குடும்ப அட்டை முடக்கம்?
@ வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கை (எஸ்.ஐ.ஆர்) தொடர்பாகக் கடந்த வாரம் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான முடிவுகளை மறுஆய்வு செய்வதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை மாலையில் கூட்டத்தை நடத்துகிறது என பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்புத் தீவிரத் திருத்த நடைமுறையைக் கையாள்வது குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், வாக்காளர்கள் தங்கள் எஸ்.ஐ.ஆர் படிவங்களில் உள்ள பிழைகள் அல்லது முரண்பாடுகளுக்காகத் தேர்தல் அதிகாரிகளின் முன் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முக்கிய முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
@ பாதாள சாக்கடை தனியார் மயம், பள்ளிகளில் காவி உடை ராம் யாத்திரை… விஜய் சங்கி அரசுக்கு சிபி(எம்] கண்டனம்!@ நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக எந்தவிதமான பொருட்களையும் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை (01.10.26) முதல் முடக்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது மற்றும் இடம்பெயர்ந்த பிறகும் பழைய பதிவுகள் தொடர்வது போன்ற குளறுபடிகளை நீக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 6 மாதங்களாக பொருட்கள் வாங்காத 1.58 கோடி பயனாளிகளின் சலுகைகள் நாளை முதல் தற்காலிகமாக முடக்கப்படவுள்ளன.
இந்த ரேஷன் கார்டுகள் முதலில் தற்காலிகமாக மட்டுமே முடக்கப்படும் என்றும், பயனாளர்களின் பெயர்கள் உடனடியாக நீக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்டுகள் முடக்கப்படாமல் இருக்க பயனாளர்கள் 3 மாதங்களுக்குள் இ-கே.ஒய்.சி. (e-KYC) நடைமுறையை முடிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் பயன்பெற்று வரும் நிலையில், இந்த புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
@ ஜெம் வீரமணி விவகாரத்தில் தங்களை இணைத்துப் பேசியதற்காக, அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர அனுமதி கோரி, தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதன் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது@ அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான செம்மலை, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைந்துள்ளார். கடந்த மே மாதம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிய அவர், 4 மாதங்களுக்குப் பிறகு தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.@ எஸ்.ஐ.ஆர் விவகாரத்தைக் கண்டித்து அக்டோபர் 6-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக 'இந்தியா' கூட்டணி அறிவித்துள்ளது.இதுகுறித்துத் தகவல்களைப் பகிர்ந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்டோபர் 2 முதல் 8-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற தலைப்பில் பேரணிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அக்டோபர் 2-வது வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் இணைந்து குடியரசுத் தலைவரைச் சந்திக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்.ஐ.ஆர்) பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து இணைந்த நடவடிக்கை திட்டத்தை வகுப்பதற்காக 'இந்தியா' கூட்டணியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (இ.வி.எம்) பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல்களை நடத்த வேண்டும் என நாம் ஒன்றாக வலியுறுத்த வேண்டும்" என்று பேசினார்.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவைக் கோருவது குறித்தும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் இணைந்து கூட்டாகச் செயல்படுவதற்கான உத்திகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






