இரட்டைத் தாக்குதல்!
நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் வெற்றிகரமாகப் பூமிக்குப் புறப்பட்டது.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மனைவி கைது.
மின்தடையை கட்டுப்படுத்த அரசு திட்டம் என்ன? தமிழகம் முழுவதும் தொடரும் மின்வெட்டு: கட்டணம் மட்டும் சரியான நேரத்தில் வருகிறது என மக்கள் விமர்சனம்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு புதிய டெண்டர்: மின்வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு: தனியார்மயமாகிறது.?
பதுக்கலை தடுக்க சர்க்கரை வியாபாரிகள் இருப்பு வரம்பு அக்.15 முதல் 1,000 குவிண்டலாக குறைப்பு
3 தேசிய விருதுகளை வென்ற பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் (75) காலமானார்.
நேபாள வெள்ளத்தில் மாயமான 5,285 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க அரசு முடிவு.
சவுதி விமானநிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தாக்குதல்.. 3 பேர் பலி.
இந்தியக் குடும்பங்களின் கடன் சுமை ஏற்கெனவே அபாயகரமான அளவில் உள்ளது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி)குடும்பக் கடன் 47.8சதவீதமாக உள்ளது.
— இதுஐந்தாண்டு சராசரியான 42.9 சதவீதத்தை விடஅதிகம். வீட்டுக் கடன் அல்லாத சில்லறைக் கடன்கள் 58.4 சதவீதமாக உள்ளன.
இந்நிலையில் ஒன்றிய அரசு ரெப்போ வட்டி விகிதத்தைஉயர்த்தியிருப்பது ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் குடும்பங்கள் மீது நடத்தும் இரட்டைத்தாக்குதலாகும்.
தமிழ்நாட்டில் அரிசி, காய்கறிகள், சமையல்எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 35 சதவிகிதம் வரைஉயர்ந்துள்ளது. 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ. 1,400-லிருந்து ரூ. 2,000-ஐக் கடந்துவிற்பனையாகும் சூழலில், வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறு வணிகர்கள், நெசவாளர்கள், திருப்பூர்ஏற்றுமதித் தொழிலாளர்களின் செயல்பாட்டு மூலதனமும் இதே வட்டியில்தான் ஓடுகிறது.
வட்டிச் செலவு கூடினால் முதலில்பறிபோவது வேலைவாய்ப்புதான்.
2026-இல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு96.22 வரை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசியாவின்மோசமான செயல்திறன் கொண்ட நாணயங்களில் ஒன்றாக ரூபாய் மாறியிருக்கிறது.
ரூபாய்வீழ்ச்சியடையும்போது, இறக்குமதி பொருட்களின் விலை உயரும்; இது நேரடியாக நுகர்வோர்மீது விழும். நாட்டின் பொருளாதாரம் இந்த அளவிற்குச் சீர்குலைந்திருப்பதற்கு ஒன்றிய அரசின் தொலைநோக்கற்ற அணுகுமுறைகளே முக்கியக் காரணமாகும்.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மாற்றங்களைக் காரணம் காட்டி, பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு வரிகளைக் குறைக்காமல் விட்டது, சரக்குப் போக்குவரத்துச் செலவைஅதிகரித்து அனைத்துப் பொருட்களின் விலையையும் சங்கிலித் தொடராக உயர்த்தியுள்ளது.மேலும், உள்நாட்டு வேளாண் உற்பத்தியைப் பலப்படுத்தாமல் இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் சந்தைக் கொள்கையும், காகிதக் கணக்கில் மட்டுமே காட்டும் ஜிடிபி வளர்ச்சி பிம்பமும் அடிமட்டத்தில் மக்களின் வாங்கும் திறனை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டன.
இந்தச் சூழலில், விநியோகச் சங்கிலிக் கோளாறால் எழுந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் ரிசர்வ் வங்கி ரெப்போவட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவிகிதம் ஆக அறிவித்துள்ளது, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் கதையாக மாறியுள்ளது.
இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் சிறுதொழில் கடன்களுக்கான வட்டி அதிகரித்து, சாமானியரின் மாத வரவு செலவுத் திட்டத்தை அடியோடு சீர்குலைக்கிறது.
வரியால்ஒரு கை, வட்டியால் மறு கை எனச் சாமானியனின் பாக்கெட்டைப் பறிக்கும் இத்தகைய பாசிச பொருளாதாரக் கொள்கைகள்.

