இலக்குகள் கொள்கயாக மாறுமா?

🗞️ திண்டுக்கல், தேனி, விருதுநகர் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை. வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.🗞️ தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிப்பு.சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு குழுவினர் இடையே ஏற்பட்ட மோதலில் சீனிவாசன் என்பவர் உயிரிழப்பு.ஆனந்த் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை.🗞️ லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் உ.பி,யைச் சேர்ந்த 12 000 கோடி ரூபாய்க்கு முதலீடு ஒப்பந்தம் கையெழுத்து. தமிழ்நாட்டில் சுமார் 9000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு.இந்நிறுவனம் ததிழ்நாட்டில் ஏற்கனவே 33 நிறுவனங்களை நடத்திவருகிறது.🗞️ புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக சென்னையில் 9 மீனவ கிராமங்கள் இன்று ஆலோசனை. அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என தகவல்.🗞️ கும்பகோணம் 2 நாட்களாக மின்விநியோகம் இல்லாததை கண்டித்து சாலை மறியல். கும்பகோணம்- திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு.🗞️ ஈரோட்டில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் பெரியார் பேரணிக்கு அனுமதி. அனுமதி மறுக்கப்பட்டதாக கடும் கண்டனம் எழுந்த நிலையில் பணிந்தது காவல்துறை.🗞️ தவெக அரசை அதிகாரிகள்தான் நடத்துகிறார்களா? ஈரோடு பெரியார் பிறந்தநாள் பேரணி விவகாரத்தில் அரசுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி.🗞️ இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு. தங்கள் கட்சி வேட்பாளர்களை இடதுசாரி கட்சிகள் இன்று அறிவிக்கின்றன🗞️ முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி திருச்சியில் இன்று போராட்டம். போராட்டத்தில் பங்கேற்க விடாமல் நாகை மாவட்ட விவசாயிகளை வீட்டுக்காவலில் வைத்ததாக புகார்.🗞️ கோவையில் சாலையின் நடுவே பற்றி எரிந்த இருசக்கர வாகனம். கடையில் இருந்து புதிதாக வாங்கி வீட்டிற்குள் செல்லும் வழியில் தீப்பிடித்த சோகம்.

🗞️ திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 அதிருப்தி எம்.பி.க்களில் 17 பேர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல். தசரா பண்டிகையின் போது இணைப்பு இருக்க வாய்ப்பு
.🗞️ பிரிட்டனில் இருந்து பிரிவதற்கான வரலாற்று சிறப்புமிக்க கூட்டு பிரகடனம். ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் நாட்டின் தலைவர்கள் கையெழுத்து.
🗞️ ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் சீனாவின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து. சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை.
🗞️ ஏ.ஐ. தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த அதிக IQ கொண்ட அதிபர்தான் தேவை. ஏ.ஐ. மீது கட்டுப்பாடு தேவை என்ற கோரிக்கையை மீண்டும் நிராகரித்தார் ட்ரம்ப்.

இலக்குகள் கொள்கயாக மாறுமா?


இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, வாகனத் துறை, மூலதனப் பொருட்கள், இரசாயனங்கள், பாதுகாப்பு, மின்னணுவியல், உணவுப் பதப்படுத்தல், தோல்பொருட்கள், மருந்துகள், சூரிய சக்தி, எஃகு, தொலைத்தொடர்பு மற்றும் ஜவுளி உள்ளிட்ட 12 முக்கியத் துறைகளைக் கண்டறிந்துள்ளது.


பல்வேறு கொள்கை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்தியப் பொருளாதாரத்தில் உற்பத்தியின் பங்கு நீண்டகாலமாக 17 சதவீதத்திலேயே தேங்கிநிற்கிறது.


விவசாயத் துறையின் பங்கான 18 சதவீதத்தை விடவும் இது குறைவாக உள்ள சூழலில்,சீனா தனது உற்பத்தியின் பங்கை 3.9 சதவீதத்திலிருந்து 31.8 சதவீதமாக உயர்த்திய வரலாற்றுச் சாதனையுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் திறன்இன்னமும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.

தனியார்மயமாக்கல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், மற்றும் ‘மேக் இன் இந்தியா’ போன்ற பல்வேறு திட்டங்கள் கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்டாலும் உற்பத்தியின் பங்கு பெரிய அளவில் உயரவில்லை.


குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் ஊக்கத்தொகை வழங்குவதை விட, துறைசார் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவது மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுடன் ஒருங்கிணைவது என்ற கருத்து சரி; ஆனால் மோடிஅரசு செய்யுமா?


மேலும், இந்தத் திட்டம் பல பலவீனங்களைக் கொண்டுள்ளது. இந்த 12 தொழில்துறைகள் ஒட்டு

மொத்த இந்திய உற்பத்தியில் பாதியை உள்ளடக்கியுள்ளன; இத்தனை துறைகளையும் ஒரே நேரத்தில் மாற்றமடையச் செய்வது ஒரு தீவிரமானமற்றும் கவனம் செலுத்திய தொழில் கொள்கையாக இருக்க முடியாது.


இதற்கு அரசாங்கத்தின் நிர்வாகத் திறனைத் தாண்டிய நிதியும் செயலாக்கஆற்றலும் தேவைப்படும். மிக முக்கியமாக, இந்த அறிக்கையில் நிதிச் செலவு குறித்த மதிப்பீடோ அல்லதுவெவ்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுபற்றியோ எந்தவிதமான தெளிவும் இல்லை.

தனிப்பட்ட நிறுவனங்களின் குறைகளைத் தாண்டி, உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் ஒருங்கிணைப்புக்குறைபாடுகளைத் தவிர்க்க முடியும்.


இரசாயனத் துறையில் பொது உள்கட்டமைப்பையும், ஜவுளித்துறையில் திறன் மேம்பாட்டையும், தொலைத்தொடர்பில்உள்ளூர்மயமாக்கலையும் முன்னிறுத்துவது இக்கொள்கையின் சிறப்பம்சங்களாகும்.

மீண்டும்அதே கேள்வி தான், மோடி அரசு செய்யுமா?


நிர்வாகக் குழுக்களோ அல்லது இலக்குகள் தவறும்போது ஆதரவைத் திரும்பப் பெறும் வழிமுறைகளோ இல்லாமல் இத்தகைய வெறும் விருப்ப அறிக்கைகளை தயாரிப்பது உண்மையான வியூகமாகாது.


துறைசார்ந்த திறன்களை வளர்ப்பதற்கானஇந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும், நிதிச்செலவுகள், முன்னுரிமைகள் மற்றும் செயலாக்கப்பங்குகள் தெளிவாக வரையறுக்கப்படாவிட்டால்,

உலகளாவிய உற்பத்திச் சாம்பியன்களை உருவாக்குவது வெறும் எட்டாக்கனியாகவே எஞ்சும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி