“வாபஸ் அரசு”..

 
“வாபஸ் அரசு”.. 

 "வாபஸ் அரசு" என விமர்சிக்கப்படும் அளவுக்கு, தவெக அரசு அரசாணை வெளியிடுவதும் கடும் எதிர்ப்பு காரணமாக அதை திரும்பப் பெறுவதும் தொடர்கதையாகி வருகிறது.


ஆட்சிக்கு வந்தது முதல், பல விவகாரங்களில் அரசாணையை வாபஸ் பெற்றுள்ளது விஜய் தலைமையிலான தவெக அரசு.


முதல்மைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அலுவலராக ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம், மேல்மா சிப்காட் நில எடுப்பு ஆகிய விவகாரங்களிலும் அரசாணைகளை திரும்பப் பெற்றுள்ளது தவெக அரசு.

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது.


அதன்படி, தமிழ்நாடு அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான பொதுத் துறையின் (சட்டம் மற்றும் ஒழுங்கு) கீழ் வரும் தகவல்கள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act) வரம்பிலிருந்து விலக்களிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


இந்த அரசாணையின்படி மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், காவல்துறை சித்ரவதை, விசாரணைக் கைதிகளின் மரணம், துப்பாக்கிச்சூடு தொடர்பான அறிக்கைகளையும் அரசியல் காரணங்கள், சாதிய மோதல்கள், போராட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளைக் கையாளுதல் உள்ளிட்ட தகவல்களையும் ஆர்டிஐ-ன் கீழ் பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.


தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தவெக அரசின் இந்த நடவடிக்கைக்குக் விஜய் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை RTI சட்டத்தின் கீழ் பெறுவதற்கு அளிக்கப்பட்ட விலக்கு உத்தரவைத் திரும்பப் பெறுவதாக தவெக அரசு அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையை தவெக அரசு திரும்பப் பெற்றது.


ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதே மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக தவெக தீர்மானம் நிறைவேற்றியிருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு நில எடுப்புக்கான அறிவிக்கை வெளியானது அரசியல் வட்டாரத்திலும், விவசாயிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தற்போதைய தவெக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது.


என்ன கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தமிழக அரசிதழில் வெளியான அறிவிக்கையில், செய்யாறு தொழிற்பேட்டை விரிவாக்கப் பணிகளுக்காக மேல்மா கிராமத்தில் 22.1600 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக தவெக குரல் கொடுத்திருந்தது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அதே பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணை வெளியானது விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கேள்வியை எழுப்பியது.

இந்த நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட்ட மேல்மா கிராமத்துக்கான சிப்காட் நில எடுப்பு அறிவிக்கை திரும்பப் பெறப்பட்டது.

கரூர் கூட்ட நெரிசல்! உயிரிழந்த 41 பேருக்கு தவெக சார்பில் முதலாம் ஆண்டு நினைவு! கண்ணீரில் உறவுகள்

வாபஸ் - தொடர்கதை

அதற்கு முன்னதாக, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே ஒரு முக்கியமான பணி ஆணை வாபஸ் பெறப்பட்டது.


முதலமைச்சர் விஜய்யின் அரசியல் விவகாரங்களை கவனிப்பதற்காக சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.


தவெக அரசுக்கு ஆதரவளித்த கட்சிகளே இதனை விமர்சித்தன. இதையடுத்து, இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. தவெக அரசில், சர்ச்சைக்குரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, கண்டனங்கள் எழுந்தால் திரும்பப் பெறுவது தொடர்கதையாகி வருகிறது.


அரசின் கொள்கை முடிவு தான் அரசாணைகளாக வெளியிடப்படும், கொள்கை முடிவுகளில் சரியான யோசனை இல்லாமல் அவசரகதியில் வெளியிடுவதும், எதிர்ப்பு எழுந்தால் பின்வாங்குவதும் முறையான அரசுக்கு அழகல்ல என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மறக்க முடியுமா ?

கரூர் துயரம்


 கரூரில் நடந்த விஜய் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நடிகரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய், கடந்த 2023ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கினார். 


இதன் தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி மக்களை சந்திக்க கடந்தாண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் மாநகருக்கு விஜய் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 


அவரை நேரில் காணும் ஆவலில் அவரது கட்சியினரும், பொதுமக்களும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்ட இடமான வேலுச்சாமிபுரத்தில் அன்று காலை முதலே குவிந்தனர்.

திரையில் கண்ட விஜய்யை நேரில் காணும் மகிழ்ச்சியில் 2 வயது குழந்தை முதல் முதியவர்கள் வரை காலை 10 மணி முதல் கால் கடுக்க காத்திருந்தனர்.


 ஆனால் விஜய் அன்றிரவு 7 மணியளவில் தான் கரூர் வேலுச்சாமிபுரத்துக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் தனது பிரசார வாகனத்தில் நின்றவாறு பேச ஆரம்பித்தார். அப்போது அவரை காணும் ஆவலில் பலர் முண்டியடிக்க கூட்டம் அங்குமிங்குமாக அலைமோதியது.


இதில் திடீரென ஏற்பட்ட நெரிசலில் ஒருவரையொருவர் தள்ளியபடி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதை கண்டுகொள்ளாமல் விஜய் பேச்சை தொடர்ந்தார். பின்னர் நிலைமை விபரீதமானதை தொடர்ந்து பிரசாரத்தை பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பினார்.


அந்த நேரத்தில் நெரிசலில் சிக்கியவர்களை பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். 


அவர்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல் அடுத்தடுத்து வெளியானது.

 நிமிடத்திற்கு நிமிடம் பலி எண்ணிக்கை அதிகரித்தது. 

முடிவில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.


இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடித்த தவெக, திமுக கூட்டணியில இருந்த கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. கடந்த ஜூலை 10ம் தேதி கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், மக்கள் மத்தியில் உரையாற்றினார். 


அப்போது வேலுச்சாமிபுரத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக தவெக சார்பில் நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.


 மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 40 பேருக்கு அரசு வேலைக்கான ஆணையையும் முதல்வர் வழங்கினார்.


இந்நிலையில் இன்று கரூரில் 41 பேர் பலியான முதலமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

குறட்டை விட்டு தூங்கும் சிபிஐ;

கரூரில் 41 பேர் பலியான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பயணியர் மாளிகை வளாகத்தில் தற்காலிகமாக சிபிஐ அலுவலகம் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 


கடைசியாக ஜூன் மாதத்தில் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு சிபிஐ அலுவலகம் மூடப்பட்டே கிடக்கிறது. விசாரணை நடத்திய அதிகாரிகள் அனைவரும் டெல்லி சென்று விட்டனர். அவ்வப்போது இன்ஸ்பெக்டர் மனோகரன் மட்டும் வந்து அலுவலகத்தை திறந்து வைத்திருப்பார். 


ஆனால் கடந்த 3 மாதமாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. சம்பவம் நடந்து ஓராண்டாகியும் சிபிஐ இன்னும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யவில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி