இந்-தியா கூட்டணி..?

  📃  நாளை மறுநாள் பரப்புரை முடிய உள்ள நிலையில் அனல் பறக்கும் இடைத்தேர்தல் களம். இன்று,  மு.க.ஸ்டாலின் தாராபுரத்திலும் 

விஜய் மதுராந்தகத்திலும், பிரச்சாரம்.📃  தாராபுரம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை. முதலமைச்சர் விஜய் ஊர் ஊராக நடந்து சென்றாலும் இடைத்தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.📃  தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக பிரச்சாரத்தை, தவெக அரசு தடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார். பரப்புரைக்கு அனுமதி பெற்ற இடத்தில் கடைசி நேரத்தில் அனுமதி மறுப்பதாகவும் குற்றச்சாட்டு.📃  கூட்டணி தொடங்கி எதிலும் தவெகவிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என பெ.சண்முகம் விமர்சனம். இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக பணம் தருவது தவெகதான் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு.📃  மதுராந்தகத்தில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை. மாணிக்கம் தாகூர் பேசியபோது, திடல் வெறிச்சோடியதால், காலி இருக்கைகளை பார்த்து உரையாற்றினார்.📃  முதலமைச்சர் விஜய்க்கு தோல்வி தடுமாற்றம் வந்துவிட்டதாக நயினார் நாகேந்திரன் விமர்சனம். பரப்புரையில் எதையோ சொல்ல வந்து, எதையோ கூறியுள்ளார் என்றும் பேட்டி.📃  தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் 5 சதவீதம் வரை சரிந்ததால் அதிர்ச்சி. நிர்வாகக் கோளாறின் வெளிப்படையான அடையாளம் என தங்கம் தென்னரசு விமர்சனம்.

📃  5 தொகுதி இடைத் தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கு. தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.📃  பாலியல் வழக்கில் சிறையில் உள்ள ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை. சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.📃  தமிழ்நாட்டில், நாகர்கோவில், வள்ளியூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை. வடகிழக்கு பருவமழை இம்மாதம் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.📃  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் சென்னை வந்தனர். வித்யா ராமராஜ், விஷால், பரணிகா, அபிநயா, ஹரிகரன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு.📃  வாக்காளர் சேர்ப்புப் படிவம் 6-ஐ சட்டவிரோதமாக மாற்றம் செய்ய உத்தரவிட்டது யார்?. டிசிஎஸ் நிறுவனத்திற்கு அழுத்தம் தரப்பட்டதா என்றும் ராகுல் காந்தி கேள்வி.📃  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி இன்று முதல் சி.ஜே.பி. போராட்டம். அபிஜித் தீப்கே நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில், மும்பை சிவாஜி பூங்கா, டெல்லி ஜந்தர் மந்தரில் போலீஸ் குவிப்பு📃  உத்தராகண்ட் மாநிலத்தில் திடீரென சரிந்து விழுந்த மலை. தொடர் கனமழையால் பலவீனம் அடைந்து சரிந்ததாக தகவல்.




இந்-தியா கூட்டணி..?

டெல்லி மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் இப்போது ஒரு புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய 'இந்தியா' கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் நெருக்கம் காட்டி வரும் நிலையில், தேசிய அளவில் மட்டும் திமுக தங்களை ஆதரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே, காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் மூன்றாவது அணி ஒன்றை உருவாக்க திமுக காய்களை நகர்த்தி வருவதாகக் கூறப்படும் செய்தி, அகில இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


நடந்து முடிந்த தமிழக அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது.

இதனால் பல ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது.

"தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி, ஆனால் தேசிய அளவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுகவின் ஆதரவு வேண்டும்" என்ற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது.


தமிழகத்தில் ஒரு கணக்கு, டெல்லியில் ஒரு கணக்கு என்ற காங்கிரஸின் இந்த அணுகுமுறை திமுக தலைமையை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தங்களை தமிழகத்தில் கழற்றிவிட்டுவிட்டு, தேசிய அளவில் மட்டும் துணைக்கு அழைப்பதை திமுக நிர்வாகிகள் சற்றும் விரும்பவில்லை.


டெல்லியில் நேற்று நடைபெற்ற முக்கிய அரசியல் சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பெண் தலைவர் ஒருவர் திமுகவின் மூத்த தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.


அப்போது, "வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் 'இந்தியா' கூட்டணியில் திமுக நீடிக்க வேண்டும்.. ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாநில அளவில் கூட்டணி வேறுபாடுகள் இருந்தாலும், தேசிய நலன் கருதி திமுக ஆதரவு அளிக்க வேண்டும்" என்று அவர் கிட்டத்தட்ட கெஞ்சும் தொனியில் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு திமுக தலைவர்கள் தரப்பில் உடனடியாக எந்தவொரு உறுதியான சாதகமான பதிலும் தரப்படவில்லை எனத் தெரிகிறது.


காங்கிரஸின் இந்த இரட்டை வேடத்தை முறியடிக்கவும், தேசிய அரசியலில் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்தவும் திமுக ஒரு புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


அதன்படி, காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு வலுவான "மூன்றாவது அணி"யை உருவாக்கும் திட்டத்தில் திமுக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

இந்த புதிய கூட்டணியில் சேர பல முக்கிய மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன:


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா
காக்ரோச் ஜனதா பார்ட்டி போன்ற செல்வாக்குமிக்க இதர மாநிலக் கட்சிகள்

காங்கிரஸ் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கருதும் திமுக, இந்த மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து தனி சக்தியாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளது.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்தத் தகவலால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.


ஆனால், திமுக போன்ற வலிமையான மாநிலக் கட்சிகள் தனி அணியாக உருவெடுத்து, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் போன்ற தலைவர்களை இணைத்துக் கொண்டால், அது ராகுல் காந்தியின் பிரதமர் கனவை தகர்த்துவிடும்.

இந்தியா கூட்டணி உடைந்தால், வாக்குகள் சிதறி அது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையே சீர்குலைத்துவிடும் என்பதால் காங்கிரஸ் தலைமை செய்வதறியாது திகைத்து நிற்கிறது.


மாநிலத்தில் ஒரு கூட்டணி, மத்தியில் ஒரு கூட்டணி என்ற இரட்டை நிலைப்பாட்டை எடுக்க நினைத்த காங்கிரஸுக்கு, திமுகவின் இந்த மூன்றாவது அணி வியூகம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை திமுக ஏற்குமா அல்லது மாநிலக் கட்சிகளைத் திரட்டி மாற்று சக்தியாக நிற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி