பாதுகாப்பு என்றால் ,கொலையா?

 காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை தவெக ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே வெற்று முதல்வராக நினைக்கிறார்களா?” என உதயநிதி ஸ்டாலின் வினவியுள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.


‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்டடாய்... பொய் வழக்குப் போட்டு உள்ள தள்ளிவிடுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார.


‘முதல்வர் கிட்ட வேண்டுமானாலும் போய் சொல்லு. என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாக கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.


காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே வெற்று முதல்வராக நினைக்கிறார்களா?

காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த தவெக ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்


சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா... அமலாக்கத் துறை என்ன செய்தது தெரியுமா’ என்று திசைதிருப்பும் முதல்வர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.


இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.


தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

காலம் பதில் சொல்லும்!


மாநிலத்தின் கடன் சுமை அதிகமாக இருப்பதாகவும், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் முன்பு விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின.


இதற்காக வெள்ளை அறிக்கை எல்லாம் வெளியிட்டனர்.

ஆனால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அதிகாரத்தை ஏந்திய பிறகு, அந்த நிலைப்பாட்டில் இருந்து அரசு மெல்ல விலகிச் செல்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


ஆட்சியைப் பிடித்த உடனே, மாநிலத்தின் கல்லா பெட்டிகூட காலியாகிவிட்டதாகக் கூறிய அதே அரசு, தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (எம்.எல்.ஏ) அரசு செலவில் புதிய கார்களைப் பரிசாக வழங்குவோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.


ஏற்கனவே பல கோடி சொத்துக்களுடன் கோடீஸ்வரர்களாக இருக்கும் பல எம்.எல்.ஏ.க்களுக்கு சொந்தமாகவே கார்கள் உள்ளன. அப்படிப்பட்ட நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து இவர்களுக்கு விலையுயர்ந்த கார்களை வாங்கித் தருவதும், பராமரிப்புச் செலவுக்காக மாதந்தோறும் ஒரு லட்சம் பணம் வழங்குவதும் ஏற்கனவே ஒருலட.சத்துக்கும் அதிகமாக சம்மளம் வாங்குபவரகளுக்கு கொடுப்பது அவசியமா என்ற கேள்வி சாமானிய மனிதனிடம் இருந்து எழுகிறது.


ஏற்கனவே விலைவாசி அதிகமாகி எளிய மக்கள் வாழ்க்கை கவலைக்கிடமாகிவிட்டது.


மாநிலம் கடனில் தத்தளிக்கிறது என்று வாய்மொழியாகச் சொல்லிக்கொண்டே, மறுபுறம் மக்கள் பணத்தை இப்படி ஆடம்பர சலுகைகளுக்கு வாரி வழங்குவது எந்த வகையில் நியாயம்?


எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்துத் தங்களது வாகனப் பரிசை மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமின்றி, முதலமைச்சரின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் மேல் தளத்திற்கு மாற்றியதும், முதல்வரின் கடல் பார்க்கும் வியூக்காக பல கொடிகளை செளவ்வு செய்வதும்.. நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இப்போது சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 1,200 கோடி ரூபாய் பிரம்மாண்ட செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற கட்டிடத்தை அமைக்கத் திட்டமிட்டிருப்பதும் விவாதப் பொருளாகியுள்ளது.


ஏற்கனவே சென்னை ஜார்ஜ் கோட்டையில் அனைத்து வசதிகளுடன் அரசு தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் சூழலில், கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் செலவு செய்து புதிய பிரம்மாண்டக் கட்டிடங்களைக் கட்டுவது யாருக்காக?


மாநிலத்தில் எத்தனையோ அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, இந்த ஆடம்பரத் திட்டங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவது எந்த அளவுக்குச் சரி?


அரசியல் மாற்றத்தைத் தருவோம், ஊழலற்ற எளிய நிர்வாகத்தைக் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கமான ஆடம்பரப் பாதையையே புதிய ஆட்சியும் தேர்ந்தெடுப்பது ஏமாற்றத்தையே அளிக்கிறது.


கொடுத்த வாக்குறுதிகளையும், இப்போது நடக்கும் செயல்களையும் தமிழக மக்கள் மிகக் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். மக்களின் உண்மையான தேவைகளை விட்டுவிட்டு, இதுபோன்ற ஆடம்பரத் திட்டங்களில் கவனம் செலுத்துவது எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணரும் காலம் விரைவிலேயே வரும். எளிய மக்களுக்கு பதில் சொல்லத்தான் வேண்டும்.


.,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி