நூறு சதவீத சரணாகதி

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியகதையாக இந்தியா மீது அமெரிக்கா நூறு சதவீதவரி விதிப்பதில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் மூர்க்கத்தனமாக முனைப்புக் காட்டுகிறது.
அமெரிக்கஜனாதிபதி டிரம்ப்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கூடிக் குலாவினாலும் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் அமெரிக்கா கைவிட தயாராக இல்லை.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதிசெய்யக்கூடாது என்றுடிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து மிரட்டி வந்தது. 2025ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை டிரம்ப் நிர்வாகம் வரி விதித்தது.
இதற்கிடையில் வர்த்தக ஒப்பந்தம் என்கிறபெயரில் தனக்குச் சாதகமான ஒரு உடன்பாட்டில் மோடி அரசை கையெழுத்திடச் செய்வதற்காக இந்தியப் பொருட்களுக்கான வரியை 18 சதவீதம் அளவுக்கு குறைப்பதாக டிரம்ப் நிர்வாகம்நாடகமாடியது.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் என்பது இந்திய நலனுக்கு முற்றிலும்எதிரானது. அமெரிக்காவிற்கே முழுக்க முழுக்கசாதகமானது. இந்த உடன்பாட்டை இறுதி செய்வதற்கு ஒன்றிய அரசு கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.
இந்த நிலையில், ரஷ்யாவிற்கான வருவாயை தடுப்பதற்காக என்று கூறி அந்த நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்இந்தியா, சீனா, துருக்கி, அஜர்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவேகியா, யுஏஇ, சிங்கப்பூர், கஜகஸ்தான்,துர்கிஸ்தான்ஆகிய நாடுகளுக்கு நூறு சதவீத வரி விதிப்பதற்கான மசோதாவை அமெரிக்கா நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டால் இது சட்டமாகிவிடும்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியஏற்றுமதியை பெருமளவில் பாதிக்கும்.
குறிப்பாகஜவுளி, பொறியியல் பொருட்கள், மருந்துகள், ஆபரணங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்திய ஏற்றுமதி கடும் சிக்கலைச் சந்திக்கும்.
ஒருபோகு அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையை திறந்துவிட நிர்ப்பந்திக்கும் டிரம்ப் நிர்வாகம் மறுபுறத்தில் இந்தியப் பொருட்களின் ஏற்றுமதியை முடக்க முயல்கிறது.
அமெரிக்காவின் அடாவடிகளைக் கண்டிப்பதில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நூறு சதவீத வரி விதிப்புமுடிவைக் கூட வெளிப்படையாக கண்டிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை.
மாறாக, அமெரிக்காவிற்குகண்டனம் கூட தெரிவிக்காமல் ஒரு அறிக்கையை இந்திய அயல்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஓடுபவரைதொடர்ந்து விரட்டுவது போல இந்தியாவை அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி வருகிறது.
ஆனாலும் சுயேச்சையான அயல்துறைக்கொள்கையை கைவிட்டு அமெரிக்க ஆதரவுக் கொள்கையை பின்பற்றும் மோடி அரசு இந்தியாவின் நலன்பாதிக்கப்படும்போது கூட பதுங்குவது அவக்கேடானது.
"தவெக அரசு படிக்கவைக்காவிட்டால்
திமுக படிக்க வைக்கும்.." மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன் மலேசியாவில் படித்து வருகிறார். அவரது கல்வி உதவித்தொகையை தமிழக அரசு கவனித்து வருகிறது. தவெக ஆட்சி அமைந்தது முதலே அவருக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை என்று அந்த மாணவர் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், தான் கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு தனது கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தால் தன்னை கல்லூரியில் இருந்து நீக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த மாணவர் வேதனையாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் மாணவருக்கு உரிய உதவியை அரசு செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
நெஞ்சம் கனக்கிறது:-
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மாணவருக்கு உரிய உதவியை அரசு செய்ய வேண்டும் என்று தவெக அரசுக்கு பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.இதனால், விரைவில் தவெக விஜய் அரசு இந்த விவகாரத்தில் மக்கள்,எதிர்கட்சிகள் அழுத்தம் காரணமாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில்உள்ளது்
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,
இந்த விவகாரம் விஜய் அரசுக்கு பின்னடைவை உண்டாக்கும் சூழலும் உருவாகியுள்ளது.







