திமுகவை அடுத்து உ.பி, யில் அகிலேஷ்

📃 இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை வாக்குப்பதிவு. வாக்குச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு📃 விஜய் ரோடு ஷோ-வால் தாராபுரத்தில் திமுக பிரச்சாரத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை. நாதக வேட்பாளர் உள்ளிட்டோரை குண்டுகட்டாக கைது செய்ததால் பரபரப்பு.📃 தூய சக்தி என தம்பட்டம் அடித்த தவெக ரீல், நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம். வாக்குச் சாவடிக்கு செல்லும் முன் மின் கட்டணம், விலைவாசி உயர்வை கவனத்தில்கொள்ள அறிவுறுத்தல்.📃 இடைத்தேர்தல் தீர்ப்பு, குதிரை பேரத்தில் விலை பேசும் தவெகவுக்கு வாழ்நாள் பாடமாக இருக்க வேண்டும். துரோகிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்..📃 இடைத்தேர்தலில் Gpay, PhonePay மூலம் தவெகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக பெ.சண்முகம் குற்றச்சாட்டு. புகார் அளித்தும் தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் வேதனை.📃 தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் 3-வது நாளாக தொடரும் போராட்டம். ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர் அமைப்பினரை தரதரவென இழுத்து சென்று கைது செய்த போலீசார்.📃 வாக்குரிமையை பறிப்பது உடலில் இருந்து உயிரை வெளியே எடுப்பதற்குச் சமம் என உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பேச்சு. கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்கும் தன்னிச்சையான நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது என்றும் கருத்து.📃 கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தபோது ஞானேஷ்குமார் மீதான லஞ்சப் புகார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணைக்கு உத்தரவிட்டது கேரன அரசு.📃 4 மாதங்களில் 3-வது முறை அரிசி விலை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி. பருப்பு உள்பட மளிகைப்பொருட்களும் விலையும் அதிகரிப்பு.📃 தவெக அரசின் தோல்வியால் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டை இழந்துள்ளதாக பாஜக குற்றச்சாட்டு. எம்ப்ரேயர் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் முதலீடுகள் நாக்பூருக்கு சென்றுவிட்டதாகவும் கண்டனம்.📃 திருத்தணியில் மனைவி, மகள் கண்முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட பெட்டி கடைக்காரர். தப்பியோடிய 2 கொலையாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிரம்.📃 தூத்துக்குடியில் அரிவாளுடன் பைக்கில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள். போலீசாரிடம் பிடிபட்ட நிலையில் திருக்குறளை வாசித்து மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டனர்.📃 ஆந்திராவில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போதே வேலை வேண்டும் என முழக்கமிட்ட இளைஞர்களால் சலசலப்பு. பேச்சை பாதிலேயே முடித்துக்கொண்ட நிர்மலா சீதாராமன்.📃 ஸ்பெயினில் இடதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை. கூட்டத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட வலதுசாரிகள்.

திமுகவை அடுத்து 

அகிலேஷ் முதுகில் குத்தும் காங்கிரஸ்?

 தேர்தல் என்று வந்துவிட்டாலே கூட்டணிக் கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்வதும், பின்னர் அதே கட்சிகளின் காலை வாரிவிட்டு தேர்தல் களத்தையே பாழாக்குவதும் காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமான பாணியாகவே மாறிவிட்டது.


பீகாரிலும் அடுத்து தமிழ்நாட்டிலும. கடந்த காலங்களில் திமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டு, தொகுதி பங்கீட்டில் அளவுக்கு அதிகமாக அடம்பிடித்து, பின்னர் களப்பணியாற்றாமல் தோற்றும் திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்திய வரலாற்று கசப்புகள் ஏராளம்.


தற்போது அதே கைவரிசையை உத்தரப் பிரதேசத்திலும் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் அரங்கேற்றத் தொடங்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி, களத்தில் நின்று கடுமையான உழைப்பை செலுத்தி வருபவர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

ஆனால், தேர்தல் பணிகளை நிம்மதியாக செய்யவிடாமல், அவரை சுற்றி நின்று காங்கிரஸ் கட்சி கொடுத்து வரும் குடைச்சல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அகிலேஷ் யாதவ் தொகுதி பங்கீடு குறித்து மிகவும் உருக்கமான, அதே சமயம் முதிர்ச்சியான கருத்தொன்றை முன்வைத்தார். "

தொகுதிப் பங்கீட்டை விட, நாம் அனைவரும் கூட்டணியாக ஒற்றுமையுடன் நின்று தேர்தலில் வெற்றி பெறுவதுதான் மிக முக்கியம்" என்று வெளிப்படையாகப் பேசினார்.

பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற அக்கறை அகிலேஷுக்கு இருக்கிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ அந்த பொது நோக்கத்தைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தங்கள் கட்சிக்கு 150 முதல் 200 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்து அகிலேஷின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறது.

கள எதார்த்தத்தை காங்கிரஸ் வசதியாக மறந்துவிடுகிறது. 403 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸிடம் தற்போது இருப்பது வெறும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே.


ஆனால் சமாஜ்வாதி கட்சியோ 120-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் பலமான எதிர்க்கட்சியாக களம் காண்கிறது.


மக்களவைத் தேர்தலிலும் 37 இடங்களை வென்று காங்கிரஸுக்கு உயிர் கொடுத்ததே அகிலேஷ்தான். அப்படியிருக்க, எந்த மக்கள் ஆதரவை வைத்துக்கொண்டு காங்கிரஸ் 150 தொகுதிகளை கேட்கிறது?


வெற்றி பெற முடியாத இடங்களில் எல்லாம் சீட்டுகளை வாங்கி வீணடிப்பதும், கடைசியில் பாஜக எளிதாக வெல்ல வழிவகுப்பதும் தான் காங்கிரஸின் தேர்தல் திட்டமா என்ற கடுமையான கேள்வி எழுகிறது.

காங்கிரஸ் கட்சியின் இந்த சுயநல அரசியல் புதிதல்ல. தமிழக தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இது அப்பட்டமாகத் தெரியும். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் காங்கிரஸ், தனது பலத்திற்கு மீறி அதிகப்படியான தொகுதிகளை கேட்டு அடம்பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளது.

வேறு வழியின்றி திமுக தொகுதிகளை ஒதுக்கினாலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் எந்தவித உருப்படியான தேர்தல் களப்பணியும் நடப்பதில்லை.

சொந்தக் கட்சிக் கோஷ்டி பூசல், உள்ளடி வேலைகள் மற்றும் மெத்தனப் போக்கு ஆகியவற்றால் அந்தத் தொகுதிகளில் எளிதாக தோல்வியடைந்து, மொத்த கூட்டணியின் ஆட்சி அமைக்கும் வாய்ப்பையே பலமுறை காங்கிரஸ் கெடுத்து வைத்திருக்கிறது.


கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றிபெறும் காங்கிரஸ், களத்தில் கூட்டணிக் கட்சியை பலிகடா ஆக்குவதில் கைதேர்ந்தது. தமிழகத்தில் திமுகவுக்கு செய்த அதே சூழ்ச்சியைத்தான், இன்று உ.பி.யில் அகிலேஷ் யாதவுக்கும் செய்து கொண்டிருக்கிறது.

இன்றைய சூழலில் உ.பி.யில் பாஜகவை வீழ்த்த இரவு பகலாக வியூகம் அமைத்து வேலை செய்ய வேண்டிய தருணம் இது.

ஆனால், அகிலேஷ் யாதவை தொகுதிப் பங்கீட்டு பஞ்சாயத்துகளிலேயே முடக்கிப்போட்டு, அவரை ஒரு தேர்தல் பணிகளையும் நிம்மதியாகச் செய்யவிடாமல் காங்கிரஸ் தலைமை இழுத்தடித்து வருகிறது.

தங்களுக்கு செல்வாக்கே இல்லாத தொகுதிகளிலும் 50:50 பங்கீடு வேண்டும், சரிபாதி சீட்டு வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பொதுவெளியில் பேசி சமாஜ்வாதி தொண்டர்களை சீண்டி வருகின்றனர்.

"நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல" என்று காங்கிரஸ் தலைவர்கள் முழங்குவது, கூட்டணியின் அடிப்படை மரியாதையையே காலில் போட்டு மிதிப்பது போல் உள்ளது.

கூட்டணி தர்மம் என்பது விட்டுக்கொடுத்துச் செல்வதும், பொதுவான வெற்றிக்காக உழைப்பதும்தான். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, 'நாங்கள் தான் நாட்டின் பாரம்பரிய கட்சி, எங்களை முன்னிறுத்திதான் மற்றவர்கள் அரசியல் செய்ய வேண்டும்' என்கிற ஆணவத்திலேயே இன்னமும் வாழ்கிறது.

மாநிலக் கட்சிகளின் தயவில் உயிர்வாழ்ந்து கொண்டு, அதே கட்சிகளை மிரட்டி அடிபணிய வைக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அகிலேஷ் யாதவ் காட்டும் பொறுமையை அவரது பலவீனம் என காங்கிரஸ் தப்புக்கணக்கு போடக்கூடாது. இனியாவது காங்கிரஸ் தனது பேராசையையும் உள்ளடி வேலைகளையும் கைவிட்டு, கள எதார்த்தத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.


இல்லையென்றால், கூட்டணிக்குள்ளேயே இருந்து குழிபறிக்கும் காங்கிரஸை ஓரங்கட்ட அகிலேஷ் யாதவ் முடிவெடுத்தால், உ.பி. மண்ணில் காங்கிரஸ் காணாமல் போவதைத் தவிர வேறு வழியிருக்காது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி