வெள்ளை அறிக்கை தேவை....¡

 

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் நடவடிக்கைகளில் தலையிட்டு இடைக்காலத் தடை விதிப்பதற்கான காரணங்கள் இல்லை எனக் கூறியுள்ளது. இதனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.



தமிழகத்திற்கு நாள்தோறும் 6,000 கனஅடி காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, அந்த அளவை 3,000 கனஅடியாகக் குறைக்கக் கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள நான்கு முக்கிய அணைகளிலும் நீர்வரத்து கடுமையாகக் குறைந்துள்ளதால் கூடுதல் நீரைத் திறந்துவிட முடியாத சூழல் நிலவுவதாகக் கர்நாடக அரசு தனது மனுவில் தெரிவித்‌துள்ளது.

வெள்ளை அறிக்கை தேவை....¡

தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் கடந்த 10ம் தேதி லண்​டன் சென்றார். 


அங்கு முதலீட்​டாளர்​கள் சந்​திப்​பில் பங்​கேற்​கும் அவர், பல்​வேறு தொழில் நிறு​வனங்​களின் பிர​தி​நி​தி​களை சந்​தித்​து, தமி​ழ​கத்​தில் தொழில் தொடங்க வரு​மாறு அழைப்பு விடுக்கிறார்.


லண்​டனில் உள்ள புகழ்​பெற்ற ‘சில்​வர்​ ஸ்​டோன் மோட்​டார் ரேஸிங் சர்க்​யூட்’ வசதி​கள் மற்​றும் அதற்​கான சுற்​றுப்​பாதையை​யும் முதல்​வர் பார்வையிட உள்​ளார்.

அப்​போது, தனது நண்​பர் நடிகர் அஜித்​கு​மாரின் கார் பந்​த​யத்தை முதல்​வர் துவக்கி வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே முதல்வர் விஜய், லண்டன் சென்றார் என்று கூறப்பட்டாலும், அதுதொடர்பான எந்தவொரு தொழிலதிபர்கள் சந்திப்பு புகைப்படங்களோ அல்லது உறுதியான முதலீட்டு தகவல்களோ இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவும் அரசு செயலரும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் நேற்று ரூ.11 ஆயிரம் கோடியில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக அவசர அவசரமாக படமும், அறிக்கையும் வெளியிடப்பட்டது.


6 நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள முதல்வர் விஜய், லண்டன் நகரில் உள்ள `ஷாங்க்ரி-லா தி ஷார்ட்’ என்ற நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். இந்த கட்டிடத்திலிருந்து ஒட்டுமொத்த லண்டனையும், தேம்ஸ் நதியையும் காண முடியும் என கூறப்படுகிறது.

மொத்தம் 52 தளங்களை கொண்ட இந்த கட்டிடத்தில், விஜய் தங்கியிருக்கும் 34வது தளத்தில் 185 அறைகள், 14 டீலக்ஸ் அறைகள் மற்றும் 3 சிறப்பு எக்ஸ்கியூட்வ் அறைகள் உள்ளன. ஒரு நாள் வாடகை இந்திய மதிப்பில் ரூ.2.70 லட்சம் என்று அந்த ஓட்டலின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.


முதல்வர் விஜய் தங்கியுள்ள இந்த சொகுசு விடுதி முன்பாக அவரை பார்க்க லண்டனில் வசிக்கும் தமிழர்கள் வெளியில் காத்திருக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதுவரை அவர் தமிழர்களை சந்திக்கவில்லை.

மேலும், சில்வர் ஸ்டோன் கார் பந்தய தளத்தில் நடிகர் அஜித்தை சந்தித்த புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, இது அரசுமுறைப் பயணமா அல்லது தனிப்பட்ட பயணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த பயணத்திற்கு அரசு நிதி பயன்படுத்தப்படுகிறதா, அவருடன் சென்றவர்கள் யார், யார் என்ற விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.

தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் ஒரு வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என திமுக, அதிமுக, பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

தவெக அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து முக்கியமான நடவடிக்கைகள் மர்மமாக இருக்கிறது. கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் சிலருக்கு பல்வேறு அரசு பதவிகள் மற்றும் வாரியத்தலைவர் பதவிகள் ஒதுக்கப்படுகிறது.

இத்தகைய நியமனங்களுக்கான அரசாணைகள் பொதுவெளியில் முறையாக வெளியிடப்படாமல், ரகசியமாக வைக்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் மின்வெட்டு பிரச்னை அதிகரித்துள்ளது.இதனால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுகிறது. சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு பிரச்னை அதிகரித்துள்ளது.


விவசாயிகள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் முடிக்கப்படவில்லை. தமி​ழ​கத்​துக்கு ரூ.11 லட்​சம் கோடி கடன் நெருங்கும் நிலை​யில், புதிய தலை​மை செயல​கம் கட்​டு​வது அவசி​ய​மா என்று, சாதாரண மக்களும் கேள்வி எழுப்பும் நிலைக்கு தவெக அரசின் செயல்பாடு உள்ளது என்பதே நிதர்சனமாக உள்ளது.


அனைத்துக்கும் 'வெள்ளை அறிக்கை வெளியிடும் விஜய் அரசு லண்டன் முதலீடு பயணம் தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை வெறியிட வேண்டும். வெளியிடுமா!




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி