தேர்தலை நிறுத்திவிடுவோம்.!

🔸 மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்க சென்ற தவெக வேட்பாளருக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு. வாக்குசேகரிக்க வரக்கூடாது என அனுமதி மறுத்ததால் இரு கட்சியினரிடையே வாக்குவாதம்.🔸 CM விஜய் கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றுவதாக தாராபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. அதிமுகவினரை கூவி கூவி அழைப்பது ஏன்? என்றும் தவெகவுக்கு கேள்வி.🔸 மக்கள் பணி செய்யாமல் திமுக குறித்து மட்டுமே தவெகவினர் பேசுவதாக பிரேமலதா குற்றச்சாட்டு. ஆட்சிக்கு வந்து 4 மாதங்களில் மக்கள் நலத் திட்டங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் விமர்சனம்.🔸 ஈரோடு, நாமக்கல், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.🔸 மதுரையில் விஜயைக் காண வந்த 16-க்கும் மேற்பட்டவர்கள் மயக்கம். மருத்துவமனை அருகில் ஏற்பட்ட வாகன நெரிசலால் சிக்கிய ஆம்புலன்ஸ்.🔸 லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல். இஸ்ரேல் தாக்குதலில் இடிந்து தரைமட்டமான கட்டடங்கள்🔸 ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைக்குத் தயார். அமெரிக்கா தாக்கினால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை.




தேர்தலை நிறுத்திவிடுவோம்.! தவெகவினர் மிரட்டல்!

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே தண்டராயப்பேட்டை பகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பொதுமக்களுடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டசபை தனித் தொகுதியில் அடுத்த மாதம் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக்கழக கட்சியின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தாராபுரம் களநிலவரத்தால் கலங்கிய சத்தியபாமா? கையில் எடுத்த புது டெக்னிக்! வைரலாகும் பிரச்சாரம்!

குறிப்பாக மரகதம் குமரவேல் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் சார்பில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற நிலையில் அரசியல் சூழல் காரணமாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பிறகு தவெக கட்சியில் தன்னை
இணைத்துக் கொண்டார்

மரகதம் குமரவேலை அவதூறாக பேசிய அதிமுக ஆதரவாளர்! கொதித்த விசிக நிர்வாகி தலையில் அரிவாள் வெட்டு

தற்போது தவெக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மரகதம் குமரவேல் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.


குறிப்பாக வாக்கு சேகரிக்கும் மரகதம் குமரவேலுக்கு பல்வேறு கிராமங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அச்சிறுப்பாக்கத்தை அடுத்த தண்டராயப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் வேட்பாளரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஒரு தரப்பு பொதுமக்களுக்கும், தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைச் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களின் கைப்பேசிகளை பிடுங்கிய தவெக நிர்வாகிகள் செய்தியாளர்களை மிரட்டல் விடுத்து "நாங்கள் வெற்றி பெற்ற பிறகு உங்களை பார்த்து கொள்வதாக" ஆவேசமாக பேசி சென்றனர்.

மேலும் "நாங்கள் நினைத்தால் தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல் நிறுத்தி விடுவோம்" எனவும் எச்சரிக்கை விடுத்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக பொதுமக்களுக்கும் தமிழக வெற்றிக்கு கழக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிக்க சென்ற போது கொழுமணிவாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


அது போல் தவெக பிரச்சாரங்களின் போது அதிமுக, திமுக ஆதரவாளர்கள் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சுயலாபத்திற்காக ஓட்டு போட்ட மக்களை முட்டாளாக்கிவிட்டு மறுபடியும் ஓட்டு கேட்க வருவீர்களா என பொதுமக்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.


கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் முதல்வர் விஜய், மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அது போல் தாராபுரம் தொகுதியிலும் வேட்பாளர் சத்தியபாமாவுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.


இந்த எதிர்ப்பால் தாராபுரத்தில் நேற்று முழுவதும் சத்தியபாமா பிரச்சாரத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தது.


எங்கு சென்றாலும் எதிர்ப்பு என்பதால் இந்த இரு வேட்பாளர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

வழக்கமான வாபஸ் விஜய்அரசு!

மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ஒரு முக்கிய உத்தி,, அரசு நிர்வாகத்தின் மீது பொதுமக்களும் ஊடகங்களும் கேள்வி கேட்க முடியாதபடி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) கொஞ்சம் கொஞ்சமாக முடக்குவது.


தலைமைத் தகவல் ஆணையர் பணியிடங்களை நிரப்பாமல் விடுவது, சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து அதிகாரத்தைக் குறைப்பது, பாதுகாப்பு என்ற போர்வையில் பல துறைகளை RTI வரம்பிலிருந்து வெளியேற்றுவது என டெல்லியில் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்ட அதே வெளிப்படைத்தன்மையற்ற அரசியலை,


தமிழ்நாட்டிலும் பரிசோதனை செய்து பார்க்க தமிழக வெற்றிக் கழக அரசு முயன்றதா என்ற காரசாரமான கேள்வி இப்போது எழுந்துள்ளது.


அதிகாரிகள் சொல்றதை குருட்டுத்தனமா கேட்காதீங்க.. தவெக மீது கார்த்தி சிதம்பரம் கடும் தாக்கு

ஆனால், தமிழகத்தின் அரசியல் களம் வேறு, சமூக விழிப்புணர்வு வேறு என்பதை உணர்த்தும் வகையில், ஒரே நாளில் எழுந்த மக்கள் எதிர்ப்பைக் கண்டு அந்த அரசாணையைத் திரும்பப் பெற்று பின்வாங்கியுள்ளது விஜய் அரசு.


அரசியலில் 'Testing the Waters' என்பார்கள். அதாவது ஒரு சர்ச்சைக்குரிய கொள்கையை சட்டமாகப் பிறப்பித்து, மக்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள், எதிர்க்கட்சிகள் எவ்வளவு தூரம் எதிர்க்கிறார்கள் என்று உளவு பார்த்துவிட்டு, எதிர்ப்பு வலுத்தால் நைசாகப் பின்வாங்குவது வழக்கம்.


செப்டம்பர் 21-ஆம் தேதி சத்தமில்லாமல் மனிதவள மேலாண்மைத் துறை மூலமாக அரசாணை எண் 57-ஐ அரசு வெளியிட்டது. அதில், பொதுத்துறையின் கீழ் இயங்கும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவை "உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு" என்று முத்திரை குத்தி, RTI சட்டப்பிரிவு 24(4)-இன் கீழ் அதற்கு முழு விலக்கு அளிக்கப்பட்டது.


வுஜய் ஆட்சியில் அதிகரித்துள்ள காவல் துறையின் அத்துமீறல்கள், போலி என்கவுண்டர்கள்
லாக்கப் மரணங்கள் மற்றும் சித்திரவதைகள் மீதான விசாரணை அறிக்கைகள் (PSO 151)
சாதி மோதல்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் போராட்டங்கள் தொடர்பான அரசு நடவடிக்கைகள்
ஆகியவற்றை மக்களின் பார்வையில் படாமல் ரகசிய அறைக்குள் பூட்டி வைப்பதுதான்.


பாஜக அரசு டெல்லியில் அமலாக்கத்துறை, உளவுத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளை RTI வரம்பிலிருந்து பாதுகாப்பது போல், இங்கும் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் கோட்டை ரகசியங்களைப் பூட்டிவிடலாம் என்று விஜய் அரசு கணக்குப் போட்டது.


தமிழ்நாட்டில் அந்தப் பருப்பு வேகாது என்பதை உணர்த்திய எதிர்வினை!

ஆனால், வடமாநிலங்களில் நடப்பது போல் தமிழ்நாட்டில் மக்களின் உரிமைகளை எளிதில் முடக்கிவிட முடியாது என்பதை தவெக அரசு மிகக் குறுகிய நேரத்தில் புரிந்துகொண்டது.


அரசாணையின் விவரங்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கசிந்த சில மணி நேரங்களிலேயே, அரசு எதிர்பாராத அளவுக்கு பயங்கர எதிர்ப்பு அலை எழுந்தது


அரசுக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகள் உள்பட முக்கிய அரசியல் கட்சிகள், "இது பாசிசப் போக்கு; வெளிப்படைத்தன்மையின் குரல்வளையை நெரிக்கும் செயல்" என உடனடியாக வீதியில் இறங்கின.


சமூக அமைப்புகள், "மக்களுக்குப் பதில் சொல்ல பயப்படும் அரசா இது?" என்று அடுக்கடுக்கான சட்டக் கேள்விகளை முன்வைத்து நீதிமன்றப் படியேறத் தயாராகின.


சில மாதங்களுக்கு முன்பு வரை லாக்கப் மரணங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விஜய், இப்போது அதே லாக்கப் மரண அறிக்கைகளை RTI-ல் இருந்து மறைக்கப் பார்க்கிறார் என்ற விமர்சனம் சமூக ஊடகங்களை உலுக்கியது.


நிலைமை கைமீறிப் போவதையும், தங்களின் 'வெளிப்படையான அரசியல்' என்ற முகமூடி கிழிந்து தொங்குவதையும் உணர்ந்த தலைமைச் செயலகம், மாலையிலேயே அவசர அவசரமாக அந்த அரசாணையை ரத்து செய்து பின்வாங்கியது.


மத்திய பாஜக அரசின் பாணியில் நிர்வாகத்தை மூடுமந்திரமாக மாற்றி, கேள்விகளற்ற அதிகாரத்தைக் கட்டமைக்கலாம் என விஜய் அரசு நினைத்திருந்தால், அதற்குத் தமிழ்நாடு தகுந்த பாடம் புகட்டியுள்ளது.


தமிழ்நாடு என்பது தந்தை பெரியார், அண்ணா காலத்திலிருந்தே அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் பகுத்தறிவுப் பாரம்பரியம் கொண்ட மண்.

இங்கு ஒரு அரசாங்கம் தவறு செய்தால், அது புதிய கட்சியாக இருந்தாலும் சரி, சினிமா செல்வாக்கு கொண்ட தலைவராக இருந்தாலும் சரி, சலுகை காட்டாமல் உரிமைகளுக்காக மக்கள் குரல் கொடுப்பார்கள்.


RTI விலக்கு விவகாரத்தில் அரசு பின்வாங்கியது மக்கள் ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என்றாலும், எதிர்காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கான முயற்சிகள் மீண்டும் வேறு வடிவில் வராமல் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையே இந்த ஒத்திகை உணர்த்துகிறது.

    ஞாணேஷ் குமாரின்

     S,I.R.ஆல் வந்த ஆட்சி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி