தெற்கிலிருந்து சூரியன்.
காத்திருந்து 'மிசா'
எனப் பெயர் வைத்தார்களா?
மிசா தொடர்பாக மதிமுக எம்.பி வைகோ தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், திமுகவைச் சேர்ந்த நடிகர் போஸ் வெங்கட், துரை வைகோவை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை ஆற்றினார்.
அப்போது அவர், கடந்த கால திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, தற்போது ஆதாரமிலாமல் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட செய்த அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அப்போது மிசா பற்றியும் நக்கரடிக்கும் விதமாக கேவலமாகம்பேசினார்.முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், மிசா காலத்தில் தனக்கு நடந்த அடக்குமுறைகளைப் பற்றி பேசியிருந்தார்.
இதையடுத்து, மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்.பியுமான துரை வைகோ பேசுகையில் மிசாவின்போது ஸ்டாலின் கைதானது உண்மை.
மிசா காலத்தில் திமுகவில் முதல் கைதும் வைகோதான். கடைசி விடுதலையும் வைகோதான்.
அரசியல் நாகரிகம் கருதி இந்த விவகாரத்தில் நான் இதற்கு மேல் பேச விரும்பவில்லை." என்றார்.
இந்நிலையில், நடிகரும், இயக்குநரும், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணைத் தலைவருமான போஸ் வெங்கட் தமது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வைகோ தான் முதலில் சிறை சென்று இறுதியாக விடுதலையானார் என்று வைகோ மகன் துரை கூறியிருக்கிறார்.
அவருக்கு முதலில் மிசா என்று பெயர் வைத்ததாகவும் அதனால் அவர் அந்த பெயருக்குரியவர் என்றும் உரிமை கொண்டாடியுள்ளார். சரி இருக்கட்டும், துரை வைகோ (எ) மிசா சொல்வது உண்மையா?
📌துரை தற்போது மக்களவை உறுப்பினர். பாராளுமன்ற இணையத்தளத்தில் இருக்கிற துரை பற்றிய தகவல் தவறாக இருக்க வாய்ப்பில்லை.
பாராளுமன்ற ஆவணங்கள் படி துரை பிறந்தநாள் 2 ஏப்ரல், 1972.
📌மிசா சட்டத்தை அவசரநிலையாக குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி வழி இந்திரா காந்தி ஆட்சி பிரகடனம் செய்த நாள் 26 ஜூன் 1975.
மேலுள்ள இரண்டு அவணங்கள் படி கணக்கிட்டால் அப்போது துரைக்கு மூன்று வயது.
மூன்று வயது வரை பெயரில்லாமல் பிறப்பை பதிவாக்காமல் வைத்திருக்கவும் வாய்ப்பில்லை.மிசா வரட்டும் பெயர்வைக்கலாம் என காத்திருந்திருக்கலாம்.
📌பாராளுமன்றம் வெளியிட்ட உறுப்பினர்கள் குறிப்பேடு வைகோ திருமணம் நடைபெற்ற நாள் 14 ஜூன் 1971 என்று பதிவு செய்துள்ளது.
ஆவணங்களில் உள்ள இத்தகவல் துரையின் பிறந்தநாள் தகவலோடு பொருந்துகிறது. ஆகவே ஆவணங்களில் உள்ள தகவல் பிழையாக இருக்க வாய்ப்பில்லை.
📌மிசா அவசரகால பிரகடனம் நடைமுறைக்கு வந்த அறிவிப்பிற்கு முன்னரே பிறந்தவர் துரை வைகோ. அந்த அறிவிப்பிற்கு முன்னர் மிசா சட்டம் பாராளுமன்றத்தில் 2 ஜூலை, 1971 அன்று இயற்றப்பட்டது.
வைகோ திருமணம் நடைபெற்ற இரண்டு கிழமைகளுக்குப் பிறகு அது நடைபெற்றது.
📌திமுக ஆட்சி 31 சனவரி, 1976ல் கலைக்கப்பட்டது. அதையெட்டி பலர் மிசாவில் கைது செய்யப்பட்டனர்.
வைகோ 1 பிப்ரவரி, 1976ல் கைதுசெய்யப்பட்டார். பிப்ரவரி 2, 1977ல் அவர் விடுதலையானார். வைகோ பற்றிய இத்தகவல் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய ஆவணத்தில் பதிவாகியுள்ளன.
📌மிசாவில் இறுதியாக விடுதலையானவர்கள் 21 மார்ச், 1977ல் வெளிவந்தனர். அதில் மு.க.ஸ்டாலினும் ஒருவர்.
ஆகவே துரை வைகோ மிசாவைப் பற்றி பேசியவை பொய்யானவை அல்லது திமுக/ மு.க.ஸ்டாலின் மீது காழ்ப்பில் இட்டுக்கட்டி பேசிய பொய்கள்.
வைகோவின் வீழ்ச்சி மகனது வாய்பேச்சில் இருக்கிறது. தற்போதைய அரசியல் எவ்வளவு குரூரமான பொய்களோடு சதுரங்க ஆட்டம் ஆடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று." எனத் தெரிவித்துள்ளார்.
தெற்கிலிருந்து. "சூரியன்"
இந்திய அளவில் பாஜக வலுவாக இருக்கும் நிலையில், காங்கிரஸின் மாறுபட்ட முடிவுகளை எடுத்து வருவதால் மாநில கட்சிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றன.
இந்த நிலையில் பாஜகவால் பழிவாங்கப்பட்டு, காங்கிரசின் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாநில கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த முன்னெடுப்பை தமிழகத்தில் இருந்து துவக்கி இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின் என்கின்றனர்.
2014, 2019 மக்களவைத் தேர்தல்களை விட 2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு கடும் பின்னடைவு என்று தான் சொல்ல வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றாலும் தனிப் பெரும்பான்மை இன்றி சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் ஆதரவோடு தான் பிரதமராகி இருக்கிறார்.
அதே நேரத்தில் வலுவான எதிர்க்கட்சியாக மாற முடியாமல் காங்கிரஸ் தவிர்த்து வருகிறது. தேசிய அளவிலான கட்சியாக இருந்தாலும் மாநிலக் கட்சிகளுடன் போட்டி போட முடியாத அளவுக்கு தான் காங்கிரஸின் நிலைமை இருக்கிறது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே என தலைமை மாறினாலும் கட்சியை மீட்டெடுக்க ராகுல்காந்தியால் முடியவில்லை என காங்கிரஸ் தொண்டர்கள் புலம்புகின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு தேர்தலுக்குப் பிறகு அவர்களை கழட்டி விடுவது காங்கிரசின் வழக்கமாகிவிட்டது
டெல்லியில் ஆம் ஆத்மி, தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் என பல கட்சிகளுடன் மோதல் போக்கை ஈடுபட்டு வந்தாலும், இந்தியா கூட்டணியில் ஒற்றுமையாக இருக்கிறோம் என காங்கிரஸ் கூறுவதும், சட்டமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பல்வேறு கட்சிகளும் அந்த கட்சி மீது அதிருப்தியில் இருக்கின்றன.இந்த நிலையில் தான் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாகி வரும் நிலையில் அதன் வளர்ச்சியை தடுக்கவும் காங்கிரஸின் இந்த அரசியல் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டும் வகையில் மூன்றாவது அணியை அமைப்பதற்காக ஆலோசனை தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் கட்சிகளை புதிய அணிக்கு கொண்டு வருவதற்கான காய்களை நகர்த்த திமுக திட்டமிட்டு இருப்பதாக சொல்கின்றனர்.
மேலும் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலினை முன்னிறுத்தலாமா என்ற ஆலோசனையும் ரகசியமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
முதல் கட்டமாக டெல்லியில் இந்த பேச்சுவார்த்தைக்கும், அதன் தொடர்ச்சியாக தான் மும்பையில் உத்தவ் தாக்கரேவை திமுக தரப்பில் இருந்து சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது.
தொகுதி வரையறை தொடர்பாக பேசப்பட்டதாக சொல்லப்பட்டாலும் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிதான் இந்த பேச்சு வார்த்தை என்கின்றனர்.
உத்தவ் தாக்கரே மட்டும் அல்லாமல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸின் சரத் பவர் அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, ஜார்கண்ட் சர்க்கார் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா ஆகிய கட்சிகள் இந்த பட்டியலில் உள்ளன..
இதுமட்டுமல்லாமல், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாரதிய ராஷ்டிரிய சமிதி, பிஜு ஜனதா தளம், ஏஐஎம்ஐஎம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் ஜன்சக்தி கட்சி, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்க்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பிரச்சனை எழுந்தால் எந்த கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ அந்த கட்சி தலைவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்ற முதற்கட்ட வாக்குறுதியோடு பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக கூறுகின்றனர்.








