,எலக்ட்ரிசியன் படிப்பே மேல்..?
இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் மன்றம் (UFBU) ஆகியவற்றுக்கு இடையே நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
🪫 கரூர் சம்பவத்தில் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் ஓடிப் போனவர் விஜய் என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம். அரிவாள் வெட்டுக்கு போட்டியாக, தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாகவும் குற்றச்சாட்டு.
🚔 துரோகம் செய்தவர்களை கேள்வி கேட்கும் மக்கள் மீது வழக்கு போடுவீர்களா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி. ஆட்சி, அதிகாரம் எல்லாம் எப்போது வேண்டுமென்றாலும் மாறும் என்றும் பேச்சு.
👨🏼⚖️ ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் சாந்தி, மகேந்திர சிம்ஹனிடம் 3 நாட்கள் விசாரணை நிறைவு. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைப்பு.
கணினி படிப்பா வேண்டாம்.?
தச்சர்,எலக்ட்ரிசியன் படிப்பே போதும்!
ஏஐ எல்லா துறைகளிலும் பரவி வேலை வாய்ப்புகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும், முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய 1,20,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
அதேநேரத்தில் அமெரிக்காவில் எலக்ட்ரிஷியன் பணிகளுக்கும் ஏகத்துக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.
இதனால் என் ஜினியர்களை விட அதிக சம்பளத்தை எலக்ட்ரிஷியன்கள் பெற தொடங்கிவிட்டார்கள்..
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அசுர வளர்ச்சி பெருகிறது. மனிதனால், பல மணி நேரம் செய்த வேலைகளை ஏஐகள் சில வினாடிகளில் முடித்து கொடுத்து விடுகிறது.
ஏஐ வருகையால் எவ்வளவோ நன்மைகள் இருந்தாலும் கட்டுப்பாடற்ற ஏஐ வளர்ச்சி வரும் காலத்தில் மனித குலத்திற்கே ஆபத்தாக அமையும் என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
ஏஐயால் இப்படியான ஒரு ஆபத்து வருமா? இல்லையா? என்பது தற்போது வரை உறுதியாக இல்லை என்றாலும் கண்முன்னே தற்பொது எழுந்திருக்கும் அச்சுறுத்தல் எதுவென்றால் வேலைவாய்ப்புதான்.
குறிப்பாக ஐடி துறைகளில் பெருமளவு வேலை இழப்புகள் ஏஐயால் ஏற்பட்டு வருகின்றன. மிட் லெவல், எண்ட்ரி லெவல் பணிகளை ஏஐகள் ஈசியாக முடித்துவிடுவதால் உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
ஐடி செக்டார் மட்டும் இன்றி பல துறைகளில் ஏஐயால் பணி இழப்பு ஏற்படுகிறது. இதனால் இன்ஜினியர்களுக்கான மவுசு குறையைத் தொடங்கி தற்போது எலக்ட்ரிஷியன்கள் வெல்டர்கள், தச்சர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கான தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளதாம்.
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கான டேடா செண்டர்களில் உள்ள கணிணி சாதனங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.இதனால் டேடா செண்டர்களுக்கு தடையில்லா மின் துணை நிலையங்கள், மின்சார அமைப்புகள் உள்ளிட்டவை அமைக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.
இந்த பணிகளை செய்ய பயிற்சி பெற்ற எலக்ட்ரிஷியன்கள் தேவைப்படுவதால் அவர்களுக்கான ஊதியம் கடுமையாக அமெரிக்காவில் உயர்ந்து உள்ளதாம். இந்திய மதிப்பில் ஒரு மாதத்திற்கு 22 லட்சம் வரை எலக்ட்ரிஷியன்களுக்கு அமெரிக்கா கொடுத்து வருகிறதாம்.
இது ஒரு ஏஐ என்ஜினியர்கள் வாங்குவதை விட அதிகமான சம்பளமாகும். டேடா செண்டர்களுக்கான கட்டுமான பணிகளுக்காக கட்டுமான தொழிலாளர்கள் அதிக அளவில் சென்றுவிடுவதால், வீடு கட்டுதல், மருத்துவமனை கட்டுமானம், மின்சார வலையமைப்பு உள்ளிட்ட பிற துறைகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 1.30 லட்சம் கூடுதல் எலக்ட்ரிஷியன்கள் தேவைப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, பிட்டர்க்ள், வெல்டர்கள், தச்சர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் தேவை அதிகரித்துள்ளதாம். அமெரிக்காவில் தற்போதைய நிலை இதுவென்றாலும் வரும் காலத்தில் இந்தியாவிலும் இப்படியான கிராக்கி எலக்ட்ரிஷியன்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் என்று தொழில் துறையினர் கூறுகிறார்கள்.
ஏஐ வளர்ச்சியால் இந்தியாவிலும் தரவு மையங்களின் தேவை அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்தவும் மின்சார இணைப்புகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் இத்தகைய துறையினருக்கே வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.




