கஜானா காலியாக இருக்கும்போது


கஜானா காலியாக இருக்கும்போது

ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகமா.?

விஜய்யை விளாசிய இபிஎஸ்


 கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது என எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு பதவியேற்று 100 நாட்களை கடந்துள்ள நிலையில், தற்போதுள்ள தலைமைச்செயலகத்தில் இட நெருக்கடி இருப்பதாகவும் எனவே புதிய தலைமைச்செயலகம் கட்ட திட்டமிட்டது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கிய நிலையில், 1200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார்.


இந்த நிலையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகம் அமைக்கப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த மீனவ அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. 

அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.


இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.


விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.


புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூறவில்லை.


தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம்.


தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது.


எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. சி.ஜோசப் விஜய்யை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 










 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி