மானம்,மரியாதை இழந்து...!




மானம்,மரியாதை இழந்து...!

கெஞ்சி கூத்தாடி ஆட்சியமைத்த விஜய் என்றும் மானம், மரியாதை இழந்து ஆதரவளித்த காங்கிரஸ் என்றும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். 


தமிழ்நாடு முதல்வர் விஜய் பற்றி தற்போது வட மாநிலங்களிலும் அதிகளவு ரீல்ஸ் பரப்பப்படுகிறது. அடுத்த பிரதமர் வேட்பாளர் விஜய் என தவெகவினர் கூறி வருகின்றனர். 


இந்தசூழலில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு விஜய் அரசையும், தவெக கூட்டணி கட்சியினரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,  ”2026-ல் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததும் விசிக, CPI, CPM , IUML ஆகிய கட்சித் தலைவர்களையும் மற்றும் அதிமுகவில் ஒரு பிரிவு தலைவர் இல்லத்திற்கும் சென்று கெஞ்சி கூத்தாடி ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தவர் விஜய்.

ஆனால் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தியையோ, தமிழ்நாடு கங்கிரஸ் தலைவரையோ நேரில் சந்தித்து ஆதரவு கேட்காத தற்குறி தவெகவு க்கு, மானம் மரியாதை இழந்து ஆதரவு கொடுத்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அவமானம் போதாது என்று, அடுத்த பிரதமர் விஜய் தான் என்று அமைச்சர் ஒருவர் சட்டமன்றத்தில் பேசிய போது சட்டமன்ற மேஜையை தட்டி வரவேற்கும் காங்கிரஸ் உறுப்பினர்களின் நிலையை பார்த்து இந்த நாடே வெட்கித் தலைகுனிகிறது.



அமைச்சர் பதவி ஒன்றை வாங்கியதால் 100 நாட்களில் 12 ஆணவக் கொலைகள் நடந்த பின்பும் மூச்சு விடாமல் கை கட்டி வாய் பொத்தி நிற்கும் விசிக.

ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த ஒரே காரணத்திற்காக அத்தனை கம்யூனிஸ்ட் மாணவர்கள், இளைஞர்களின்

விலாசத்தையும் கண்டறிந்து அரசியல் வாழ்வை முடிப்பதற்கு தலைமைச் செயலாளர் மூலம் நடவடிக்கை எடுத்த தவெக ஆட்சியை தூக்கி சுமக்கும் இடதுசாரிகளை பார்க்கும்போது வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை


இந்திய துணை கண்டத்தில் எல்லா காலத்திலும் இஸ்லாமியர்களுக்கு துணை நின்ற திமுக-வை விட்டு விலகி திடீர் தலைவர் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்ததால் பக்ரீத் அன்று ஆடு, மாடு‍, ஒட்டகம் கூட வெட்ட முடியாமல் வெட்கித் தவித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிலைமை இன்னும் பரிதாபம்..


தற்போது காக்ரோச் ஜனதா பார்ட்டி Genz இளைஞர்களிடம் ஒரு கேபினட் அமைச்சரை இழந்த “பாரத பிரதமர்” மோடி அச்சத்தில் காக்ரோச்க்கு எதிராக விஜயோடு இணைந்து வட இந்தியா முழுவதும் “Vijay Dalapathi” என்ற “Fake Reels” பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்தி மொழியில் தயாரித்து காக்ரோச்க்கும், ராகுல் காந்திக்கும் எதிராக இந்தியா முழுவதும் பரப்புவதோடு

அப்பாவு

அடுத்த “பிரதமர் யார்” என்ற போலியான சர்வே மூலம் விஜய் 3 வது இடத்திலும், காக்ரோச் 4 வது இடத்திலும் இருப்பதை போன்ற பிம்பத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருவது நாடறிந்ததே..


இந்த நிலையில் விஜய் ஆட்சியை தூக்கி சுமக்கும் பெயரில்லா கூட்டணி கட்சியினர் இந்த கொடுமையை அறிவார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி