குவாரிகளுக்காக போக்சோ

 பல ஆயிரம் கோடி மதிப்பு கிரானைட் குவாரியை கொடுக்காததால் ரெட்டி கும்பல் ஆத்திரம்:


ஜெம் வீரமணி’ வழக்கில்  அதிர்ச்சி தகவல்கள்



ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கு திடீரென சூடுபிடித்துள்ளது. தொழிலதிபர் வீரமணி கடந்த 50 ஆண்டுகளாக இந்திய அளவில் அசைக்க முடியாத கிரனைட் தொழிலில் முன்னணியில் உள்ளார்.


இதனால், ஆந்திராவில் உள்ள கிரானைட் தொழிலதிபர்களுக்கும் வீரமணிக்கும் பல ஆண்டுகளாக தொழில் போட்டி இருந்து வருகிறது.

ஆந்திராவில் கிரானைட் தொழிலில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர்கள், நண்பர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.


ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்தபோது, ரெட்டி சமூகத்தினர் ஆந்திராவில் உள்ள அனைத்து குவாரிகளையும் தன்வசப்படுத்தி சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டினர்.


பின்னர், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு முதல்வராக வந்தார். அதன் பிறகு ஆந்திராவில் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகளை நடத்திய தொழிலதிபர்களை முற்றிலும் ஒழித்தார். இதனால் ஆந்திரா ரெட்டி தொழிலதிபர்கள் தமிழகம் பக்கம் திரும்பி உள்ளனர்.


குறிப்பாக, ஆந்திர கும்பல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (இசிஆர்) உள்ள பல கோடி மதிப்புள்ள பங்களா, ரிசார்ட்டுகளை வாங்கி குவித்து வருகின்றன.


தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஆந்திரா ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர்கள், சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூட சட்டப்பேரவை நடக்கும் போது, தமிழகத்தில் உள்ள கனிமவளங்கள் மற்றும் கிரானைட் குவாரிகள் அனைத்தும் 3 ஆந்திர ரெட்டிகளிடம் சிக்கியுள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார்.

சென்னை அருகே ஜெம் கிரானைட் வீரமணிக்கு சொந்தமாக 99 ஏக்கர் நிலத்தில் கிரானைட் குவாரி மற்றும் இடங்களும் உள்ளன. இந்த இடத்தை ஆந்திரா கிரானைட் ரெட்டி கும்பல் வாங்க முடிவு ெசய்துள்ளது. அதற்காக ஜெம் கிரானைட் வீரமணியை சந்தித்து விலைக்கு கேட்டுள்ளனர்.


ஆனால் அவர் கிரானைட் குவாரி இருப்பதாலும், அதுவும் சென்னை அருகே 99 ஏக்கர் என்பதால் அதன் சந்தை மதிப்பு பல நூறு கோடி போகும் என்பதால் விற்பனை செய்ய மறுத்துவிட்டார். இதனால் ஆந்திரா ரெட்டி கும்பலுக்கு வீரமணி மீது கோபம் ஏற்பட்டு, அவர் மீது ஏதேனும் வழக்குகள் இருக்கிறதா என்று விசாரித்துள்ளனர்.


அப்போது கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வீரமணி மீது சிறுமியை பாலியல் பலத்காரம் செய்ததாக வீடியோ ஆதாரங்களுடன் புகார் ஒன்று அளிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.


அப்போது அதிமுக ஆட்சி காலம் என்பதால் தொழிலதிபர் வீரமணி மீது கொடுத்த புகாரில் முகாந்திரம் இல்லை என்று எடுத்துக்கொள்ளவில்லை. அதேநேரம் வீரமணிக்கு பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் ஆசை இருந்து வந்ததும் ரெட்டி கும்பலுக்கு தெரியவந்தது.


வீரமணிக்கு சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை அழைத்து வந்து விடுவது, அவரது நெருங்கிய தோழியான சாந்தி என்பதை கண்டுபிடித்தனர். சாந்திக்கும் தொழிலதிபர் வீரமணிக்கும் 30 ஆண்டுகளாக மிகவும் நெருக்கமான நட்பு இருந்து வந்தது.


சாந்தி, வீரமணியின் நம்பிக்கையானவர் என்பதால் அவரை தனது நெருங்கிய நட்பாகவே வைத்துக்கொண்டார். இந்த தொடர்பால் சாந்திக்கு தனது நிறுவனத்தில் பணியாற்றுகிறவரை திருமணம் செய்து வைத்துள்ளார்.


திருமணம் ஆனாலும் தொழிலதிபர் வீரமணிக்கும் சாந்திக்கும் நட்பு நீடித்துள்ளது. இதற்கிடையில், ஒரு மகன் பிறந்தார். அவரை சாந்தி மிகுந்த செல்வாக்குடன் வளர்த்து வந்தார்.

ஒரு கட்டத்தில் வீரமணிக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே 2019ம் ஆண்டு சொத்து தகராறு ஏற்பட்டபோது வீரமணியிடம் சாந்தி உங்களுக்கு வரும் சொத்தில், உங்கள் மகள், மகனுடன் சேர்ந்து, எனக்கு பிறந்த மகனுக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டுள்ளார்.


அதை தொடர்ந்து, உங்கள் சொத்தை பிரித்தால் 3 ஆக பிரித்து எனது மகனுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று தகராறு செய்துள்ளார் சாந்தி. இதனால் வீரமணிக்கும் சாந்திக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது.


அந்த நேரத்தில் சாந்தி, கடந்த 2019ம் ஆண்டு வீரமணி சிறுமி ஒருவருடன் இருக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து வைத்துக்கொண்டார். அதை வைத்து தொழிலதிபர் வீரமணியை மிரட்டி பல கோடி ரூபாய் சாந்தி பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் சாந்திக்கு பணம் கொடுக்க முடியாது என்று வீரமணி கூறிய பிறகுதான் சாந்தி ரகசியமாக கடந்த 2019ம் ஆண்டு சிறுமியுடன் இருக்கும் காட்சி அடங்கிய பென் டிரைவை போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


ஆனால் வீரமணி மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால் வேறு வழியின்றி சாந்தி ஒன்றும் தெரியாதபடி வீரமணி கேட்கும்போது எல்லாம் சிறுமிகள் முதல் இளம் பெண்களை வரை அழைத்து வந்து உல்லாசமாக இருக்க உதவியுள்ளார்.

அதன்பிறகு வீரமணிக்கு வயது 84 ஆவதால், சாந்தி மீண்டும் தனது மகனுக்கு சொத்து கேட்டு தொந்தரவு செய்தார்.


அப்போதும் அவர் சொத்து பிரித்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சாந்தி திமுக ஆட்சி காலத்தில் கடந்த 2025 அக்டோபரில் வீரமணி சிறுமிகளுடன் உல்லாசமாக இருக்கும் பென் டிரைவ் அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் விபசார தடுப்பு பிரிவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.


அந்த பென் டிரைவ்வை ஆய்வு செய்த போது, சில நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவில் வீரமணி சிறுமியுடன் இருக்கும் காட்சிகள் இருந்தது. இதனால் போலீசார் புகார்கள் யாரிடம் பெறுவது என்று தெரியாமல், என்ஜிஓ உதவியுடன் கடந்த 6.10.2025 அன்று புகார் பெற்று, அதன் மீது மறுநாளே தொழிலதிபர் வீரமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, பென்டிரைவ்வில் உள்ள சிறுமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் சிறுமி குறித்து அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.


அதேநேரம் போக்சோ வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்தால், அந்த வழக்கில் 90 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதுதான் புதிய போக்சோ சட்டத்தின் விதி. ஆனால், இந்த வழக்கில் வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்க முடியாததால் விபசார தடுப்பு பிரிவு இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆலோசனைப்படி நீதிமன்றத்தில் வீடியோவில் உள்ள சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. தொழிலதிபர் வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து மேல் விசாரணை நடத்தி கண்டுபிடிக்கும் வரை வழக்கின் விசாரணையை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன்பிறகு, நீதிமன்றம், விசாரணை காலத்தை நீடித்து, மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.


இதையடுத்து, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கினர். அதேநேரத்தில், வீரமணியின் பாலியல் லீலைகள் குறித்த விவகாரங்களை ஆந்திரா ரெட்டி கும்பல் கையில் எடுத்து, வீரமணியின் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை குறைந்த விலைக்கு அபகரிக்கும் நோக்கில், 30 ஆண்டுகளுக்கு மேலாக வீரமணியின் நெருங்கிய துணையாக அனைத்து பணிகளையும் செய்து வந்த சாந்தியை ரகசியமாக சந்தித்தாகவும் கூறப்படுகிறது.


அப்போது, சாந்தியிடம் உனது மகனுக்கு சேர வேண்டிய சொத்தை நாங்கள் வீரமணியிடம் இருந்து பெற்று தருகிறோம். அப்போது சென்னை அருகே உள்ள 99 ஏக்கர் கிரானைட் குவாரியை நீ கேட்டு பெற்று, அந்த இடத்தை எங்களுக்கு விலைக்கு கொடுக்க சம்மதம் என்றால் நாங்கள் உதவி செய்கிறோம். அதற்கு நீ, வீரமணியின் பாலியல் தொடர்பான விவரங்களை காவல் துறையில் அளித்து உதவினால், உனக்கு தேவையான சொத்துகளை நாங்கள் பெற்று தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.


இதை நம்பி சாந்தி, வீரமணி குறித்த பாலியல் தொடர்பான விவரங்கள் மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட 9 சிறுமிகள் குறித்த விவரங்களை விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.


அதன்படி போலீசார் கடந்த மாதம் 29ம் தேதி சாந்தி அளித்த ஆதாரங்களின்படி, தொழிலதிபர் வீரமணியை கைது செய்தனர். அதேநேரம் வீரமணிக்கு சிறுமிகளை அழைத்து வந்ததாலும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால் ரகசிய புகார் அளித்த சாந்தியும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரையும் கைது செய்தனர்.


இந்த வழக்கில் சாந்திக்கு அனைத்து உதவிகளையும் ஆந்திரா ரெட்டி கும்பல் செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன. ஆந்திரா ரெட்டி கும்பலுக்கு ஆதரவாக வீரமணியிடம் எப்படியாவது தனது மகனுக்கு சொத்தில் பங்கு பெற்றுவிட வேண்டும் என்று சாந்தி தீவிரமாக உள்ளார்.


அதேநேரத்தில் சாந்திக்கு சொத்தை வாங்கிக் கொடுத்து அதை குறைந்த விலைக்கு வாங்க ரெட்டி சகோதரர்கள் சில அதிகார மையத்தில் உள்ள நபர்கள் துணையுடன் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழக தொழிலதிபரை தொழில் ரீதியாக போட்டி போட்டு வெற்றி பெற முடியாமல் ஆந்திரா ரெட்டி கும்பல் குறுக்கு வழியில் வீரமணியின் சொத்துகளை அபகரிக்க முயன்று வருவதாக கிரானைட் குவாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


* தகவல்களை வெளியிட போலீஸ் மறுப்பு

இந்த வழக்கில் வீடியோவில் உள்ள சிறுமி குறித்து இதுவரை விபசார தடுப்பு பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்ைல. ஆனால் வீரமணியால் பாதிக்கப்பட்டதாக சாந்தி அளித்த வாக்குமூலத்தின்படி தான் 9 பெண்கள் தற்போது வீரமணிக்கு எதிராக திரும்பியுள்ளனர்.


பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 9 பேரும் தற்போது 50 வயது முதல் 26 வயதான மேஜர் பெண்களாக உள்ளனர். வீரமணி மீது தற்போது குற்றம்சாட்டிய 9 பேரில் யாரும் தற்போது 18 வயதுக்கு கீழ் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் உறுதியான தகவல்களை வெளியிட மறுத்து வருகின்றனர்.


இதனால் இந்த வழக்கில் போலீசார் வீடியோவில் உள்ள சிறுமி யார் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வீரமணியின் போக்சோ வழக்கு மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் கீதாஞ்சலி மற்றும் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் வீரமணிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரத்தை திரட்டி வருகின்றனர்.


ஒருபுறம் போலீசாரின் விசாணை விரைவாக நடந்து வரும் நிலையில், தற்போது இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், மறுபுறம் ஆந்திரா ரெட்டி கும்பல் திட்டமிட்டு திமுக ஆட்சியில் இந்த வழக்கை கிடப்பில் போட்டது போன்று ஒரு தோற்றத்தை, தங்களுக்கு ஆதரவான யூடியூபர்கள் மற்றும் பணத்துக்கு விலைபோகும் சில ரீல்ஸ் நபர்களை வைத்து பெருமளவில் பணத்தை கொடுத்து ஒவ்வொரு நாளும் சாந்தி சொன்ன ஆதாரங்களை அவர்களுக்கு கொடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி