கடைசியில் முதலாவதாக..
* கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி சமயபுரம் அருகே 50க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இணைந்து காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளன.
தமிழகம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படததால், போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
* த.வெ.க. கட்சியை விமர்சித்ததால் என் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. 8 மணி நேரத்துக்கு மேல் என் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
அனைத்து அறைகளிலும் போலீசார் சோதனை செய்ய அனுமதித்தேன்.
வரும் 18ஆம் தேதி என்னை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 18ஆம் தேதி ஆஜராகி விளக்கமளித்து விட்டு தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்கு செல்வேன்
அன்பில் மகேஸ் பேட்டி..
* கர்நாடகாவில் பாகல்கோட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் மேட்டி. இவரின் மருமகள் அங்கிதா ஆர்யரகால்.
அரசு மருத்துவராக பணியாற்றிக் கொண்டே முதுகலை மருத்துவ படிப்பை தொடர்வதும், மாதம் ரூ.70,000 சம்பளம் பெற்றும் மருத்துவமனைக்கு வராமலே உள்ளதும் வெளிச்சமாகியுள்ளது,* தாம்பரம் மாநகராட்சியில் நடந்த டெண்டர் முறைகேடு விவகாரத்தில், மாநகராட்சி ஆணையராக இருந்த பாலச்சந்தர் ஐஏஎஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் கில்லி சரத் .மற்றும் அரசியல் புள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
* சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற குறுகிய காலத்திலேயே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்குத் தாவுவதும், அதனால் மக்களின் வரிப்பணத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதும் வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் இதுகுறித்து நல்ல விதிமுறைகளைக் கொண்டு வரவேண்டும். குதிரை பேரத்தை தேர்தல் ஆணையம் வளர அனுமதிக்கக் கூடாது.
* ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.மேலும், ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை நேர்மையாக, வெளிப்படையாக ஒப்புக் கொள்பவர்கள் உடன் கூட்டணி வைப்பதே நேர்மை எனவும் அவர் தெரிவித்தார்.
* நேற்று சவுதி அரேபியாவின் புனித நகரான மெக்காவை குறிவைத்து ஹவுதி ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாக செய்திகள் வெளியாயின.ஆனால், அந்த ட்ரோனை சவுதி பாதுகாப்புப் படையினர் மெக்காவிற்குள் நுழைவதற்கு முன்பே தடுத்து அழித்துவிட்டதாகக் கூறினர். இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் பாதுகாப்பில் கை வைத்தால் அது ரெட் லைன் கோடு, இதற்குப் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் சவுதி கூட்டணிப் படை அறிவித்துள்ளது.








