சபாநாயகர் மீது வழக்கு..!

 📃 இன்று மாலையுடன் ஓய்கிறது 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரை. இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில்திமுக,அதிமுக,இடதுசாரிபகள்,தலெகவேட்பாளர்கள் தீவிரம்.📃 இந்தியாவே தேர்தல் முறைகேடுகள் குறித்து பேசிய போது முதலமைச்சர் விஜய் வாயை திறக்காதது ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி.📃 தாராபுரத்தில் 3 நாட்கள் இடைவெளியில் முதலமைச்சர் விஜய் மீண்டும் இன்று பரப்புரை. தவெக வேட்பாளரை ஆதரித்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவுக்கு ரோடு ஷோ செல்ல திட்டம்.தொல்வி பயம் காரணம்.,?📃 குண்டடம் பகுதியில் தவெக வேட்பாளருக்கு நிலவும் எதிர்ப்பால் முதலமைச்சரின் பிரச்சாரத் திட்டத்தில் மாற்றம். தாராபுரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்லவும் ஏற்பாடு.📃 தவெகவை நம்பி இனியும் ஏமாற மக்கள் தயாராக இல்லையென எடப்பாடி பழனிசாமி பேச்சு. டிராக்டர் ஓட்டினால் மட்டும் விவசாயி ஆகிவிட முடியாது என்றும் கிண்டல்.





எப்படி ரத்து செய்ய முடியும்?

சபாநாயகர் மீது வழக்கு!


 21 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை எப்படி ரத்து செய்ய முடியும்?

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



 தமிழ்நாடு சட்டப்பேரவையில் த.வெ.க அரசு கடந்த மே 13ம் தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி,

25 அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த 25 பேரில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கடிதம் அளித்துள்ளதால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கோரிய மனுவை திரும்பப்பெற்று கொள்வதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.


இதையடுத்து அதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிட்டு அதனை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.


மேலும் பதவியை ராஜினாமா செய்த நான்கு எம்.எல்.ஏக்கள் மீது சட்டரீதியான விசாரணை நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்போது தெரிவித்திருந்தார்


மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,‘‘தமிழ்நாடு சட்டப்பேரவை விவகாரத்தில் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

'

இதைத்தொடர்ந்து மொத்த எண்ணிக்கையில் 21பேர் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கோரிய மனுவை திரும்பப்பெற்று கொள்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.


இதையடுத்து அதனை ஏற்றுக்கொள்வதாகவும், நடவடிக்கையை கைவிடுவதாகவும் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிடுகிறார்.


இதில் முதலாவதாக 21 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்படுகிறது. அதுகுறித்து எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் எப்படி நடவடிக்கையை சபாநாயகர் கைவிட முடியும்.


இது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். எனவே மேற்கண்ட விவரங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணையின் 2(1)பியின் கீழ் செல்லுபடியான மன்னிப்பு மற்றும் திரும்பெப்பெறுதலை உள்ளடக்குகின்றனவா?,


அரசியல் பகுப்பாய்வு

சட்டத்திற்கு இணங்க அந்த நடவடிக்கையை தீர்மானிக்கிறதா?,


மேலும் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க சபாநாயகருக்கான அதிகாரம் அனுமதி வழங்கி உள்ளதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதையடுத்து இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி