இடைத்தேர்தலுக்கு பின்

ஆதரவு இல்லை?

📰 மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பொதுத் தேர்தலைவிட குறைவான வாக்குப்பதிவு. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு.தாராபுரத்தில் விசில் சின்னத்துக்கு வாக்களிக்க மூதாட்டியை நிர்பந்தித்ததால் பரபரப்பு.📰 தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் போராட்டம். ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு.📰 அமைச்சர்கள் தங்குதவற்கு 14 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக சத்தியபாமா பேசிய வீடியோ வெளியான விவகாரம். நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் அதிகாரியிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்.📰 தவெக ஒரு தொகுதியைக்கூட வெல்லாத 8 மாவட்டங்களில் எஸ்ஐஆரில் குறைந்த வாக்காளர்கள் நீக்கம். அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் மட்டுமே தவெகவுக்கு அதிக வெற்றி கிடைத்தது அம்பலம்.📰 தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைய எஸ்ஐஆர் காரணமாக இருந்திருக்கலாம் என திருமாவளவன் பரபரப்பு கருத்து. பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் சதித்திட்டமே எஸ்ஐஆர் நடவடிக்கை என்றும் குற்றச்சாட்டு. 📰 தமிழ்நாட்டில் நத்தம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை. மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.📰 சங்கராபுரம் அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது மண் சரிந்து விபத்து. மூன்று பேர் மண்ணுக்கு அடியில் சிக்கிய நிலையில் ஒருவர் உயிரிழப்பு.📰 நடப்பாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பு. ஏற்றுமதி துறை எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவதே காரணம் என தகவல்.📰 நைஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 25 பேர் பலி. தொழில்நுட்ப கோளாறா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை.📰 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா உள்ளிட்ட 7 நாடுகள் விருப்பம். நாடுகளின் பட்டியலை வெளியிட்டது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி



இடைத்தேர்தலுக்கு பின்

கம்யூனிஸ்ட்டுகள்.. ஆதரவு இல்லையா?

 மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின், தவெக ஆட்சிக்கு அளித்த வந்த ஆதரவை திரும்ப பெறும் முடிவில் கம்யூனிஸ்ட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.


இதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொலிட் பீரோவின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டதாக முனுமுனுப்புகள் அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு கொடுத்தன.


அமைச்சரவையில் இடம் கொடுக்க தவெக முன் வந்த போதும் கூட, கம்யூனிஸ்ட்டுகள் அதனை ஏற்கவில்லை. எந்தவித நிபந்தனையும் இன்றி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம் என்றும் அறிவித்தனர்.


ஆனால் தவெக ஆட்சி அமைத்து 5 மாதங்கள் மட்டுமே ஆகி இருக்கும் சூழலில், தவெக - கம்யூனிஸ்ட்டுகள் இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.


குறிப்பாக கம்யூனிஸ்ட் மாணவர் இயக்க போராட்டங்களை ஒடுக்க சுற்றறிக்கை அனுப்பியது, கம்யூனிஸ்ட்டுகளை கணக்கெடுக்க சுற்றறிக்கை அனுப்பியது, சென்னை ஏர்போர்ட் தனியார்மயம், புதிய தலைமைச் செயலகம் ஆகியவற்றில் கம்யூனிஸ்ட்டுகள் கொந்தளித்தனர்.


இன்னொரு பக்கம் பாஜகவுக்கு எதிராக தவெகவின் மவுனம் அவர்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் காரணமாகவே தவெக அமைத்துள்ள மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் இணைய முன் வரவில்லை.

அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவர் இயக்கங்கள் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

இப்படியான சூழலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்கி அதிர்ச்சி கொடுத்தனர்.



கம்யூனிஸ்ட்டுகள் இந்த செயல்பாடு முதல்வர் விஜய்யை சங்கடப்படுத்தி இருக்கிறது. தற்போது இடைத்தேர்தலின் போது தவெக மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் முன் வைத்துள்ளன.


இதனால் இடைத்தேர்தல் முடிவு எப்படி வந்தாலும் தவெக ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவது என்ற முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்துவிட்டதாக பேச்சுகள் அதிகரித்துள்ளது.


இதற்காக பொலிட் பீரோவின் ஒப்புதலையும் பெற்றுவிட்டதாக முனுமுனுப்புகள் அதிகரித்துள்ளன.


இதனால் இடைத்தேர்தலுக்கு பின் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து இந்த முடிவை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி