தலைதெறிக்க ஓடும் .
தலைதெறிக்க ஓடும் . வேட்பாளர்கள்!
மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் விஜய் நிறுத்திய வேட்பாளர்களை பொதுமக்கள் விரட்டோ விரட்டு என்று விரட்டி அடிக்கிறார்கள். மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் தலைதெறிக்க ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இருவருமே அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள். அவர்களை தனது சுயநலத்துக்காக, குதிரை பேரம் நடத்தி அக்கட்சி உறுப்பினர்களில் இருந்து விலக வைத்தார் விஜய். அவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகினார்கள்.
அந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. செய்யப்பட்ட பேரத்தின் அடிப்படையில் அவர்களையே வேட்பாளர்களாக அறிவித்தார் விஜய்.
இதுதான் அப்பட்டமான, பச்சையான குதிரை பேரம் என்பது. அதைச் செய்துவிட்டுத்தான் வெள்ளையும் சொள்ளையுமாக பட்டு வேட்டி
சட்டையுடன் ஊரைச் சுற்றிக் கொண்டு இருக்கிறார் விஜய்.
ஆனால் அவரால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களால் ஊருக்குள் நடமாட முடியவில்லை. வோட்டுக் கேட்டுப் போகமுடியவில்லை.
எங்கே போனாலும் பொதுமக்கள், வாக்காளப் பெருமக்கள் விரட்டுகிறார்கள். ஊடகங்களில் இந்தக் காட்சிகள் அதிகமாக வரத் தொடங்கி இருக்கின்றன.
‘துரோகியே வெளியில் போ’ என்று மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலை யும், தாராபுரத்தில் சத்தியபாமாவையும் விரட்டுகிறார்கள் மக்கள்.
‘ஊருக்குள் வரத் தடை, துரோகி பட்டம், வேட்பாளர்கள் விரட்டி அடிப்பு,
தடுமாறும் தாராபுரம், மல்லுக்கட்டும் மதுராந்தகம், கை கொடுக்குமா விஜய் பிரச்சாரம்?’ என்று தலைப்பு போட்டு இக்காட்சிகளை விவரித்துள்ளது
‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழ். ( 25.9.2029)
‘‘கான்ஃபிடெண்டாக இருங்க என்று விஜய் சொன்னார். இப்போது அவரே சந்தேகத்துடன் தான் இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்கிறார்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அந்த இரண்டு வேட்பாளர்களும் மை காய்வதற்கு முன் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். மக்களை ஏமாற்றிச் சென்றவர்களே மீண்டும் ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு இருப்பதை தொகுதி மக்களே ரசிக்கவில்லை.
த.வெ.க.வில் இருப்பவர்களும் மரகதம் குமாரவேல் நிறுத்தப்பட்டு இருப்பதை ஆதரிக்கவில்லை. வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கட்சி சாராத பொதுமக்களும் மரகதம் மீது கோபத்தில் இருக்கிறார்கள்.
‘நாம் நம்பி இந்தம்மாவுக்கு வோட்டு போட்டா, இந்தம்மா நம்மளை முட்டாள்னு நினைச்சு விஜய் கட்சிக்கு போயிட்டாங்க. நாம் யாருன்னு இந்தம்மாவுக்கு உணர்த்தணும்’ என்று ஊர் மக்களே கோபத்தை வெளிப்படுத்தி பேசத் தொடங்கி விட்டார்கள் என்று ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ எழுதி இருக்கிறது.
‘‘தாராபுரம் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும் போது, ‘துரோகி.. துரோகி ஒழிக’ என்று பொதுமக்கள் கோஷம் போட்டனர்.
பல கிராமங்களில் வோட்டுக் கேட்கச் செல்லும் போது ஊருக்குள்ளேயே விடாமல், ‘யாரைக் கேட்டு ராஜினாமா செய்தீர்கள்? மீண்டும் வோட்டுக் கேட்டு வந்துட்டீங்களா? இப்போ உங்களுக்கு
வோட்டுப் போட்டா, மறுபடி ராஜினாமா செய்யமாட்டீங்கன்னு எப்படி
நம்புறது?’ என்று ஏகத்துக்கும் வாக்காளர்கள் அவரை வறுத்தெடுக்கிறார்கள்” என்றும் எழுதி இருக்கிறது ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழ்.
‘‘ஓடு, ஓடு, ஓடு! த.வெ.க. வேட்பாளர்களை துரத்தும் மக்கள்’ என்று அட்டைப்படக் கட்டுரை தீட்டி இருக்கிறது ‘நக்கீரன்’ இதழ். ( செப்டம்பர் 23–25)
‘‘மரகதம் குமரவேல் எங்கு போனாலும் பொதுமக்கள் கேள்வி கேட்டு விரட்டி அடிக்கிறார்கள்.
தற்போது போலீஸ் பாதுகாப்புடன் தான் அவர் வாக்கு சேகரிக்கும் பரிதாபச் சூழலில் இருக்கிறார். தாராபுரத்தில் சத்தியபாமா எந்தப் பக்கம் போனாலும், ‘அந்தப் பக்கம் போயிடாதீங்க’ என்று
த.வெ.க.வினரே சொல்கிறார்கள்.
வெறுவேடம்பாளையம் கிராமத்துக்கு வந்தபோது, ‘ஒழுங்கா போயிடு’ என்று அவரது முகத்துக்கு நேராக பொதுமக்கள் சொன்னார்கள். பி.ஏ.பி.வாய்க்கால் மூலம் உப்பாறு அணைக்குத் தண்ணீர் கொண்டு வருவதை சத்தியபாமா தலையிட்டு நிறுத்தியதாக அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
இது போன்ற எதிர்ப்பால் பாதியிலேயே திரும்பினார். ‘ஏதோ ஒரு ஆர்வத்தில் நடிகர் விஜய்க்கு வோட்டுப் போட்டு விட்டோம். அது தவறு என்று இப்போது உணர்கிறோம்’ என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்” என்று எழுதி இருக்கிறது ‘நக்கீரன்’.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு அச்சரப்பாக்கம் வடக்குப் பகுதியில் பரப்புரை செய்யப் போனார் அமைச்சர் ஆனந்த். அவரால் பாதித்தூரம் கூட போகமுடியவில்லை. பொதுமக்கள் மறித்தார்கள்.
புஸ்சி ஆனந்தால் என்ன சொல்ல முடியும்? ‘கிராமத்தை விட்டு துரோகியே வெளியேறு’ என்று முழக்கம் எழுப்பினார்கள் மக்கள்.
எதிர்ப்பை தாக்குப் பிடிக்க முடியாமல் அமைச்சர் ஆனந்த் வெளியேறி விட்டார். பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பல இடங்களில் த.வெ.க. வேட்பாளருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் பொதுமக்கள். போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றால் ஊருக்குள் போக முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
தாராபுரம் சத்தியபாமாவுக்கு மட்டும் 60 போலீஸார் உடன் செல்கிறார்கள். சத்தியபாமா அ.தி.மு.க. வேட்பாளராக தாராபுரத்தில் நின்ற போது கொடுத்த துண்டுப் பிரசுரத்தை இப்போது எடுத்து அதில் சுண்டல் கட்டித் தந்து கொண்டு இருக்கிறார்கள்.
‘நன்றி சொல்லக் கூட வராத நீங்கள் இப்போது வாக்குக் கேட்டு மட்டும் ஏன் வருகிறீர்கள்?’ என்று மரகதம் குமரவேல் முகத்துக்கு நேராகவே மக்கள் கேட்கிறார்கள்.
இந்த எதிர்ப்பை சமாளிக்க வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார் மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேல். இவை வீடியோக்களாக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் த.வெ.க.வுக்கு உண்மையான நிலைமை இதுதான். இது ஏதோ மரகதம் குமரவேல், சத்தியபாமாவுக்கு ஏற்பட்ட கதி அல்ல.
விஜய் கதி இதுதான்.
விஜய் சாயம் வெளுக்கத் தொடங்கி இருக்கும் காட்சிகள்தான் இவை.
திருட்டு வெளியில் நடக்கவில்லை, வீட்டிற்குள்ளேயே நடந்துள்ளது
"சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தேர்தல் சதி / வாக்குத் திருட்டு" என்று வர்ணிப்பதற்கு பின்வரும் ஐந்து ஆணித்தரமான காரணங்கள் உள்ளன:
இத்தனை காலம் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் எழுப்பும்; தேர்தல் ஆணையம் நடுநிலையான நடுவராக நின்று அதை விசாரிக்கும்
ஆனால் இந்த முறை,
திருட்டு வெளியில் நடக்கவில்லை, வீட்டிற்குள்ளேயே நடந்துள்ளது
நடுவர் வீட்டிற்கு உள்ளேயே இருக்கும் இரண்டு அதிகாரப்பூர்வ ஆணையர்களே "எங்களுக்குத் தெரியாமல் சட்டவிரோதமாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன" என்று புகார் எழுப்பியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை ஆணையத்திற்குள் இருந்தே நொறுக்கிய முதல் சம்பவம் இதுதான்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ், 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
களத்தில் இருக்கும் அதிகாரிகளுக்குத் தெரியாமல், டெல்லி சர்வரில் ஒரே ஒரு பொத்தானை அழுத்தி லட்சக்கணக்கான மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் அளவுக்கு ஒரு ரகசிய அமைப்பு செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
ஒரு குடிமகனுக்குத் தெரியாமலேயே அவரது வாக்குரிமையை அடியோடு அழிப்பது ஊழலை விடக் கொடூரமான ஜனநாயகக் குற்றம்.

