை மடையர்களாக்கும் அந்த நபர்களிடமே பெற வேண்டும்.
இருதொகுதியில் போட்டியிட்டு வென்று ஒருதொகுதியை ராஜினாமா செய்பவர்களிடமும் பெறவேண்டும்.
அனைத்தும் மக்களின் வரிப் பணம்
வெற்றி பெற்ற உடனே விலகி குதிரையோ,கழுதையோ பேரம் பேசி பதவி,பணம் பலன் பெறும் அனைவரிடமும் தேர்தல் செலவீனத்தை அபராதமாகப் பெறும் நடவடிக்கை கொண்டு வரவேண்டும்.கட்டாயம இது செய்ய வேண்டும்.
இது உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமிது. இதுபோன்ற சுயநல அரசியலுக்கு ஒருபோதும் மக்கள் ஆதரவே அளிக்கக்கூடாது.
தமிழகத்திற்கு ஏற்கனவே கிடைத்த ஒரு மாற்றம், வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமாகி இருக்கிறது. இந்த சூழலில் இடைத்தேர்தலில் மக்கள் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்பதே அனைவரின் கருத்தாகும்.
அன்றியும் எந்தக் காரியம் ஆரம்பித் தாலும் முதலில் பிள்ளையார் காரியத்தை கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால் நாமும் கடவுள்களின் கதைகளைப் பற்றி விளக்கப் போவதில் முதல் கடவுளைப்பற்றி ஆரம்பிக்க வேண்டியதும் முறையாகுமன்றோ.
இல்லா விட்டால் “அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு எடுத்த இக்காரியத்திற்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக் கூடும்” அன்றியும் சமீபத்தில் அக்கடவுளின் உற்சவம் (பிள்ளையார் சதுர்த்தி) ஒன்று வரப்போவதால் இந்தச் சமயம் ஒரு சமயம் பொருத்தமானதாகவும் இருக்க லாம். ஆதலால் தொடங்குதும்.
- ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதிதேவி தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்கு களைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளை யாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து “நான் குளித்துவிட்டு வெளியில் வரும் வரை வேறு யாரையும் உள்ளே விடாதே” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்த தாகவும் அந்த சமயத்தில் பார்வதி புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்த தாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனையும் பார்த்து “பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு, கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும்,
எனவே பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக் கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும் அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப்பல விதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவ ராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால் மற்ற கட வுள்கள் சங்கதியைப்பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க, ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டுதானே தீரும் (இவைகளைப் பார்க்கும்போது கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆகவே இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.அது அறிவியராலதான் இயலும்.















