மீண்டும் இருண்ட காலம்..?
@ இஸ்ரேல்பிரதமர் வந்தவுடன் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகள் கூட்டாக வெளிநடப்பு.
@ ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் நுகர்வோர் மீது சுமத்தப்படாது!
# செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கண்டிகை அரசுப் பள்ளியில் 10ஆம்வகுப்புமாணவிகூட்டுபாலியல்வன்கொடுமை!
@ நாகர்கோவில் அருகே யூடியூபர் தம்பதியின் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து 118 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை!
@ சென்னை செங்குன்றம் அருகே காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை.
@ “ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க மீது பொய்யாக அவதூறு.. தவெகவின் இழிவான செயல்” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
@அனலாக் பன்னீர் விற்பனைக்கு தடை: எப்எஸ்எஸ்ஏஐ .
@ பாக். மீண்டும் தாக்குதல்: ஆப்கானில் 4 பேர் பலி: பதிலடி உறுதி என தலிபான்.
@ இமயமலைப் பகுதிகளில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள நேபாளம், இந்தியா, சீனா நாடுகள் கரம்கோர்க்க வேண்டும்: நேபாள பிரதமர்.
@ ரூ.94,000 கோடி மோசடிக்கு பிறகும் மகாதேவ் சூதாட்ட செயலி இன்னும் செயல்படுகிறது:அமலாக்கத்துறை தகவல்.
@ தவெக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட அமைச்சர் அருண்ராஜ் விரட்டியடிப்பு: எங்களை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது என தாராபுரம் மக்கள் ஆவேசம்
@ குதிரை பேரம்தான் தூய்மையான ஆட்சியா? அதிமுக தொண்டர்கள் உழைப்பால் வென்றவரை விலைபேசி ராஜினாமா செய்ய வைத்துள்ளனர்: ஆண்மை இருந்தால் நேருக்கு நேர் மோத வேண்டும்: முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி சவால்.
@ உதவி கமிஷனர் யாஸ்மின் உள்பட கூடுதல் டிஜிபி அருண், கோவை கமிஷனர் கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு.
@ தொழிலதிபர் ஜெம் வீரமணி பாலியல் விவகாரம் நட்சத்திர ஓட்டலில் ஜான்பாண்டியனுடன் சாந்தி சந்திக்க ஏற்பாடு செய்தேன்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் பரபரப்பு பேட்டி
மாபெரும் வளர்ச்சி திட்டங்களை அடுத்தடுத்து நிறுத்திய
நடிகர் விஜய்!
ஒரு மாநிலத்தில் புதிய சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டால் மட்டுமே வேலைவாய்ப்புகள் பெருகும், போக்குவரத்து நெரிசல் குறையும், பொருளாதாரமும் வளரும்.
ஆனால், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு வந்த பல முக்கிய திட்டங்கள் தற்போது தவெக அரசால் திடீரென ரத்து செய்யப்பட்டோ அல்லது அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் முடங்கியோ கிடக்கின்றன.
பல திட்டங்களுக்கு விரிவான ஆய்வு அறிக்கைகள், நிலம் கையகப்படுத்தும் பணிகள், சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
ஆனால் மீண்டும் களப்பிரர் பாலம் தமிழ்நாட்டில் வந்து விட்டதோ எனும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கேடு என அனைத்திலும் தமிழ் மாநிலதே முடங்கி இருண்டு முடக்கிவைத்து விட்டது நடிகர் விஜய் அரசு.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த முடக்கம் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முடங்கிப்போன அந்த 10 முக்கிய திட்டங்களைப் பற்றி இங்கு எளிமையாகப் பார்ப்போம்.
1. பரந்தூர் இரண்டாவது விமான நிலையம்
சென்னையின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையைச் சமாளிக்க காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் ₹20,000 கோடிக்கு மேல் மதிப்பில் புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. சுமார் 7 முதல் 8 ஆண்டுகள் பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்ட இத்திட்டம், விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் தற்போதைய அரசால் ரத்து செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
2. பரந்தூர் மெட்ரோ ரயில் நீட்டிப்பு
பூந்தமல்லியிலிருந்து பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது விமான நிலையத் திட்டமே ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த மெட்ரோ நீட்டிப்பு திட்டமும் முழுமையாக முடங்கிப் போயுள்ளது.
3. சர்வதேச விளையாட்டு நகரம்
செம்மஞ்சேரி பகுதியில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மையங்களை உள்ளடக்கிய பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டம் ஆலோசனையில் இருந்தது. தற்போதைய சூழலில் இத்திட்டத்திற்கான பணிகளும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
4. கிழக்கு கடற்கரை சாலை உயர்மட்ட மேம்பாலம்
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 13 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. கடற்கரை பகுதியை இணைக்கும் இந்த மிக முக்கிய சாலை திட்டமும் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
5. கிண்டி - வேளச்சேரி உயர்மட்ட பாலம்
தென் சென்னையின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள வேளச்சேரி - கிண்டி பாதையில் வாகனங்கள் எளிதாகச் செல்ல திட்டமிடப்பட்ட உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
6. கோவை பெரியார் நூலகம்
கோவையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட பெரியார் நூலகத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்து தயாராக உள்ளது. ஆனால், கட்டிடம் தயாராக இருந்தும் இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
7. ஓசூர் டைடல் பார்க்
பெங்களூருக்கு அருகிலுள்ள ஓசூரில் ஐடி துறை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க டைடல் பார்க் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான வடிவமைப்பு முடிந்து, சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்பட்ட நிலையில், டெண்டர் கட்டத்திலேயே இப்பணி தேக்கமடைந்துள்ளது.
8. ஓசூர் நாலேஜ் காரிடார்
ஓசூர் பகுதியை சர்வதேச கல்வி மற்றும் தொழிற்கல்வி மையமாக மாற்றும் உத்தேசத் திட்டமான அறிவுசார் வழித்தடப் பணிகளும் நில அளவிலேயே கூட இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
9. கோவை சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்
கோவையில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க அரசு டெண்டர் கோரியது. ஆனால், கட்டுமான நிறுவனங்கள் யாரும் ஏலம் எடுக்க முன்வராததால் இத்திட்டம் தொடக்க நிலையிலேயே முடங்கியுள்ளது.
10. சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு கடைசி பகுதி
எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் வரை வெளிவட்டாரங்களை இணைக்கும் 133 கி.மீ சுற்றுச்சாலை திட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் முடிந்துவிட்டன. ஆனால் சிங்கபெருமாள்கோவில் - மாமல்லபுரம் இடையேயான கடைசி கட்டப் பணிகள் டெண்டர் திறக்கப்படாமலும் நிலுவையிலும் உள்ளன.
பல ஆண்டுகள் திட்டமிடப்பட்டு, மக்களின் வரிப்பணத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்ட திட்டங்கள் ஆட்சி மாற்றங்கள் அல்லது நிர்வாக தாமதங்களால் அடுத்தடுத்து நிறுத்தப்படுவது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை நேரடியாகப் பாதிக்கும்.
அரசு இந்தத் திட்டங்களை மறுபரிசீலனை செய்து, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய மாற்று வழிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் .



