சர்க்காரியா கமிஷன் பின்னணி என்ன?

சர்க்காரியா கமிஷன் பின்னணி என்ன?சர்க்காரியா கமிஷன் அறிக்கையில், 1970-களில் செயல்படுத்தப்பட்ட வீராணம் குடிநீர்த் திட்டத்தின் ஒப்பந்தம் தொடர்பாக ரூ.40 லட்சம் கமிஷன் கோரப்பட்டதாகவும், ரூ.29 லட்சம் வழங்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி முரசொலி கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக விஜய் குற்றம்சாட்டினார்.


அண்ணா தியேட்டர், அருண் ஹோட்டல், வெளிநாட்டு டிராக்டர் உள்ளிட்டவை கலைஞருக்குச் சொந்தமானவை அல்லது அவருக்கு லஞ்சமாக வழங்கப்பட்டவை என்று ஆதாரமற்ற புகார்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், “வார்த்தைக்கு வார்த்தை விவாதிக்க நாங்கள் தயார்” என்றார்.


சர்க்காரியா கமிஷனுக்குப் புகார் அளித்த எம்.ஜி.ஆர். பின்னர் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தும் கலைஞர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.


சர்க்காரியா கமிஷன் பின்னணி என்ன?


1972-ல் தொடங்கிய புகார்கள்

சர்க்காரியா கமிஷன் அமைக்கப்படுவதற்கு ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரம் தொடங்கிவிட்டது.

கமிஷன் ஆவணங்களின்படி, 1972 நவம்பர் 4ஆம் தேதி எம்.ஜி.ராமச்சந்திரன் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பினார். கலைஞர் தலைமையிலான தமிழக அமைச்சரவை மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றிருந்தன.


அதைத் தொடர்ந்து 1972 நவம்பர் 6ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் மற்றொரு மனுவை அளித்தனர். பின்னர் கல்யாணசுந்தரம் தரப்பிலிருந்து மேலும் ஒரு மனுவும் அளிக்கப்பட்டது.

1975 டிசம்பர் 1ஆம் தேதி நாஞ்சில் மனோகரன், ஜி.விசுவநாதன் ஆகியோர் அளித்த மனுவும் பின்னர் கமிஷனுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்றது.

புகார்கள் கிடைத்தவுடன் நேரடியாக சர்க்காரியா கமிஷன் அமைக்கப்படவில்லை.


1972 நவம்பர் 15ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, புகார்கள் தொடர்பாக கலைஞரிடம் விளக்கம் கேட்டார்.

அதற்கு 1972 டிசம்பர் 14ஆம் தேதி கலைஞர் தனது பதிலை அனுப்பினார்.


குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். 1973 ஜனவரி 10ஆம் தேதியும், எம்.கல்யாணசுந்தரம் 1973 பிப்ரவரி 5ஆம் தேதியும் மறுப்புப் பதில்களை அனுப்பினர். அவற்றுக்கும் 1973 மே 28ஆம் தேதி கலைஞர் மேலதிக விளக்கத்தை பிரதமருக்கு அனுப்பினார்.


இந்த மனுக்கள், மறுப்புகள், கலைஞரின் விளக்கங்கள் ஆகியவை அன்றைய தமிழக அரசால் மூன்று புத்தகங்களாக வெளியிடப்பட்டன என்பதையும் சர்க்காரியா கமிஷன் ஆவணம் பதிவு செய்கிறது.

அதாவது, 1972-ல் புகார்கள் எழுந்தபோதே அவற்றுக்கான பதில்களும் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டிருந்தன என்பது கமிஷனின் சொந்த ஆவணத்திலேயே பதிவாகியுள்ளது.


இதற்கிடையே 1975 ஜூன் 25ஆம் தேதி நாடு முழுவதும் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. நெருக்கடி நிலையை எதிர்த்து வந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசு 1976 ஜனவரி 31ஆம் தேதி மத்திய அரசால் கலைக்கப்பட்டது.


அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, 1976 பிப்ரவரி 3ஆம் தேதி, மத்திய அரசு S.O.74(E) அறிவிப்பின் மூலம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.சர்க்காரியா தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அமைத்தது.


1952ஆம் ஆண்டின் விசாரணைக் கமிஷன்கள் சட்டத்தின் கீழ் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் உள்ளிட்டோர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதே கமிஷனின் பணியாக இருந்தது.


திமுக அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 54 புகார்களில் 28 புகார்கள் சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பின்னாளில் இதையே கலைஞர் சட்டமன்றத்திலும் குறிப்பிட்டு, மீதமுள்ள 26 புகார்களையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கமிஷனின் விசாரணைப் பட்டியலில் கலைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் சொத்துகள், வீராணம் திட்டம், வான்வழி பூச்சிமருந்து தெளிப்பு, சர்க்கரை தொடர்பான விவகாரம், சமயநல்லூர் மின் நிலையம், கொடைக்கானல்–பழனி சாலை, சிம்சன் நிறுவனம், சக்தி பைப்ஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தனித்தனி பகுதிகளாக இடம்பெற்றன. இதில் வீராணம் திட்டம் தனியாக விரிவாக விசாரிக்கப்பட்ட விவகாரங்களில் ஒன்று.


கமிஷனின் முன்னுரையில் விசாரணையின் அளவு குறித்த புள்ளிவிவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சர்க்காரியா கமிஷன் மொத்தம் 86 முறை கூடியது


. விசாரணை அமைப்புகள் சுமார் 1,600 சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தன.


சுமார் 13,000 முழுத் தாள்கள் அளவிலான வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், கமிஷனின் சாட்சியப் பதிவுகள் சுமார் 11,777 பக்கங்கள் அளவுக்கு இருந்ததாகவும் அறிக்கையின் முன்னுரை தெரிவிக்கிறது.


கமிஷன் அமைக்கப்பட்ட பின்னர் விசாரணைக்கு உதவ சிபிஐ மற்றும் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சர்க்காரியா கமிஷனின் முதல் அமர்வு 1976 மே 14ஆம் தேதி புதுடெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.


புகார்தாரர்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் சார்பில் நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் ஆஜரானார்கள். கலைஞர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சார்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி விசாரணையில் பங்கேற்றனர்.


சர்க்காரியா கமிஷனின் முதல் அமர்விலேயே அதன் விசாரணையின் சட்டரீதியான தன்மை குறித்த முக்கியமான விளக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமிஷனின் பணி தனக்கு அளிக்கப்பட்ட வரம்புக்குள் உண்மைகளைக் கண்டறிவது.


அது ஒரு குற்றவியல் நீதிமன்ற விசாரணை அல்ல. கமிஷன் முன்பு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பவர்களை, குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளும் குற்றம் சாட்டப்பட்டவர்களாகக் கருத முடியாது என்பதும் அங்கு விளக்கப்பட்டது.


கமிஷனின் findings தாமாகவே நீதிமன்றத் தீர்ப்புக்குரிய சட்ட அமலாக்க வலிமையைப் பெறுவதில்லை என்பதும் அதன் விசாரணை நடைமுறை தொடர்பான முக்கிய அம்சமாகும்.


சர்க்காரியா கமிஷனின் First Report முகப்பில் 3, 11(a), 11(b), 12, 15, 16, 19, 22(c), 22(d) ஆகிய ஒன்பது serial/sub-serial விவகாரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


டிராக்டர் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம், நாதன் பப்ளிகேஷன்ஸ், வான்வழி பூச்சிமருந்து தெளிப்பு, எஸ்.கந்தப்பன் தொடர்பான விவகாரம், நியூ குளோப் தியேட்டர் நிலம், ஏ.எல்.சீனிவாசன் தொடர்பான விவகாரம் உள்ளிட்டவை முதல் அறிக்கையில் இடம்பெற்றன.

எனவே முதல் அறிக்கையை “28 புகார்களின் முழுமையான இறுதி அறிக்கை” என்று கருத முடியாது. குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றிய முதல் அறிக்கையாகவே அது வெளியானது.


தற்போது விஜய் முன்வைத்திருக்கும் வீராணம் திட்ட விவகாரம் சர்க்காரியா கமிஷனின் விசாரணைப் பொருள்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.


நமக்குக் கிடைத்த கமிஷனின் தமிழ் அறிக்கையின் பொருளடக்கத்தில் வீராணம் திட்டம் பக்கங்கள் 71 முதல் 150 வரை தனிப் பகுதியாக இடம்பெற்றுள்ளது.


அதில் திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆவணங்கள், வாக்குமூலங்கள் மற்றும் அவற்றின் மீதான கமிஷனின் ஆய்வு இடம்பெற்றுள்ளது.


“பிணம் தின்னிக் கழுகு மாதிரி”..   பிடிஆர் 


#News4Tamil 


மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். வீரவசந்தராயர் மண்டபம் மீளுருவாக்கம் செய்யப்பட்டது பற்றிய அந்தப் பதிவில், "தமிழக வரலாற்றில் மன்னராட்சி காலத்திற்குப் பிறகு இவ்வளவு உயரமான கல் மண்டபம் இப்பொழுதுதான் எழுப்பப்பட்டுள்ளது.

 வீரவசந்தராயர் மண்டபத்தை சிறப்புற மறுஉருவாக்கம் செய்துள்ள தலைமை சிற்பி வி. பி. வேல்முருகன் அவர்களுக்கும், அவருடன் இணைந்து செயல்பட்ட சிற்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் கிழக்கு கோபுரத்தை அடுத்துள்ளது வீரவசந்தராயர் மண்டபம். ஏறத்தாழ 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்பும் கலைச் சிறப்பும் ஒருங்கே அமைந்த மண்டபம்.

2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்தில் மண்டபத்தின் பெரும்பகுதி தீக்கிரையானது. அழகிய கற்பாறைத் தூண்களையும் மரத்தாலான உத்தரம் மற்றும் மேற்கூரைகளையும் இழந்தோம்.

 இந்நிலையில், இதனை மீண்டும் புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து முயற்சி எடுத்தது.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், இத்திருப்பணியின் தொடக்கத்தில் அவரோடு முழுமையாக உடன் நின்றேன் என்பதைப் பெருமையோடு பதிவு செய்கிறேன். 

சுமார் பத்தாண்டுகால முயற்சியின் பலனாக இக்கல் மண்டபம் எழுப்பப்பட்டுப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன." எனப் பதிவிட்டிருந்தார்.

நெட்டிசன் ஒருவர் சு.வெங்கடேசனின் 

இந்தப் பதிவைக் குறிப்பிட்டு, இந்து சமய அறநிலையத்துறை விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னர் குறிப்பிட்டது இந்த நபரைத்தானா எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.PTR Palanivel Thiagarajan Takes Swipe at Su Venkatesan Compares Him to a Vulture

அதற்கு பதில் அளித்துள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 

"இல்லை... இல்லை... இவர் வேறு வகை - தனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத நூற்றுக்கணக்கான விஷயங்களுக்குப் பெருமை தேடிக்கொள்வதில் மட்டுமே இவர் கில்லாடி. 

பல மைல் தூரத்திலிருந்தே பிணத்தின் வாசனையை உணரும் கழுகைப் போன்றவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மதுரை மக்களவைத் தொகுதி எம்.பியாக உள்ளார். 

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 2016 முதல் 2026 வரை 10 ஆண்டுகளாக மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்தவர்.

 5 ஆண்டுகாலம் அமைச்சராகவும் பணியாற்றினார். இந்நிலையில், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து பிடிஆர் தெரிவித்துள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது...

Somasundaramமுகநூலில்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி