"பவர்" கட்...?
🗞️மக்கள் வெற்றி பெற வைத்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அவர்கள் முதுகில் குத்திவிட்டு ராஜினாமா செய்ததாக உதயநிதி சாடல். 7 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தவெக பெட்டி கொடுத்து வாங்கியுள்ளதாக தாராபுரம் பரப்புரையில் குற்றச்சாட்டு.
🗞️அமைச்சர்கள் நிகழ்ச்சிகளிலேயே மின்வெட்டு என்றால், சாமானிய மக்கள் கதி என்ன? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி. மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை, ரீல்ஸ் தான் எடுத்திருக்கிறார் என்றும் விமர்சனம்.
🗞️மதுராந்தகம் தவெக வேட்பாளருக்கு எதிராக, அதே கட்சியின் பல்லாவரம் எம்.எல்.ஏ. காமாட்சி அதிருப்தி. தொகுதியிலும் மரகதம் குமரவேலுக்கு எதிர்ப்பு இருப்பதாக செல்போனில் பேசிய வீடியோ வெளியானது.
🗞️நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே ஜெம் கிரானைட்ஸ் வீரமணி கைது செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி பேட்டி. தனது உத்தரவுப்படியே வீரமணி கைது செய்யப்பட்டதாக முதலமைச்சர் விஜய் பொய் கூறியுள்ளதாக குற்றச்சாட்டு.
🗞️மின் கட்டண கணக்கீட்டு பணியை தனியாரிடம் வழங்கும் தவெக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு. அன்புமணி, மு.வீரபாண்டியன், பெ.சண்முகம், டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்.
🗞️மதுராந்தகத்தில் அரிக்கேன் விளக்குகளுடன் திமுக நூதன பரப்புரை. திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து எ.வ.வேலு, மல்லை சத்யா உள்ளிட்டோர் பிரச்சாரம்.
🗞️மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார். தேர்தல் ஆணையம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பேசியது சட்டவிரோதம் என்றும் குற்றச்சாட்டு..
🗞️அமைச்சர்களுடன் வாக்கு கேட்டு சென்ற தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவிற்கு எதிர்ப்பு. வாக்குவாதம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் போராட்டம்.
சட்டம் ஒழுங்கு பிரிவு இனி RTI சட்டத்தில் வராது! -தவெக அரசு புதிய உத்தரவு
🗞️SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு வலுக்கிறது எதிர்ப்பு. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் இந்திய அரசியலில் பரபரப்பு.
🗞️கேரள முன்னாள் தலைமைச் செயலாளரை பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வற்புறுத்தல். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீதான புதிய குற்றச்சாட்டால் மீண்டும் சர்ச்சை.
‘பவர் கட்’
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு மின்வெட்டு பிரச்னை பெரிய அளவில் தலைதூக்கியுள்ளது. நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பகலில் மட்டுமின்றி நள்ளிரவிலும் மின்விநியோகம் பெருமளவில் தடைபடுகிறது.
இதனால் தலைநகர் சென்னை, மதுரை, விருதுநகர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பகல் மற்றும் நள்ளிரவு நேரங்களில் மக்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்விகள் கேட்கின்றனர். ஆனால், மின்வெட்டு தொடர்பாக இதுவரை தவெக அரசு தரப்பில் தெளிவான விளக்கம் இதுவரை அளிக்கப்படவில்லை.மின்துறை அமைச்சரான நிர்மல்குமார், ‘காற்றாலையில் எதிர்பார்த்த மின்சாரம் வரவில்லை. ஆங்காங்கே சாலை உள்ளிட்ட சீரமைப்பு பணிகளால் மின்தடை ஏற்படுகிறது’ என காத்துவாக்குல சொல்லி விட்டு கிளம்பி விட்டார். பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘காற்று நின்னு போச்சு’ என்று கூறி மிரள வைத்துள்ளார்.
மேலும், ஒரு மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க எண்ணும் ஒரு நிறுவனம், முதலில் அம்மாநில அரசை கேட்டுக் கொள்வது தடையில்லா மின்சாரம் தான். இன்று வரை தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இவைகள் தொடர்ந்து இயங்குவதற்கு கட்டாயம், தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆகையால் தான், ஒரு மாநிலத்தின் தலைநகர் மற்றும் தொழில் நகரங்களில், தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை அரசு கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.
ஒரு வேளை மின்விநியோகம் தடைபடும் சூழல் ஏற்பட்டால், மாற்று வழியை யோசித்து சீரான மின்விநியோகத்தை வழங்க வேண்டும். ஆனால், இதைப்பற்றி எல்லாம் தவெக அரசு யோசிக்கவாவது செய்கிறதா என்றால் அதுதான் இல்லை.
எல்நினோ தாக்கத்தால் வெப்பத்தின் கால அளவு நீட்டிக்கப்பட்டிருக்கும் சூழலில், மின்விநியோகத்தை கூடுதலாக்க வேண்டுமென்று திட்டமிட்டதாகவும் தெரியவில்லை. தமிழகத்தில் தொழில் மாவட்டங்களில் ஒன்றான கோவை மாவட்டத்திலும் மின்வெட்டு பிரச்னை பாடாய்படுத்துகிறது.
Geographic Reference
இங்குள்ள சிறு, குறு தொழிற்சாலைகள் மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. அறிவிக்கப்படாத பல மணி நேரம் மின்வெட்டால் தொழில் உற்பத்தி இங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக இம்மாவட்டத்தில் நிலவும் மின்வெட்டால் சுமார் ரூ.50 கோடிக்கு மேல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சி அளிக்கின்றன.
தொழில் முதலீடு என்ற பெயரில் லண்டன் சென்று வந்துள்ள முதல்வர் விஜய், அடுத்ததாக பல வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அதற்கு முன்னால் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டை சமாளிப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். ‘இப்பத்தான் இதையே யோசிச்சீங்களா...’ என ஒரு சினிமா டயலாக் வரும்.
அதுபோல வெளிச்சந்தைகளில் மின்கொள்முதல் தொடர்பாக இப்போதுதான் மின்துறை அமைச்சர் பேசத் தொடங்கியிருக்கிறார். இனியாவது, துரிதமாக செயல்பட்டு ‘பவர் கட்’ பிரச்னையை சரி செய்ய அரசு முன்வர வேண்டும்.
இல்லாவிட்டால் மக்கள் வேறுவிதமான ‘பவர் கட்’ கொண்டுவருவதுபற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
