தனியார்மய தாகம்,.?

🔸 இந்த இடைத் தேர்தல், தாராபுரம் மக்களின் கண்ணியத்திற்கு முதலமைச்சர் விட்டிருக்கும் சவால். தவெக-வுக்கு வாக்களித்தால், தமிழ்நாடு முழுவதும் இடைத் தேர்தலை வரவைப்பார்கள் என மு.க.ஸ்டாலின் பேச்சு🔸 மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டாவது முறையாக பரப்புரை. டீக்கடையில் தேநீர் பருகியும், வயலில் டிராக்டர் ஓட்டியும் 40 இடங்களில் வாக்கு சேகரித்தார்.🔸 தமிழ்நாட்டில் தவெக என்ற கார்ப்பரேட் மாஃபியா ஆட்சி நடத்துவதாக மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம். வொர்க்கிங் பார்ட்னர், ஸ்லீப்பிங் பார்ட்னர், சீக்ரட் பார்ட்னர் என ஒரு கும்பலே பின்னணியில் இருப்பதாகவும் காட்டம்.🔸 தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு. வெற்றி மின்வெட்டு, அரிவாள் வெட்டு, விலைவாசி உயர்வு திட்டங்களே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் விமர்சனம்.🔸 இந்தியாவே பேசும் எஸ்.ஐ.ஆர். விஷயத்தில் விஜய் ஏன் வாய் திறக்கவில்லை? என ஸ்டாலின் கேள்வி. காவிரியில் நீர் திறக்காத கர்நாடகாவை கண்டிக்க பயமா? என்றும் விமர்சனம்🔸 அதிமுகவை மற்றும் பலர் என விமர்சிக்கும் முதலமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம். திரைப்பட ரிலீஸ் பிரச்சினைக்காக தனது வீட்டில் 3 மணி காத்திருந்தவர் தான் இந்த விஜய் எனவும் விமர்சனம்🔸 பாஜக-வின் கிளையே தவெக என விஜய் ஒப்புக் கொண்டுவிட்டதாக சீமான் விமர்சனம். திமுக-தான் எதிரி என திரும்பத் திரும்ப சொல்ல வெட்கமாக இல்லையா? என்றும் கேள்வி🔸 இடைத் தேர்தலில் தவெக-வுக்கு சாதகமாக தேர்தல் களம் இல்லை என பெ.சண்முகம் விமர்சனம். தூயசக்தி என கூறிக்கொள்ளும் தவெக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாகவும் குற்றச்சாட்டு🔸 ஆசிய விளையாட்டு ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி. 2028 ஒலிம்பிக் தொடருக்கும் தகுதி பெற்று அசத்தல்தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி டெல்லி, மும்பையில் சிஜெபி கட்சியினர் போராட்டம். சென்னையிலும் காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்புஸ்டிக்கர்   அரசு.?

வாபஸ் அரசா...??

விஜய் தலைமையிலான தவெக அரசு, ஒரு மினி பாஜகவை போலவே செயல்படுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். 

அதற்கு ஏற்றாற்போல் அவரது நடவடிக்கையும் இருந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்தாத தவெக, பாஜக பாணியான பிற கட்சி எம்.எல்.ஏ-க்களை வாங்குவதிலேயே குறியாக இருந்து வருகிறது.

அதோடு மோடி ஆட்சியின் அவலங்கள் குறித்து விமர்சித்தால், எல்லாவற்றுக்கும் காரணம் காங்கிரஸ் என கூறும் மோடியை போலவே, தற்போது விஜய் ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினால், திமுக திமுக என்றே கதறி வருகின்றனர் விஜய் மற்றும் அவரது கட்சியினர்.

 எல்லாவற்றுக்கும் பாஜக பாணியை பின்பற்றும் விஜய் கட்சி, அண்மையில் கூட பல்வேறு துறைகளை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதில் முனைப்பு காட்டியது.

இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?

அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் இந்தியை மெதுவாக ஊடுருவ வைக்கவும் முனைப்பு காட்டி வருவது வெட்ட வெளிச்சமாக அம்பலமாகியுள்ளது.அதாவது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில், இதுவரை அரசு துறைகளின் கீழ் இயங்கும் அனைத்து விவகாரங்களிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். இப்படியான சூழலில் ஊர்களின் பெயர்கள் இந்தியிலும் இடம்பெற்றுள்ளது, 

அதுவும் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது தவெக அரசுக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்தது.

இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?

அந்த வகையில் இந்த விவகாரத்துக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கண்டன பதிவில், "இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.

 தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல. எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?

வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். 

இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?

இந்த நிலையில், தற்போது அந்த பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகள் வழக்கம்போல் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துள்ளது தவெக அரசு. தவெக ஆட்சியில் பல மாற்றங்களை கொண்டு வருவதாக எண்ணி, தமிழ்நாடு கேடு தரும் திட்டங்களை தொடர்ந்து அறிவித்தும், அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பும்போது அதனை திரும்பப்பெறுவதையுமே வழக்கமாக வைத்துள்ளது. 

அந்த பட்டியலில் தற்போது இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளதுதனியார்மய தாகம்

சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தந்துவிடுமாறு தமிழ்நாடு முதல்வர் ஜோசப்விஜய் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளியான தகவல் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.


ஆனால் அடுத்தடுத்து தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் மாநில அரசுத் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பது, வெளியாகும் விமர்சனங்களை மாநில தவெக அரசு கருத்தில் கொள்கிறதா என்கிற கேள்வியைஎழுப்புகிறது.


மதுரை, நாகர்கோவில் மாநகராட்சி பாதாளச்சாக்கடை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம்ஒப்படைக்கப் போவதாகவும், இதைத்தொடர்ந்துஅனைத்து மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பாதாளச்சாக்கடை பராமரிப்புப் பணியும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


முந்தைய ஆட்சிக்காலத்தில் கோவை மாநகர குடிநீர் விநியோகம் பன்னாட்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போதுதவெக ஆட்சி அமைந்தபிறகு சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ்நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு, கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


மாதமாதம் மின் கணக்கீடு நடைபெறும் என்றுதவெக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது மின்கணக்கீட்டு பணியை ஒப்பந்த முறைக்கு மாற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பினால், இது சோதனை முயற்சிதான் என்று பதிலளிக்கப்படுகிறது.

போதுமான பணியாளர்கள் இல்லாததால்தான் இந்தப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதாக பொருத்தமற்ற காரணம் கூறப்படுகிறது.


வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கு பதிலாகஅனைத்தையும் தனியாருக்கு என்று சொல்லி தாரை வார்ப்பது இளைஞர்களின் வேலை வாய்ப்புக் கனவில் வெந்நீர்ஊற்றுவது மட்டுமின்றி, மாநிலத்தின் தூய்மைப்பணிக் கட்டமைப்பையே தகர்க்கும் செயலாகும்.


தனியார்மயக் கொள்கையில் அதிமுக, திமுகமற்றும் தற்போதைய தவெக ஆகிய கட்சிகளின் அணுகுமுறை ஒரேமாதிரி உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பேசியமுதல்வர் ஜோசப் விஜய் ஒரு கட்சி இன்னொரு கட்சி சொல்வதை கட் அண்ட் பேஸ்ட் செய்வதாக கூறியிருந்தார்.


உண்மையில் ஒன்றிய பாஜக அரசின் தனியார்மயத் திட்டங்களை தமிழக தவெக அரசு வெட்டிஒட்டி நடைமுறைப்படுத்துவது கடுமையாக ஆட்சேபிக்கத்தக்கதாகும்.

மதுரையில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ‘அவர்லேண்ட்’ எனும் தனியார் நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர்களை வஞ்சிப்பது மட்டுமின்றி, மாநகராட்சியையும் மக்களையும் ஏமாற்றும் வகையில் பல்வேறு தில்லுமுல்லு, திருகுதாள வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.


இந்தஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தவெக அரசு தனியார்மய மோகத்தை கைவிடவில்லை என்றால் ‘மாற்றம்’ பெரும் ஏமாற்றமாகவே முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி