ஓட்டப்பந்தயமும்
“அன்று ஓட்டப் பந்தயம்...
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த வியாழன் அன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு சீர் கெட்டு போயுள்ளது என்பதை ஆதாரத்தோடு பேசி இருந்தேன்.
15 கேள்விகளை முதல்வர் முன் வைத்திருந்தேன். முதல்வர் அந்த கேள்விகளுக்கு திசைதிருப்பும் உத்தி (Diversion Tactic) எதுவும் செய்யாமல் நேரடியாய் பதில் சொல்ல வேண்டும் என கேட்டிருந்தேன்.
ஆனால் முதல்வர் பதிலுரையில் எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை எங்க மேல வைக்க ஆரம்பிச்சாரு.
நான் வியாழக்கிழமை பேசும்போது, நீங்க ஆட்சிக்கு வந்துட்டீங்கங்கறத நம்புங்க. இப்ப திமுக ஆட்சியில் இல்லைங்கறத நீங்க நம்பணும். உங்களுடைய ஆட்சி அமைஞ்சிருச்சுங்கிறத தயவு செய்து நம்புங்க.
மீண்டும் எங்க மேல பழிய போடாம இந்த மூன்று மாதங்கள்ல என்னென்ன பண்ணி இருக்கீங்க. அடுத்து என்ன பண்ண போறீங்க அப்படிங்கற பதில் சொல்லுங்க என சொல்லிருக்கேன்.
ஆனால் தற்போது திமுக ஆட்சி நடக்குதுங்கிற அதே நினைப்புல முதல்வர் பொய்யான குற்றச்சாட்டுகளை சில கட்சி கூட்டங்கள்ல எங்களுடைய உறுப்பினர்கள் வெளில பேசுனது இந்த அரசின் மீது வச்ச விமர்சனத்தை எல்லாம் உள்ள கொண்டு வந்து பேசி அதையெல்லாம் வந்து அவை குறிப்புல பதிவேற்ற செய்ய ஆரம்பிச்சார்.
நானும் என்னுடைய சட்டமன்ற உறுப்பினரும் எந்துருச்சு சபாநாயகர் கிட்ட முதல்வர் வெளியில் பேசுறத பத்தி இங்க பேசுறாரு நீங்க வாய்ப்பு கொடுங்க அதுக்கு பதில் சொல்லணும் அப்படின்னு கேட்டோம்.ஆனா வாய்ப்பு மறுக்கப்பட்டது.
தொடர்ந்து முதல்வர் பல தவறான குற்றச்சாட்டுகளை பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்கா வச்சுக்கிட்டே இருந்தாரு. எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் எங்களுக்கு பதில் சொல்வதுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுச்சு.
முதல்வர் பேசி முடிச்ச உடனே நாங்க அனைவரும் மீண்டும் எந்திரிச்சு கேட்டோம். ஆனா அதற்கும் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. முதல்ல எதிர்க்கட்சி தலைவருக்கு நான் வாய்ப்பு கொடுக்கிறேன் அப்படின்னு சொன்னாரு.
என்ன பிரஷர் வந்துச்சு என்னன்னு தெரியல.
அது முதல்வருடைய அறிவிப்பா, அவர் சொன்னதுனாலயா இல்ல வேறு யாராவது சொன்னார்களா தெரியல திடீர்னு மாத்தி இல்ல இல்ல அனுமதிக்க முடியாது. என கூறி விட்டார். நாங்களும் அமைதியா இருந்தோம்
எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பாரு அப்படின்னு காத்துக்கிட்டு இருந்தோம். ஆனா மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனவே நாங்க எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கறதுக்காக முதலமைச்சருடைய பேச்சை முழுசா கேட்டுட்டு வெளி நடப்பு செஞ்சிருக்கிறோம்.
நாங்க வச்ச ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லல. கடந்த வியாழக்கிழமை அன்று திங்கள்கிழமை பதில் சொல்றேன்னு சொல்லிட்டு வேகமா ஓடி போயிட்டாரு. சரி நான் கூட ஏதாவது பிரிப்பேர் பண்ணிட்டு வருவாரு.
மூணு நாள் டைம் இருக்கு நல்லா மனப்பாடம் பண்ணிட்டு வருவாரு அப்படின்னு நாங்க நினைச்சோம்.
வியாழக்கிழமை அன்னைக்கு ஓட்ட பந்தயத்தில ஓடுன மாதிரி ஓடினாரோ. அதே மாதிரி இன்னைக்கு மனப்பாடம் பண்ணிட்டு ஒப்புவித்தல் போட்டி மாதிரி சட்டசபையில தவறான கருத்துக்களை பொய்யான குற்றச்சாட்டுகளை ஒப்புவிச்சிருக்காரு.
நான் சொன்ன அதே பஞ்ச் டயலாக் அதே சினிமா வசனங்கள் அதே ஆக்டிங் ரீல்ஸ்காக மட்டுமே இந்த முதல்வர் இந்த பதிவு உரையை சொல்லி இருக்கிறார்.
இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து சட்டம்-ஒழுங்கு எந்த நிலைமையில் இருக்கிறது என்று பத்திரிக்கை நண்பர்களாகிய உங்களுக்குத் தெரியும்.
மக்களும் தினமும் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படி சட்டம்-ஒழுங்கு சம்பந்தமாக நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், வெறும் பஞ்ச் டயலாக்குகள், வெறும் டைவர்ஷன் டாக்டிக்ஸ்தான்.
உதாரணத்திற்கு, அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், உறுப்பினர்கள் மீது எல்லாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
அதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால், அதற்கு மாறாக, திமுக ஆட்சியில் இவர்கள் மீது இவ்வளவு வழக்குகள் இருக்கின்றன என்று எங்கள் மீது திருப்புகிறார்.
வழக்கு இருந்தால் நீங்கள் நடத்துங்கள், ஆக்ஷன் எடுங்கள் என்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால், ஒரு அமைச்சர் ஐபிஎல் போட்டியிலேயே உட்கார்ந்து பொடி போட்டதெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். கிரெடிட் கார்டில், போனில் வைத்து பொடி போட்டதெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாங்கள் வியாழக்கிழமை பேசிய உடனே, கடந்த மூன்று நாட்களாக அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் போய், போய் அவசர அவசரமாக என்னென்ன செய்துகொண்டிருந்தார்கள், எந்தெந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கப் பார்த்தார்கள் என்பதைப் பத்திரிக்கை நண்பர்களாகிய நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
அவர்களுடைய கட்சிக்காரர்களே இன்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார்கள். நேற்று சென்னையில் பட்டப்பகலில் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன.
சிசிடிவி கேமராக்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதைப் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டேன். அதற்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை.இதைப் பற்றியெல்லாம் கேட்டால், இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் 1970-க்குப் போய்விட்டார் முதல்வர். சர்க்காரியா கமிஷன் பற்றிப் பேசுகிறார்.
மிசா பற்றிப் பேசுகிறார். மிசா பற்றிப் பேசுவதற்கு இவருக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா?
அதாவது, தகுதி இருக்கிறதா?
சர்க்காரியா கமிஷன் பற்றியாவது இவருக்கு ஏதாவது தெரியுமா?
யாரோ எழுதி கொடுத்ததை மூன்று நாட்களாக உட்கார்ந்து மனப்பாடம் பண்ணிக்கொண்டு வந்து இங்கு வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறார்.
சர்க்காரியா கமிஷனில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அந்தக் கமிஷனே ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.
அதே மாதிரி மிசாவைப் பற்றி இவர் பேசுகிறார்.
கொடநாட்டில் போய் இவருடைய படம் ரிலீஸுக்காக தந்தையுடன் வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதல்வர் விஜய் .
இவருக்கு மிசாவைப் பற்றியும், எங்களுடைய தலைவரைப் பற்றியும் பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா?
ஒரு சதவீதம் தகுதி இருக்கிறதா?
அந்தத் தகுதியை இவர் ஏதாவது வளர்த்திருக்கிறாரா?
இவர் அரசியலுக்கு வந்தது ஒரு ஆக்சிடென்ட்.இவர் ஆட்சிக்கு வந்தது தமிழ்நாடுக்குபெரிய விபத்து.
இவருக்கு மிசாவைப் பற்றியும் சர்க்காரியா கமிஷனைப் பற்றியும் பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. அதில் எந்த ஆதாரமும் கிடையாது.
வெறும் குற்றச்சாட்டுகள்.
அதே மாதிரி, அமலாக்கத்துறை சொன்ன விஷயங்கள் எல்லாம் இவர் படித்துக் காட்டுகிறார். அதெல்லாம் வெறும் குற்றச்சாட்டுகள். எதுவுமே நிரூபிக்கப்படவில்லை.
விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. மூன்று பைல்கள் ஓபன் பண்ணச் சொன்னார்கள் என்று சொல்லிவிட்டு, அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.
அமலாக்கத்துறை சொல்லி இருக்கிற குற்றச்சாட்டுகளைத்தான் இவர் வந்து சட்டசபையில் படித்துக் காட்டுகிறார். இன்னும் சொல்லப்போனால், சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகு மக்களுடைய ஆதரவைப் பெற்று மூன்று முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.
உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும்.
ஆட்சியில் இருக்கும்போது ஊழல் செய்துவிட்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே முதல்வர் யார், ஒரே தலைவர் யார் என்பது இங்கு இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் தெரியும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எங்களுடைய தலைவர்களோ, எங்களுடைய முன்னாள் அமைச்சர்களோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களோ இதுவரைக்கும் யாரும் அதுபோல் தண்டிக்கப்படவில்லை.
முதல்வர் மீது கூடத்தான் இன்கம்டாக்ஸ் வழக்கு இருக்கிறது.
15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதை மறைத்ததாக அவர் மீது ஒரு வழக்கு இருக்கிறது.
வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது.
வருமானத்தை மறைத்ததற்கு வழக்கு போட்டால், ரொம்ப லேட்டாக வழக்கு போட்டிருக்கிறீர்கள் என்று நீதிமன்றத்தில் ஓப்பனாக ஒத்துக்கொண்டவர்தான் இன்று இருக்கக்கூடிய இந்த டம்மி முதல்வர்.
அதுமட்டுமல்ல, இங்கு இருக்கக்கூடிய பொதுப்பணித்துறை அமைச்சர் மீது அமலாக்கத்துறை கேஸ் இருக்கிறது. நடந்துகொண்டிருக்கிறது.
இப்படி அவர்களுடைய கட்சியில் ஊழல் செய்துகொண்டு இருக்கிறார்.
விஜயபாஸ்கர், கு.பா கிருஷ்ணன் இப்படி பல்வேறு தலைவர்கள் மீது, முன்னாள் அமைச்சர்கள் மீது எல்லாம் ஈடி கேஸ்கள் இருக்கின்றன.
இப்படி இவர்களையெல்லாம் கூட சேர்த்து வைத்துக்கொண்டு எங்களைக் குறை சொல்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
அதுமட்டுமல்ல, நேற்று IUML சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பேசும்போது என்ன பேசியிருக்கிறார்
என்பதை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள்.
ஆட்சி அமைப்பதற்கு பொட்டி பொட்டியாக பணத்தை எடுத்துக்கொண்டு வந்து, என்ன அமைச்சர் பொறுப்பு வேண்டும், நாங்கள் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம்.
உங்களுடைய ஆதரவு வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்று IUML சட்டமன்ற உறுப்பினர் ஓப்பனாகவே சொல்லியிருக்கிறார்.
இப்படி ஓப்பனாக குதிரை பேரத்தில் இந்த அரசு நடந்துகொண்டிருக்கிறது.
எங்கள் மீதான பொய் வழக்குகளை சட்டப்படி சந்திப்பதற்கு நாங்கள் அத்தனை பேரும் தயார்.நேற்று முன்தினம் எங்களை மிரட்டுவதற்காக, நாங்களெல்லாம் பயந்துவிடுவோம் என்று நினைத்து, DVAC யை வைத்து முன்னாள் அமைச்சர், முதன்மைச் செயலாளர் நேரு வீட்டிற்கு ரெய்டு போனார்கள்.
ரெய்டு போனவர்கள் ஒரு ஐந்து, ஆறு மணி நேரத்தில் எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்தார்கள். வெளியே வந்து நேருவே தெளிவாகப் பேட்டி கொடுத்திருக்கிறார். எனவே, இதையெல்லாம் சட்டப்படி சந்திப்பதற்கு நாங்கள் தயார்.
நான் இந்த அரசு மீது இப்போது ஓப்பனாக ஒரு குற்றச்சாட்டு வைக்கிறேன்.
முதலமைச்சருடைய நண்பர்கள், அவருடைய ஆபீஸில் இருக்கக்கூடிய அட்வைசர்ஸ் பேர் விஷ்ணு ரெட்டி. சமீபத்தில் ஒரு அமைச்சர் பேசும்போது அவருக்கு நன்றி சொன்னார்.
விஷ்ணு ரெட்டி, அவருடைய மச்சான் சுஜய் ரெட்டி, அவருடைய பிசினஸ் பார்ட்னர் அனில் ரெட்டி — இவர்கள் எல்லாம் சேர்ந்து இப்போது மைனிங்ஸ், அரசு நடத்தக்கூடிய மைனிங்ஸ் எல்லாம் இவர்கள்தான் இப்போது ஃபுல் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்கள்.இதற்கான ஒவ்வொரு ஆதாரங்களையும் நான் ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறேன். இப்படி நாங்கள் கேட்ட கேள்வி எதற்கும் பதில் சொல்வதற்கு வக்கற்ற ஒரு அரசு இன்று அமைந்திருக்கிறது.
முதல்வருடைய பதில் முழுக்க முழுக்க ஒரு சினிமா ஷூட்டிங்குக்கு என்னென்ன தேவையோ, அதை மூன்று நாளாக உட்கார்ந்து மனப்பாடம் பண்ணி, பிரிப்பேர் பண்ணிக்கொண்டு வந்து இங்கு பேசியிருக்கிறார்.
இதையெல்லாம் கண்டித்து, நாங்கள் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம். அதே மாதிரி, பாரபட்சமாக, ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டிருக்கக்கூடிய சட்டப்பேரவைத் தலைவருக்கும் எங்களுடைய கண்டனத்தை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
அனுமதி.,அனுமதி இல்லை...?






