ஜெம் வீரமணி வழக்கு ?

🔷 வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றுழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அடுத்த 24மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்🔷 மேட்டூர் அணை திறக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் கடைமடையை எட்டாத தண்ணீர். நீரின்றி சம்பா பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் விவசாயிகள்🔷 சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் காவிரி நீர் கிடைக்காமல் இழப்பை சந்தித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு. விளம்பரத்திற்காக தவெக அரசு  விவசாயிகளை வஞ்சித்து விட்டதாக கண்டனம்🔷 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் 10 கிராம மீனவ மக்கள் சந்திப்பு. புதிய தலைமைச்செயலகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கேட்டனர்🔷 தவெக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு இல்லையென பெ.சண்முகம் மீண்டும் திட்டவட்டம். பொதுமக்களுக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்த முயன்றால் எதிர்ப்போம் என உறுதி.🔷 யாருடைய ஆசைக்காக புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுகிறது? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி. மீனவர்களுடன் இணைந்து தி.மு.க. மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கை🔷 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு. வார விடுமுறையைச் சேர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காத சூழல்.


நம்பகத்தன்மையில் ‘தினத்தந்தி’க்கு முதல் இடமாம் 😂

உதாரணத்துக்கு நேற்று ‘தினத்தந்தி’யில் இடம்பெற்ற ஒரே ஒரு செய்தியை எடுத்துக் கொள்வோம். எச்-1பி விசாவுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை டிரம்ப் அரசு நிர்ணயித்திருக்கிறது. 
அதனுடைய இந்திய மதிப்பு ரூ.10 லட்சமென நேற்று ‘தினத்தந்தி’ சொல்லியிருக்கிறது. 
ஒரு அமெரிக்க டாலருக்கு இன்று இந்திய ரூபாயில் மதிப்பு 95.79 ரூபாய். அதாவது ஒரு லட்சத்தை 95.79-ஆல் பெருக்க வேண்டும். ‘தினத்தந்தி’ குமாரசாமி கால்குலேட்டரில் பெருக்கிப் போட்டிருக்கிற தொகை பத்து லட்சம் ரூபாய். நம்பகத்தன்மையில் முதலிடம் என்றால் சும்மாவா?

ஜெம்’ கிரானைட் வீரமணி மீதான வழக்கை திமுக கைவிட்டதா?  


வழக்கின் புலன் விசாரணை திமுக ஆட்சியில் கைவிடப்படவில்லை.. விசாரணை தொடரும் என்று தான் குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வலுவான ஆதாரம் கிடைக்க பாத்திருந்தது.



ஆனால் இதை மறைத்து அவதூறு கருத்துக்களை சட்ட அமைச்சர் நிர்மல் குமார் பரப்பி வருகிறார் என திமுக சட்டத்துறை செயலாளரும், வழக்கறிஞரும் என் ஆர் இளங்கோ தெரிவித்துள்ளார்.


திமுக சட்டத்துறை செயலாளரும், வழக்கறிஞருமான என்ஆர் இளங்கோ இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:-


ஜெம் கிரானைட் வீரமணி மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கு குறித்து, அது எதோ திமுக ஆட்சியில் நீர்த்துப்போக செய்ததாக ஒரு கருத்தினை பரப்பி இருக்கிறார்.

அது முற்றிலும் தவறான கருத்தாகும். ஏன் என்று சொன்னால், 7.11.2025 அன்று பதியப்பட்ட வழக்கு, அப்போது காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வீடுகள் சோதனையிடப்பட்டு, அப்போதைக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை வைத்து மேற்கொண்டு விசாரணை செய்யபப்ட்டது.


ஆனால் உரிய ஆதாரங்கள் கிடைக்காததால் நீதிமன்றத்தில் இதுவரை நடத்திய விசாரணையில் உரிய ஆவணங்கள் கிடைக்கவில்லை,


இந்த வழக்கை கைவிடவில்லை. உரிய ஆதாரங்களை திரட்டும்வரை, இந்த வழக்கின் மேல் விசாரணையை தள்ளி வைத்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டு போக்சோ நீதிமன்றத்தில் குறிப்பு ஆணை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.


ஜெம் கிரானைட் வீரமணி வழக்கை திமுக கைவிடவில்லை.


அமைச்சர் நிர்மல் குமாரின் கூற்று தவறு. திமுக ஆட்சியில் இந்த வழக்கின் புலன் விசாரணை கைவிடப்படவில்லை.


விசாரணை தொடரும் என்று தான் குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை மறைத்து அவதூறு கருத்துக்களை சட்ட அமைச்சர் பரப்பி வருகிறார்.


ஜெம் கிரானைட் தொழில் அதிபர் வீரமணி குறித்தும், முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்தும் இடைத்தேர்தலில் அரசியல் லாபம் ஈட்டுவதற்காக ஒரு தவறான கருத்தினை கூறியுள்ளார்.


கிரானைட் முறைகேடு! மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு என்ன ஆச்சு? மதுரை சிபிஐ கோர்ட் கேள்வி

இதேபோல தொடர்ச்சியாக அமைச்சர், தான் சட்ட அமைச்சர் என்பதனை மறந்து முன்னாள் முதல்வர் மக்களுக்காக ஆற்றிய பணியினை மறந்து, மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இது போன்ற பேட்டிகளை கொடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.


ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஸ்டாலினை இழிவுப்படுத்தும் வகையில், மிசா சட்டம் குறித்து பொய்களை பேசி வந்தார்.

இப்போது ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார்.இது கூட விஜய்க்கு ஆதரவான ஆந்திர கிரானைட் மாபியாக்களுகாகு ஆதரவாகத்தான் ஜெம் வீரமணி போக்சோ வழக்கை கையில் எடுத்துள்ளது த.வெ.க.


குற்றம் சாட்டப்பட்ட நபர்களை காப்பாற்றுவதற்காக

திமுகவின் நிலைப்பாடு என்னவென்றால், குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும், குறிப்பாக பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.


இதுபோன்ற வழக்குகளில் ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதே நிர்மல் குமார் அவர்கள், எப்படியாவது குற்றம்சாட்டப்பட்டவர்களை காப்பாற்றிவிடலாமா என நினைப்பதாக தான் தெரிகிறது.


ஏன் என்று சொன்னால் இல்லாத அரசியல் அழுத்தங்களை இருப்பதாக சொன்னால் பாதிக்கப்பட்ட அந்த நபர்கள் இந்த வழக்கில் ஏதோ மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது போல் என்று நினைத்து சாட்சியங்கள் அழிக்காமல் அதில் இருந்து விலகி செல்வதற்காகவே, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை காப்பாற்றுவதற்காகவே இந்த அறிக்கையை கொடுப்பதாக நாங்கள் நம்புகிறோம்.." என்று தெரிவித்துள்ளார்.


மேலும் கூறுகையில், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தினமும் 2 பாலியல் குற்றங்களாவது புகார்களாக அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது நடக்கும் பாலியல் குற்றங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமேயானால் அதற்கு ஒரு நாள் பத்தாது.

தவெக ஆட்சியில் தற்போது வரை 719 பாலியல் குற்றங்கள் அரங்கேறி உள்ளது. அதிலும் குற்ற சம்பவங்கள் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் தவெக நிர்வாகிகளாக இருக்கின்றனர்.


இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் உண்மைக்கு மாறான தகவலை பரப்பும் நோக்கில் தொடர்ந்து பேட்டி அளிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி