தேர்தல் ஆணையர்கள் போர்க்கொடி!

 மெகாவாட்டில் பொய்கள் !

“ரெண்டே பேருக்கு நடு­வு­ல­தான் போட்­டியே! ஒன்னு மின்­வெட்டு... இன்­னொன்னு அரி­வாள் வெட்டு!’’ என்று ஒரே போடா­கப் போட்­டார் தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்! 

நான்கு மாத ஆட்சி நான்கே சொற்­க­ளில் முடித்­து­வி­டப்­பட்­டது.

விஜய் ஆட்­சிக்கு வந்­தது முதல் வெளிச்­சம் போய்­விட்­டது என்­ப­தன்அடை­யா­ள­மாக, எங்­கும் எப்­போ­தும் எல்லா ஊரி­லும் எல்லா நேரத்­தி­லும் மின்­வெட்டு.மின்­சா­ரம் கட்!

‘அஞ்சு கட்சி மாறிய அமா­வா­சை­யான’ இத்­து­றை­யின் அமைச்­சர் நிர்­மல்­கு­மா­ருக்கு இது­பற்­றிய கூச்­சமே இல்லை. தனது துறை­யைக்

கவ­னிக்­கத் துப்பு இல்­லா­மல் அடுத்­த­வர் துறைக்கு எல்­லாம் ஆளுக்கு முந்தி பதில் சொல்­லித் திரி­கி­றார். எப்­போ­தா­வது மின்­வெட்டு குறித்து பதில் சொல்ல முன்­வந்­தால் மெகா­வாட் கணக்­கில் பொய்­க­ளைச் சொல்­கி­றார்.

தமிழ்­நாட்­டில் மின்­வெட்டே கிடை­யாது என்­பார். ஆதா­ரத்­து­டன்

கேள்­வியை எழுப்­பி­னால் பொய்­மூட்­டை­களை அவிழ்ப்­பார்.

இது­வரை அவர் சொன்ன பொய்­க­ளைப் பாருங்­கள்...

« தி.மு.க.வின­ரால் மின்­வெட்டு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

« மின்­சார வாரி­யத்­தில் பணி­யாற்­றும் ஒரு சில ஊழி­யர்­க­ளால் திட்­ட­மிட்டு மின்­வெட்டு ஏற்­ப­டு­கி­றது.

« பியூஸ் கட்­டை­யைத் திரு­டிச் சென்று விடு­வ­தால் மின்­வெட்டு

ஏற்­ப­டு­கி­றது.

« ஆமாம் மின்­சாரப் பற்­றாக்­குறை இருக்­கி­றது. அத­னால் வெளிச்­சந்­தை­யில் மின்­சா­ரம் வாங்க முயற்­சித்து வரு­கி­றோம்.

« வெயில் அதி­க­மாக இருப்­ப­தால் மின்­சா­ரத் தேவை அதி­கம் ஆகி­விட்­டது.

மின்­வெட்­டைப் பெரி­தாக்­கு­கி­றார்­கள். பஞ்­சாப் மாநி­லத்­தில் 14 மணி­நேரம் மின்­வெட்டு இருக்­கி­றது. பல மணி­நே­ரம் மின்­சா­ரம் இல்­லா­மல் அங்கு இருக்­கி­றார்­கள்.

« மின் துறை ஊழி­யர்­கள் மத்­தி­யில் 1 விழுக்­காடு ஊழி­யர்­கள் கருப்பு

ஆடு­கள். அவர்­க­ளால் மின்­வெட்டு திட்­ட­மிட்டு நடத்­தப்­ப­டு­கி­றது.

இந்த வரி­சை­யில் நேற்­றைய தினம் ஒரு மெகா பொய்­யைச் சொல்லி இருக்­கி­றார். “பி.எஸ்.என்.எல். கேபிள் பணிக்­க­ளுக்­காகத் தோண்­டு­வ­தால் மின் வெட்டு ஏற்­ப­டு­கி­றது’’ என்­கி­றார். நாடு முழுக்க பி.எஸ்.என்.எல்.

பணிக்­காகத் தோண்­டு­கி­றார்­கள் என்­றால் அத்­து­றைக்கு எத்­தனை லட்­சம் ஊழி­யர்­கள் தேவை? ஊர் முழுக்க குண்­டும் குழி­யு­மா­கக் கிடக்­கி­றதா? ஒட்­டு­மொத்­த­மாக தமிழ்­நாட்டு மக்­கள் காதில் பூ சுற்­று­கி­றார் அமைச்­சர் நிர்­மல்­கு­மார்.

இவ­ருக்கு முட்­டுக் கொடுக்க வந்­துள்­ளார் இன்­னொரு அமைச்­சர்

செங்­கோட்­டை­யன். அவர் என்ன சொன்­னார் என்­றால்...

« காற்று அடிப்­பது குறை­வாக இருக்­கி­றது. அத­னால் காற்­றாலை

மின்­சாரம் கிடைக்­க­வில்லை.

« வெளி­சந்­தை­யில் எங்­கே­யும் மின்­சா­ரம் வாங்க முடி­ய­வில்லை.

அத­னால்தான் மின்­சா­ரம் தட்­டுப்­பாடு -- என்­கி­றார் செங்­கோட்­டை­யன்.

இன்­னொரு மகா புத்­தி­சாலி இந்த அமைச்­ச­ர­வை­யில் இருக்­கி­றார்.

‘ஒரு ரூபாய் வாங்­கிக் கொண்டு 49 ரூபாய் திருப்­பித் தரு­கி­றார்­கள்’ என்று சொன்ன புத்­தி­சாலி. ஆதவ் அர்­ஜூனா என்­பது அவர் பெயர். இவர் ‘நான்கு கட்சி மாறிய அமா­வாசை’. அவர் சொல்­கி­றார்...

“மழை குறைந்­த­தால் தண்­ணீ­ரில் இருந்து வரும் மின்­சா­ரம் குறைந்­தி­ருக்­கி­றது. காற்று நின்று போன­தால் அந்த மின்­சா­ர­மும் கிடைக்­க­வில்லை” என்று சொல்­கி­றார் ஆதவ் அர்­ஜூனா. இதைக் கல்­வெட்­டாக அடித்து அதற்கு கீழே ஆதவ் அர்­ஜூனா என்று போட்­டால் காலா காலத்­துக்கு பயன்­ப­டும், வழி­காட்­டும் பொன்­மொழி ஆகும். எவ்­வ­ளவு பெரிய புத்­தி­சா­லி­களை விஜய் தன்­னைச் சுற்றி வைத்­துள்­ளார் என்­ப­தற்கு உதா­ர­ணம் இவர்­க­ளது பேச்­சு­கள்.

ஆட்சி நடத்த துப்பு இல்லை. திராணி இல்லை. மக்­கள் தேவை­களை அறிந்து வழங்க அறிவு இல்லை. திறமை இல்லை. வாய்க்கு வந்த கார­ணத்­தைச்

சொல்­கி­றார்­கள். ‘கார­ணம் சொல்­ப­வன் காரி­யம் செய்ய மாட்­டான்’என்­பது பழ­மொழி. அதைத்­தான் பார்க்­கி­றோம்.

த.வெ.க. அர­சின் நிர்­வா­கச் சீர்­கேட்­டால் ஒட்­டு­மொத்தத் தமிழ்­நா­டும்

இரு­ளில் மூழ்­கிக் கிடக்­கி­றது.


முத­ல­மைச்­ச­ரின் பெரம்­பூர் தொகு­தியே இரு­ளில் கிடக்­கி­றது. மின்­சா­ரம் போனால் நான்கு ஐந்து மணி­நே­ரத்­துக்கு வரு­வது இல்லை. குழந்­தை­கள், முதி­யோர், நோயா­ளி­கள் பெரும் அவ­திக்கு ஆளாகி வரு­கி­றார்­கள். வீட்­டில் தூங்க முடி­யா­மல் வாச­லில் உட்­கார்ந்து இருக்­கி­றார்­கள் மக்­கள். சாலை மறி­யல் செய்­கி­றார்­கள். மின்­வா­ரிய அலு­வ­ல­கங்­கள்

பூட்­டுப் போடப்­பட்­டுள்­ளன. பொது­மக்களால்­க­ளின் போன் அழைப்­பு­களை எடுக்க ஆள் இல்லை.மின்­வா­ரிய அலு­வ­ல­கங்­கள் பொது­மக்­க­ளால் முற்­று­கை­யி­டப்­ படுகின்­றன.

பொது­மக்­க­ளுக்கு நிம்­மதி போய்­விட்­டது என்­றால் தொழில் துறை­யி­ன­ருக்கு தொழிலே போய்­விட்­டது. தொடர் மின்­வெட்டு கார­ண­மாக தொழில் நிறு­வனங்­களை தொடர்ச்­சி­யாக இயக்க முடி­யாத சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. கோவை தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு மட்­டும் நாள்தோறும் 10 கோடி ரூபாய் இழப்பு என்று செய்­தி­கள் வெளி­யாகி உள்­ளன. கோவை­யில் நாள் தோறும் 7 முதல் 10 முறை மின்­வெட்டு ஏற்­ப­டு­வ­தாக தொழில் துறை­யி­னர் தெரி­விக்­கி­றார்­கள்.

தொடர் மின்­வெட்டு கார­ண­மாக மூலப்­பொ­ருள் வீணா­கி­றது. இயந்­தி­ரங்­கள் பழு­த­டை­கின்­றன. தொழி­லா­ளர்­க­ளுக்கு ஊதி­யம் தரப்­ப­டு­கி­றது, ஆனால் வேலை இல்லை என்­கிற நிலைமை ஏற்­ப­டு­கி­றது.

இப்­படி ஒட்­டு­மொத்தத் தமிழ்­நா­டும் இருட்­டில் தள்­ளப்­பட்­டுள்­ளது விஜய்

ஆட்­சி­யால்.ஏன் எங்­கும் மின்­சா­ரம் இல்லை என்­றால், ஒரு அமைச்­சர் தி.மு.க.வைக் குறை சொல்­கி­றார். இன்­னொரு அமைச்­சர் காற்­றைக் குறை சொல்­கி­றார். 

மற்­றொரு அமைச்­சர் மழை­யை­யும் காற்­றை­யும் குறை சொல்­கி­றார். இயற்­கை­யையே சவா­லுக்கு அழைக்­கி­றார்­கள் சினி­மா­வைப் போல!

ஆளத் தெரி­யாத விஜய் படம் நடிக்­கப் போக­லாம். அமைச்­சர்­கள் அவ­ருக்கு கதை பண்­ணப் போக­லாம்!

சம இரவு – பகல் நாள்

’ இன்று (23.9.2026)

சம இரவு சம பகல் (Equinox) என்பது கதிரவன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும்.  ஆண்டுக்கு இருமுறை கதிரவன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும்.. இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ (equi) எனபது சமம் என்றும் நாக்சு (nox) என்பது இரவு என்றும் பொருள்படும்.

சம இரவு நாட்கள் உலகின் எந்த ஒரு இடத்திலும் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச்சு 21அன்றும் செப்டம்பர் 23 அன்றும் இவை நிகழும்.

S.I.R விவகாரம்:

தலைமை தேர்தல் ஆணையருக்கு

எதிராக

தேர்தல் ஆணையர்கள் போர்க்கொடி!


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தங்களுக்கு தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 


இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324 இன் கீழ் அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம், ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல்களை நேர்மையாகவும், சுதந்திரமாகவும், நடுநிலையாகவும் நடத்துவதற்கு பொறுப்பேற்ற மிக மிக முக்கியமான அரசமைப்பு அமைப்பாகும். 


ஆனால் தேர்தல் ஆணையத்தின் மீது சமீப ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.  இந்த சூழலில் தற்போது தேர்தல் ஆணையத்திலேயே மோதல் வெடித்திருக்கிறது. 

அதாவது தலைமை தேர்தல் ஆணையர் மற்ற இரண்டு ஆணையர்களின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் ஆணையத்திற்குள் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 


2025 ஆம் ஆண்டு பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடந்த போது சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பிய போதும் தேர்தல் ஆணையம் இந்த பணிகளை மேற்கொண்டது.

பீகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் SIR மேற்கொள்ளப்பட்டது.

இது, போலி வாக்காளர்கள் அல்லது ஊரில் இல்லாத வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் ஒரு நடவடிக்கை தான் என்றாலும், 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடிக்கும் அதிகமான பெயர்களை நீக்கி உள்ளது. 


இதன் மூலம் யார் வாக்களிக்கலாம், யார் வாக்களிக்க கூடாது என்பதை தீர்மானிப்பதில் தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்த விவாதம் மைய புள்ளியாக அமைந்தது. 


  வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. 


அவர்கள் வேறு யாரும் அல்ல… தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களில் மற்ற இருவரான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரால் இந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 


 SIR பணிகள் நாடு முழுவதும் மூன்று ஆணையர்களின் மேற்பார்வையிலேயே நடைபெற்று வருகிறது. ஆனால் தங்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறையாவது, அதுவும் ஒரே நாளில் நான்கு முறையாவது சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி இருவரும் ஆட்சேபனையை பதிவு செய்துள்ளனர்.


*மூன்று தேர்தல் ஆணையர்களில் இவர்கள் இருவரும் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமல் இருட்டடிப்பு செய்வது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது மற்றும் பெயர்களை நீக்குவது ஆகியவை குறித்து புகார் தெரிவித்துள்ளனர். 


*புதிய வாக்காளர்களுக்கான விதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை சட்டவிரோதமானது மற்றும் அதிகாரப்பூர்வமற்றது என குறிப்பிட்ட இவர்கள், மாநில அதிகாரிகளை புறக்கணித்துவிட்டு வாக்காளர்கள் தரவு தளத்தை டெல்லியில் மையப்படுத்தும் நடக்கவடிக்கைகளுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


*வாக்காளர் பட்டியலுக்கான மென்பொருளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்து, அதை நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான அமைச்சரவை செயலாளர் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். 


*இது தேர்தல் ஆணையத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையிலான பிளவை குறிப்பதுடன், அதன் செயல்பாடுகள் குறித்த சந்தேகத்தையும் வெளிப்படுத்துகிறது. 

சுக்பீர் சந்து எதிர்ப்பு தெரிவித்து எழுதிய ஒரு கடிதத்தில், ‘இரண்டு ஆணையர்களின் எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தல்களுக்கு முரணாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. அதன் நடவடிக்கை அதிகாரபூர்வமற்றது மற்றும் சட்ட விரோதமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். 


மிக சமீபத்தில் எப்போதும் உள்ள வழக்கத்திற்கு மாறாக, வாக்காளர் பட்டியலின் தகவல் தொழில்நுட்ப அமைப்பை கண்காணிக்கும் அதிகாரத்தை குறைக்கும் வகையில் செய்யப்பட்ட பணி ஒதுக்கீடு மாற்றங்கள் குறித்து சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி இருவரும் தனித்தனியாக அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர். 


இந்த மாற்றங்கள் தங்களது கவனத்துக்கு வராமலேயே செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். 


புதிய வாக்காளர்கள் யார்?

படிவம் 6 ஏன் மாற்றப்பட்டது? 


இந்த விவகாரத்தில் முக்கியமானது புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6ல் செய்யப்பட்ட மாற்றமாகும். 


இந்த ஆண்டு புதிதாக விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் அல்லது அவரது பெற்றோர்களோ தாத்தா பாட்டியோ இதற்கு முந்தைய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.


இந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் விண்ணப்பதாரர்களால் மேல் நடவடிக்கைக்கு செல்ல முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டது. 


அரசு விதிகளில் திருத்தம் கொண்டு வராமல் படிவம் 6- ஐ இத்தகைய முறையில் மாற்ற முடியாது என்று விவேக் ஜோஷி மே மாதத்திலே எச்சரித்திருக்கிறார். இதை சுக்பீர் சந்துவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். எனினும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


ஆகஸ்ட் 13ஆம் தேதி சுக்பீர் சந்து, இது அங்கீகரிக்கப்படாதது மற்றும் சட்டவிரோதமானது எனக் கூறி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.


இரண்டாவது பிரச்சினை, வாக்காளர் தரவு தளத்தை அணுகும் அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்பது தொடர்பானது. வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த ஒவ்வொரு அரசியல் குற்றச்சாட்டுக்கும் தேர்தல் ஆணையம் அளிக்கும் மிகப்பெரிய தற்காப்பு வாதமே, “வாக்காளர் பட்டியல் தயாரிப்பு என்பது டெல்லியில் குவிக்கப்படாமல் நாடு முழுவதும் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடம் பரவலாக்கப்பட்ட ஒரு அமைப்பாக செயல்படுகிறது (decentralized) என்பதுதான்.


ஒவ்வொரு தொகுதியின் வாக்காளர் பட்டியலும், களத்தில் சட்டபூர்வ அதிகாரியாக இருக்கும், ‘அதன் தேர்தல் பதிவு அதிகாரியால்’ (ERO) தயாரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. பொதுவாக இந்த அதிகாரி,  சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஆக (வருவாய் கோட்டாட்சியர்) இருப்பார். இந்த வாக்காளர் பட்டியல் தரவுகள் ERONet மற்றும் அதன் மேம்பட்ட வடிவமான ECINet ஆகிய மென்பொருட்களில் பராமரிக்கப்படுகின்றன. 


இந்த சூழலில் கடந்த ஓராண்டாக தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு (ERO) இந்த பட்டியலை அணுகும் வசதி கட்டுப்படுத்தப்படுகிறதா என்று இரு ஆணையர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளனர். 


இந்த ஆண்டு மே மாதம்- மாநிலங்கள் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது ஜோஷி சுட்டிக்காட்டி எச்சரித்தது இதையேதான்.


வாக்காளர் பட்டியல் தரவு தளம் படிப்படியாக மையப்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட சட்டபூர்வ அதிகாரிகளை தவிர யாரும் தரவு தளத்தில் எந்த மாற்றமும் செய்வதற்கான அதிகாரத்தை பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த ஒரு விரிவான தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்துள்ளார். 


இந்த விவகாரத்தை சுக்பீர் சந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியலை பராமரிக்கும் டிஜிட்டல் அமைப்பான ERONet இணையதளத்தை அணுகுவதற்கு தங்களுக்கு சரியான மற்றும் முழுமையான அனுமதி கிடைக்கவில்லை என்று மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகள் கூறுவதாக தெரிவித்திருந்தார். 


மேலும் “சட்டபூர்வ அதிகாரிகளுக்கு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள சரியான, முழுமையான அணுகல் மற்றும் தன்னிச்சையாக செயல்படும் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை இயக்குனர் சீமா கண்ணாவுக்கு எந்தவிதமான சட்டபூர்வ அதிகாரமும் இல்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். 


மேற்கு வங்கத்தில் மேல் முறையீடுகளுக்கு அனுமதி அளித்தது யார்?

மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது மிகப்பெரிய சர்ச்சையும் எதிர்ப்பும் எழுந்தது. தேர்தலில் இது ஏற்படுத்திய தாக்கம் குறித்து நேரடி ஆதாரம் எதுவும் இல்லை.


அங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 49 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது. இருப்பினும் இந்த 49 தொகுதிகளின் முடிவுகள் இரு கட்சிகளுக்கும் இடையே கிட்டத்தட்ட சமமாகவே இருந்தன. 26 தொகுதிகளை பாஜகவும், 21 தொகுதிகளை திரிணமுல் காங்கிரசும் கைப்பற்றின. 


ஆனால் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்ட விதம் தொடர்பாக எழுந்த புகார்கள் காரணமாக பிப்ரவரி 2026 இல்,  உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டது. 60 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை சரி பார்க்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திடமிருந்து பறித்து நீதித்துறை அதிகாரிகளிடம் உச்ச  நீதிமன்றம் ஒப்படைத்தது. 


இறுதியில் இவர்களில் 27 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பின்னர் தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்டன.


அந்த முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட தீர்ப்பாயங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இந்த நிலையில் கடந்த வாரம் தீர்ப்பாயங்களில் 38 லட்சம் மேல்முறையீடுகள் நிலுவையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதில் 22.21 லட்சம் மேல்முறையீடுகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களால் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க கோரி தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். 


மீதமுள்ள 16.10 லட்சம் மேல்முறையீடுகள் நீதித்துறை அதிகாரிகளால் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு எதிராக, அவர்களின் பெயர்களை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்டவை ஆகும்.


இந்த மேல்முறையீடுகளை யார் தாக்கல் செய்தது என்பதை பற்றி தேர்தல் ஆணையம் எதையும் தெரிவிக்கவில்லை. 

இந்த நிலையில் இந்த மேல்முறையீடுகளை தேர்தல் ஆணையத்தின் சார்பில் யார் தாக்கல் செய்ய அதிகாரம் பெற்றார்கள் என்பது தான் சுக்பீர் சந்து எழுப்பிய முக்கிய கேள்விகளில் ஒன்றாகும். 


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு சுக்பீர் சந்து எழுதிய கடிதத்தில், ‘இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இந்த மேல்முறையீடுகளை தாக்கல் செய்ய யாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. அந்த அதிகாரத்தை வழங்கியது யார்? என்று கேள்விகளை எழுப்பியுள்ளார். 


மேலும் இந்த மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படை அல்லது நடைமுறைகள் குறித்து தனக்கோ ஆணையர் விவேக் ஜோஷிக்கோ அல்லது மேற்கு வங்கத்தின் தற்போதைய முதன்மை தேர்தல் அதிகாரிக்கோ  எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை

என்பதையும் அவர் பதிவு செய்துள்ளார். 


கோவாவில் மென்பொருள் சிக்கல்…

கோவாவில் ஏற்பட்ட மற்றொரு சம்பவம் இந்த விவாதத்தின் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, தர்க்க ரீதியான முரண்பாடு என மென்பொருளால் அடையாளம் காணப்பட்ட வாக்காளர்களிடம் ஆவணங்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.  இதில் 97 வாக்காளர்களும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதியானவர்கள் என அதிகாரிகள் முடிவு செய்த போதும், அந்த முடிவை மென்பொருளில் பதிவு செய்வதற்கான வசதி இல்லாததால் அவர்கள் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை


இது தொடர்பாக பிப்ரவரி 11 முதல் 17 வரை கோவா மாநில முதன்மை தேர்தல் அதிகாரியின் அலுவலகம், அந்த மாநிலத்தின் பொறுப்பு அதிகாரியான மூத்த துணை தேர்தல் ஆணையர் ஞானேஷ் பார்திக்கு எட்டு முறை அவசர கடிதங்களை எழுதியது.


இந்த கடிதங்களின் நகல்கள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை இயக்குநர் சீமா கண்ணாவுக்கும் அனுப்பப்பட்டன. அதில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முன்பு மேற்கொள்ளப்பட்ட நீக்க நடவடிக்கைகளை திரும்ப பெற தேர்தல் பதிவு அதிகாரிகளை அனுமதிக்கும் “ரோல் பேக்” வசதியை கோரி இருந்தனர். 


ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. தொழில்நுட்ப வசதியும் உரிய நேரத்தில் மென்பொருளில் செயல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக கோவாவின் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து அந்த 97 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 


இந்த சம்பவம் மென்பொருள் முடிவுகளுக்கு சட்டபூர்வ அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளுக்கும் இடையே ஏற்படக்கூடிய முரண்பாடுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. 


அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 இன் கீழ் அமைக்கப்பட்ட  அரசமைப்பு அமைப்பான தேர்தல் ஆணையம், சம அந்தஸ்து கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களைக் கொண்டு இயங்குகிறது.


இதில் தலைமை தேர்தல் ஆணையர் முதன்மையானவரே தவிர தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது. 


தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பணி காலம்) சட்டம் 2023 இன் பிரிவு 18 படி, ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடிந்தவரை ஒருமனதாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். 


ஒருவேளை தலைமை தேர்தல் ஆணையருக்கும் மற்ற தேர்தல் ஆணையர்களுக்கும் இடையே எந்த ஒரு விஷயத்திலாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அந்த விவகாரம் பெரும்பான்மையினரின் கருத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.


தலைமை தேர்தல் ஆணையர் தனித்து முடிவெடுப்பது சட்டவிரோதமானது ஆகும். 


முக்கிய விவரங்கள் 

*கடந்த பத்து மாதங்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகளுக்கு எதிராக மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் 14 முறை அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனைகளை பதிவு செய்துள்ளனர். 


*தங்களது கவனத்துக்கு அல்லது ஒப்புதலோ இன்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக இந்த இரு ஆணையர்களும் கூறுகின்றனர். 


*13 கோடி வாக்காளர்களின் பெயர்களை பாதிக்கும் சிறப்பு தீவிர திருத்தப்பணி விவகாரத்தை மையமாக வைத்தே இந்த மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 


*புதிய வாக்காளர் பதிவுக்கான படிவம் 6ல் செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத சட்டவிரோத மாற்றங்களை தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.


*தகவல் தொழில்நுட்ப பிரிவுகள் வாயிலாக வாக்காளர் பட்டியல் தரவுகளும் படிப்படியாக மையப்படுத்தப்படுவது குறித்த கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. 


*தற்போது மையப்படுத்தப்பட்ட மென்பொருள், கள அளவில் தேர்தல் அதிகாரி எடுத்த முடிவுகளை மீறி தகுதியுள்ள வாக்காளர்களை தடுக்கிறது. 


*டிஜிட்டல் அமைப்புகளை மையப்படுத்துவது, தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான தேர்தல் ஆணையத்தின் பாரம்பரியமான பரவலாக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாட்டை சீர்குலைக்கிறது. 


*சட்ட ரீதியான அதிகாரிகளின் அணுகலை கட்டுப்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்பத் துறை இயக்குனரின் சட்டபூர்வ அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். 


*உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இருந்த போதிலும் கோவாவில் மென்பொருள் தொடர்பான சிக்கல்களால் 97 வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்தனர். 


*எதிர்ப்பு குறித்த நகல்கள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் அனுப்பப்பட்டன. இது முன் எப்போதும் இல்லாத வகையிலான அரசியலமைப்பு அதிகார மோதலை உணர்த்துவதாக உள்ளது. 


*கடந்த கால தனிநபர் எதிர்ப்புகளை போல அல்லாமல் இந்த பிளவினால் ஆணையத்தின் பெரும்பான்மையினர் முடிவெடுப்பதில் இருந்து ஓரங்கட்டப்படுகின்றனர். 


*தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஒருமனதாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 2023 ஆம் ஆண்டு சட்டம் மிகத் தெளிவாக கூறுகிறது.


ஆனால் இந்த விதியை மீறி தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படும் போது ஆணையத்தின் தலைவருக்கும் மற்ற ஆணையர்களுக்கும் இடையே எவ்வளவு கடுமையான மோதல்கள் மற்றும் பதற்றமான சூழல் உருவாகின்றன என்பதை இவை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 


இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையரும் மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் சந்தித்து முழுமையான ஒரு கூட்டத்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு மாத இடைவெளிக்கு பிறகு நடைபெற்ற முதல் முழுமையான கூட்டம் இது .


எனினும் இந்தக் கூட்டத்தில் இரு தேர்தல் ஆணையர்களும் எழுப்பிய குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதம் நடந்ததா, அவற்றை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றும்  தெரிவித்துள்ளது,


ஞானேஷ் குமார் செய்த குளறுபடிகள்


மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் 2025 அக்டோபர் 25ல் தொடங்கி அதே ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி நிறைவு பெற்றது. மொத்த வாக்காளர்கள் 50.99 கோடியாக இருந்த சூழலில், திருத்தத்திற்கு பின்னர் 45.81 கோடியாக குறைந்தனர். கிட்டதட்ட 10.2 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2.05 கோடி பேர் நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.


இதற்கடுத்து மேற்குவங்க மாநிலத்தில் 83.86 லட்சம் பேர், குஜராத் மாநிலத்தில் 68 லட்சம் பேர், மத்தியப் பிரதேசத்தில் 34.25 லட்சம் பேர், சட்டீஸ்கர் 25 லட்சம் பேர், ராஜஸ்தான் 31 லட்சம் பேர், தமிழ்நாடு 74 லட்சம் பேர், கேரளா 9 லட்சம், கோவா 1.28 லட்சம், புதுச்சேரி 77 ஆயிரம், அந்தமான நிகோபார் தீவுகள் 52 லட்சம், லட்சத்தீவுகள் 206 பேர் என தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்டனர்.


எஸ்.ஐ.ஆர் பணிகளை தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்கள்

பிகார் - நவம்பர் 2025

அசாம் – ஏப்ரல் 2026

கேரளா – ஏப்ரல் 2026

புதுச்சேரி – ஏப்ரல் 2026

தமிழ்நாடு – ஏப்ரல் 2026

மேற்குவங்கம் – ஏப்ரல் 2026



இந்த தேர்தல்கள் அனைத்திலும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். உதாரணமாக மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலை எடுத்து கொள்ளலாம். அங்கு நடந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து முதல்முறை ஆட்சியை பிடித்தது. எதிர்க்கட்சி வரிசையில் திரிணாமூல் காங்கிரஸ் அமர்ந்தது. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு சதவீதம் 5 மட்டுமே. ஆனால் எஸ்.ஐ.ஆர் மூலம் மேற்குவங்க மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் சதவீதம் 10.9 சதவீதம். கிட்டதட்ட 84 லட்சம் பேர்.


அப்படியெனில் தேர்தல் முடிவுகளையே மாற்றக்கூடிய அளவிற்கு எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் இருந்தன என்ற குற்றச்சாட்டு அமைந்துள்ளது. இதுபற்றி அப்போதே பல அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தனர். ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினர். தற்போது தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே மோதல் இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


சுக்பீர் சிங் சந்து

அமிர்தசரசில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். 1988 பேட்ச் உத்தரகாண்ட் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், 2021 முதல் 2024 வரை அந்த மாநிலத்தின் தலைமைச்  செயலாளராக பணியாற்றியுள்ளார். 


2019 முதல் 2021 வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவராகவும், 2024 பிப்ரவரி மாதத்தில் லோக்பால் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 

மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ள இவர், 2007 முதல் 2014 வரை மூன்று வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 4 முதலமைச்சர்களுக்கு முதன்மைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.


2024 மார்ச் 15ஆம் தேதி தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.


விவேக் ஜோஷி…

ஹரியானா கேடரை சேர்ந்த 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி இவர். ஹரியானா மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஜவுளி துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மற்றும் நிதி அமைச்சகங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் இயக்குநர்கள் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

ஜெனிவாவில் உள்ள கிராஜுவேட் இன்ஸ்டிடியூட்டில் சர்வதேச பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஐஐடி ரூர்க்கியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்.

2025 பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி