1985-ம் ஆண்டு நடந்தது
📃 பாஜகவின் கிளையாக தவெக இருந்ததாக விஜய் பேசியதால் சலசலப்பு. தவெக புதிதாக கிளையை திறந்து உள்ளதாகவும் உண்மையைப் பேசியதால் தொண்டர்கள் குழப்பம்.
📃 செல்லும் இடமெல்லாம் எழுந்த எதிர்ப்பை மறைக்கவே சத்யபாமா அழுது அனுதாபம் தேடுவதாக தமிமுன் அன்சாரி விமர்சனம். தாராபுரத்தில் விஜய் நடத்தியது ஓரங்க நாடகம் என அதிமுக எம்.பி. இன்பதுரை காட்டம்.
📃 தமிழ்நாடு அமைச்சரவையில் பாமக இடம்பெறுவதாக வெளியான தகவல் வதந்தி என சவுமியா அன்புமணி விளக்கம். வதந்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்றும் பேட்டி.
📃 தவெக கூட்டணியில் பாமக இடம்பெறபோகிறது என சமூக வலைதளங்களில் வதந்தி. விசிக வாக்குகளை தவெகவுக்கு செல்லவிடாமல் தடுக்க சதி என திருமாவளவன் குற்றச்சாட்டு.
📃 எஸ்.ஐ.ஆர். சர்ச்சைகளால் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு களங்கம். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் வேதனை.
📃 மத்தியப் பல்கலைக்கழகங்களில் சாதி ஒழிப்பு பாடங்களுக்கு எதிர்ப்பு. மாணவர்கள் சிந்திப்பதை மோடி அரசு விரும்பவில்லை என விமர்சனம்.
📃 இஸ்ரேலில் விமானத்தை தரையில் மோத திட்டமிட்ட துணை விமானி. சதியை முறியடித்து பத்திரமாக தரையிறக்கிய இந்திய விமானி.
1985-ம் ஆண்டு நடந்தது.?
1985-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், மெரினா கடற்கரையைச் சர்வதேச அளவுக்கு அழகுபடுத்தும் திட்டம் ஒன்று
எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்டது.
பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், சுற்றுலாப் பயணிகள் பார்க்கவும் கடற்கரையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றுஎம்.ஜி.ஆர் அரசு கருதியது.
அதன் ஒரு பகுதியாக, 1985 நவம்பர் 4-ஆம் தேதி அதிகாலை நேரத்தில், மாநகராட்சி அதிகாரிகளும் போலீசாரும் புல்டோசர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்தனர்.
அயோத்திக்குப்பம், நொச்சிக்குப்பம் போன்ற பகுதிகளில் மணலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கட்டுமரங்கள், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை முன்னறிவிப்பின்றி அள்ளிச் சென்று பறிமுதல் செய்தனர்.தங்கள் வாழ்வாதாரக் கருவிகள் பறிக்கப்பட்டதைக் கண்ட மீனவ மக்கள் கொதித்தெழுந்தனர்.
நவம்பர் 5-ஆம் தேதி மெரினா காமராஜர் சாலையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அந்தப் போராட்டத்தின்போது அன்னம்மாள் என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அடுத்த இரண்டு நாட்களில், கோதண்டபாணி என்ற இளம் மீனவர் தலைமைச் செயலகம் (செயின்ட் ஜார்ஜ் கோட்டை) எதிரே தனது உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த அடுத்தடுத்த மரணங்கள் மீனவ கிராமங்களை ஒட்டுமொத்தமாகக் கொந்தளிக்க வைத்தன.
1985 டிசம்பர் 4 துப்பாக்கிச்சூடு
ஒரு மாத காலம் தொடர்ந்த பதற்றத்தின் உச்சகட்டமாக, 1985 டிசம்பர் 4 அன்று மெரினா கடற்கரை போர்க்களமாக மாறியது.
பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் காமராஜர் சாலையில் திரண்டனர். போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
நிலைமை கைமீறிப் போகவே, போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தக் கொடூர துப்பாக்கிச்சூட்டில் 5-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; ஏராளமானோர் குண்டு காயமடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, உச்சநீதிமன்றத் தலையீட்டின் பேரில் 1985 டிசம்பர் 10 அன்று பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் வலைகளையும் மீனவர்களிடமே அரசு திருப்பி ஒப்படைத்தது.
மெரினாவிலிருந்து மீனவர்களை அகற்றும் திட்டமும் கைவிடப்பட்டது.
ஆண்டுதோறும் டிசம்பர் 4-ஆம் தேதியை மெரினா மீனவர்கள் 'தியாகிகள் தினமாக' நினைவுகூர்ந்து வருகின்றனர்.
தன்னை எம்.ஜி.ஆர் எனத் தானே கூறிக்கொள்ளும் நடிகர் விஜய் தற்போது பட்டிணப்பாக்கத்தில் கை வைக்க திட்டமிடுகிறார்.
கண்ணீர் விட்டு அழுதது... நாடகம்?
இடைத்தேர்தலுக்கான இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் விஜய், மேடையில் பேசியது குறித்து ட்ரோல்கள் அதிகரித்து வரும் நிலையில், த.வெ.க வேட்பாளர் சத்யபாமா அழுதது குறித்தும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6-ந் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அ.தி.மு.க.வில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) ஆகிய இருவரும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் த.வெ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார், அதனைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 30) தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்,
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட விஜய், தாராபுரத்திற்கு தனது பிரச்சார வாகனத்தில் சென்ற நிலையில், அங்கு ரோடு ஷோ சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரச்சாரத்திற்கான அரங்கத்திற்குள் வந்த விஜய், திருப்பூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் குறித்து பேசிய விஜய், இடையில் பா.ஜ.க.வும் தி.மு.க.வும் ஒன்று என்று சொல்வதற்கு பதிலாக பா.ஜ.க. த.வெ.க என்று சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், இணையத்தில் பலரும் விஜயின் இந்த பேச்சு குறித்து கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதேபோல், விஜய்க்கு முன்பாக பேசிய, த.வெ.க வேட்பாளர் சத்யபாமா, பேசிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு அருகில் இருந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு போன்கால் வருகிறது,
அந்த கால் அட்டன் செய்து பேசிய அவர், கால் கட் ஆனவுடன், சத்யபாமாவின் அருகில் வந்து ஏதோ சொல்கிறார். அதன்பிறகு நான் எந்த தவறும் செய்யவில்லை என்று பேச தொடங்கிய சத்யபாமா ஒரு கட்டத்தில் அழ தொடங்கிவிட்டார்.
இவருக்கு முதல்வர் விஜய் ஆறுதல் கூறியிருந்தார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இதனை ட்ரோல் செய்து வருகின்றனர். இன்றைக்கு ஸ்கிரிப்ட் சரியாக செட் ஆகவில்லை.
வேட்பாளர் சரியாக நடித்தார்.
ஆனால், விஜய் சரியாக மனப்பாடம் செய்யவில்லை சொதப்பிவிட்டார்,"இன்னொரு டேக்"என்று விமர்சித்து வருகின்றனர்.
இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த அரசை 'தமிழக வாபஸ் கழக அரசு' என்று சொல்லலாம்.
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு மிகமிக மோசமானது சட்டம் ஒழுங்கு தான். கிரிமினல்கள் ராஜ்யம் என்று சொல்லத்தக்க வகையில் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன.
இது பற்றி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்று நினைக்கிறது த.வெ.க. ஆட்சி. அதனால் தான் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று அரசாணை போடுகிறார்கள்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது மக்களுக்குத் தரப்பட்டுள்ள மாபெரும் அரசியல் உரிமை ஆகும். அதைப் பறிக்கும் வகையில் ஒரு அரசாணையை விஜய் அரசு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று பிறப்பித் துள்ளது.'சட்டம்-ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்படாது' என்பதுதான் அந்த அரசாணை ஆகும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 24(4) இன் கீழ் மாநில அரசுக்கு இத்தகைய சிறப்பு அதிகாரம் இருப்பதாக விஜய் அரசு சொல்கிறது. இது அப்பட்டமாகவே குற்றங்களை மறைக்கும் முயற்சி ஆகும்.
போலீசைக் காப்பாற்றும் முயற்சியாகும். 'போலீஸ் ராஜ்யம்' நடத்த நினைக்கிறார் முதலமைச்சர் விஜய்,
மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், கைதுகள்குறித்து கேள்வி கேட்க முடியாது.
போலீஸ் சித்திரவதைகள், விசாரணைக் கைதிகளின் மரணங்கள் குறித்து சந்தேகக் கேள்விகளைக் கேட்க முடியாது. துப்பாக்கிச் சூடுகள் நடந்தால் அதன் காரணத்தையோ, காரணம் ஆனவர்களையோ தெரிந்து கொள்ள முடியாது.
அரசியல் காரணங்களை அறிய முடியாது. சாதி மோதல்கள் தொடர்பாக பதிவான வழக்குகள் என்றால் அது குறித்தும் தெரிந்து கொள்ள முடியாது. பொதுவாகவே போராட்டங்கள்என்றால் அது தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கானகோரிக்கைகளைக் கையாள முடியாது.
இவை குறித்த எந்த தகவலையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது.
‘போலீஸ் ராஜ்யம் நடத்த நினைக்கிறாரா விஜய்?' என்று பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த நிலையில் அந்த அரசாணையை ரத்து செய்து விட்டோம் என்று அறிவித்துள்ளது த.வெ.க. அரசு.
பெரும்பான்மை பலம் இல்லாமல் அடுத்தவர் தயவால் ஆட்சியை ஒட்டிக் கொண்டிருக்கும் போதே இத்தகைய சர்வாதிகார, அராஜக அரசாணைகளை போடுகிறார் விஜய் என்றால், இவர் எல்லாம் பெரும்பான்மை பெற்றால் அந்த ஆட்சி எத்தகைய ஆட்சியாக இருக்கும் என்பதற்கு இது உதாரணம் ஆகும்.
ஒரு அரசாணையை வெளியிடும் போது ஆயிரம் முறை சிந்திக்க வேண்டும். அத்தகைய சிந்தனைத் திறனற்ற அரசாக த.வெ.க. அரசு இருக்கிறது. தான் நினைப்பதை அரசாணையாக வெளியிடுகிறார்கள்.மக்கள் எதிர்ப்பு வந்ததும் வாபஸ் பெறுவார்கள். இது விஜய் ஆட்சிக்கு வழக்கமானதுதான்.
தான் முதலமைச்சர் ஆனதும், விஜய் செய்த முதல் காரியம் தனது ஆஸ்தான ஜோசியருக்கு அரசுப் பதவியை வழங்கினார். எதிர்ப்பு கிளம்பியதும் அதனை வாபஸ் பெற்றார்.
மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்குத் தரப்போவதாக டெண்டர் விட்டார். எதிர்ப்பு கிளம்பியதும் அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது.
அரசியல் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்கத் தடை என்று ஒரு அரசாணை வந்தது. எதிர்ப்பு கிளம்பியதும் வாபஸ் என்று அறிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் இடதுசாரிகள் குறித்த தகவல்களைத் திரட்ட அரசு உத்தரவு போட்டது. எதிர்ப்பு வந்ததும் அந்த உத்தரவு ரத்து ஆனது.
காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கான அடிப்படை வசதிகளை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த நிதியில் இருந்து செய்ய வேண்டும் என்று அரசாணை போட்டார்கள். எதிர்ப்புக்கு பிறகு வாபஸ் பெற்றார்கள்.
சென்னையில் சொத்து வரி திடீரென்று ஒருநாள் அதிகம் ஆனது. மக்கள் எதிர்ப்பு கிளம்பியதும் வாபஸ் என்று அறிவித்தார்கள்.
செய்யாறு சிப்காட் தொழிற்சாலை நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நிலைப்பாட்டிலும் தடுமாறினார்கள்.
இந்த வரிசையில் தான் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவலைப் பெற முடியாது என்ற அரசாணையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அப்படியானால் இந்த அரசு வாபஸ் அரசுதானே?
ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் ஐ.ஏ.எஸ்.களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதற்கு இவை எல்லாம் உதாரணங்கள். ஆட்சிச் சக்கரம் அதனதன்
விருப்பத்துக்கு ஓடுகிறது என்பதற்கு இவை எல்லாம்தான் ஆதாரங்கள்.
புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமையப் போகிறது என்கிறது ஒரு அரசாணை. பிரச்சினை பெரிதாகி மீனவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததும், 'முதலமைச்சர் இன்னும் இது பற்றி முடிவெடுக்க வில்லை' என்று 'பொய் துறை' அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்லி இருக்கிறார்.
'பட்டினப்பாக்கத்தில் ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் 25.55 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம், பேரவை வளாகம் அமையும்' என்று செப்டம்பர் 3 ஆம் தேதியன்று அரசாணை போட்டுள்ளார்கள்.
முதலமைச்சர் அனுமதி இல்லாமல் அரசாணை போட முடியுமா?
முதலமைச்சருக்கு சொல்லாமல் அரசாணை போட்டவர் யார்?
இது ஆட்சியல்ல, வெறும் காட்சி தான் என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை.
அரசாணைகளை வெறும் காகிதங்களாக ஆக்கிவிட்டார்கள்.



