குறையும் வாங்கும் சக்தி!

📰 2 தொகுதிகளிலும் இரண்டாமிடம் பிடித்து பலத்தை பறைசாற்றிய திமுக. பொதுத்தேர்தலில் கூட்டணியுடன் பெற்ற வாக்குகளை, கூட்டணி பலமின்றியே தக்க வைத்தது.📰 தவெக அடைந்திருப்பது, துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி என மு.க.ஸ்டாலின் விமர்சனம்.ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் எந்த முதலமைச்சருக்கும் இப்படி ஒரு சரிவு ஏற்பட்டதில்லை எனவும் தாக்கு.மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் ஆளும் தவெக வெற்றி. சட்டப்பேரவையில் தவெக-வின் பலம் 109-ஆக உயர்ந்தது.📰 ஜனநாயகப் படுகொலை செய்து ஆளுங்கட்சி வெற்றி பெற்று இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. பிள்ளை பிடிக்கும் கும்பல் போல, தற்காலிக வெற்றிக் கழகம் செயல்படுவதாகவும் விமர்சனம்.📰 தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு. அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்காக அறிவிப்பு.📰 தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் சிஜேபி இன்று போராட்டம். இணைய சேவை துண்டிப்பு, 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்📰 அன்புள்ள பிரதமர் அம்பானி என வம்புக்கு இழுக்கும் தொனியில் எலான் மஸ்க் மீண்டும் எக்ஸ் பதிவு. இந்தியாவின் உண்மையான தலைவர் அம்பானி என உணராததற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கிண்டல்.





எகிறும் விலைவாசி... குறையும் வாங்கும் சக்தி!

பொதுமக்களின் அன்றாடத் தேவைகளான பல்வேறு பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. 

ஆனால் அதைப் பற்றி எல்லாம் விஜய் அரசு கவலைப்படவில்லை. ‘நமக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஓரிரு மாதமாக அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ஒரு மூட்டை அரிசி விலை 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 

அனைத்து வகை அரிசி விலையும் உயர்ந்துவிட்டது. 1400 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீலக்ஸ் பொன்னி அரிசி 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகளே சொல்கிறார்கள். 

1900 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளைப் பொன்னி அரிசி 2300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரிசி விலை கடந்த நான்கு மாதத்தில் நான்காவது முறையாக உயர்ந்துள்ளது.

அதே போல் பருப்பு விலையும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு என அனைத்து பருப்புகளின் விலையும் உயர்ந்துள்ளது.

 ஒரு கிலோ துவரம் பருப்பு 132 ரூபாயில் இருந்து 142 ரூபாயாக உயர்ந்துள்ளது. உளுந்து கிலோ 120 ரூபாயில் இருந்து 127 ரூபாய் ஆகி இருக்கிறது. கடலைப்பருப்பு 83 ரூபாயிலிருந்து 93 ரூபாய் ஆகி இருக்கிறது. பாசிப்பருப்பு 98 ரூபாயிலிருந்து 110 ரூபாய் ஆகி இருக்கிறது.

அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்துள்ளதால் அரிசி விலை மேலும் உயரும் என்று சொல்கிறார்கள். தீபாவளி, அதை அடுத்து வரும் பொங்கல் திருவிழா தினங்களில் அரிசி விலை மிகமிக அதிகம் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.

மிளகாய் விலை அதிகம் ஆகி இருக்கிறது. சர்க்கரை, வெல்லம் விலை அதிகம் ஆகி இருக்கிறது. முந்திரிப்பருப்பு விலை உயர்ந்துள்ளது. சீரகம் விலை கிலோவுக்கு 50 ரூபாய் அதிகம் ஆகி இருக்கிறது.

 சமையல் எண்ணெய்கள் அனைத்தும் லிட்டருக்கு 20 ரூபாய் அதிகம் ஆகி உள்ளது.

தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலை 30 விழுக்காடு உயர்ந்துள்ளது.

பால் விலை உயர்ந்துள்ளது. அதை விட முக்கியமாக ஆவின் பால் கிடைக்கவே இல்லை. தினந்தோறும் காலையில் ஒவ்வொரு கடை வாசலிலும் ‘பால் இல்லை’ என்ற தகவலால் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.

அன்றாடச் சமையலுக்கே விழிபிதுங்கி நிற்கிறார்கள் மக்கள். விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம் என்பதை ஆராயக் கூட, அதைக் கட்டுப்படுத்தும் ஆலோசனையில் இறங்கக் கூட விஜய் அரசு முயற்சிகள் எடுக்கவில்லை.

 தினந்தோறும் ரெண்டு ரீல்ஸ் போட்டால் போதும் என்று முதலமைச்சரும் அவரைச் சுற்றி இருப்பவர்களும் நினைக்கிறார்கள்.

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை குடோன்களுக்கு அனுப்பாமல் வைத்துள்ளார்கள்.

 சில இடங்களில் கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள் என்றும் விவசாயிகள் புகார் சொல்லி வருகிறார்கள். அரிசி விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

“தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய் தந்துள்ள பரிசுகள் இதுதான்” : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!

அரிசி விலை உயர்வு. பருப்பு விலை உயர்வு, காய்கறி விலை உயர்வு. எண்ணெய் விலை உயர்வு. பால் விலை உயர்வு. இதுதான் மக்களுக்கு விஜய் தந்துள்ள பரிசுகள். 

இவை அனைத்தையும் மிஞ்சியது மின்வெட்டு. இன்னமும் அதைத் தீர்க்க முதலமைச்சரால் முடியவில்லை. மின்சார வாரிய அலுவலகத்துக்குச் சென்று அங்குள்ள தகவல் பலகையை உற்றுப் பார்த்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தாரே தவிர, எங்கும் மின்வெட்டு தொடரவே செய்கிறது.

 இப்படி அனைத்து மக்களுக்கும் தொல்லை தரும் அரசாக, அவர்களது துன்ப துயரங்கள் பற்றி கவலைப் படாத அரசாகத்தான் விஜய் அரசு இருக்கிறது.

பிறமாநிலங்களை விஞ்சி இரட்டை இலக்க வளர்ச்சியோடு ஜி.எஸ்.டி. வசூலில் சாதனை படைத்த தமிழ்நாடு இப்போது அதிலும் சரிந்துள்ளது.

 தொடர்ந்து மூன்று மாதங்களாக சரிந்து வருவதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. உற்பத்தி முடங்குகிறது என்பதன் அடையாளம் இது.

பொருளும் கிடைக்கவில்லை. கிடைக்கும் பொருளின் விலையும் அதிகமாக இருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் பொருளாதாரச் சூழல் ஆகும்.

தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் பணவீக்கம் திராவிட மாடல் ஆட்சியில் மிகக் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் பணவீக்கம் அதிகம் ஆகிவிட்டது. இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4.28 விழுக்காடாக பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டின் சில்லறைப் பணவீக்கம் 5.92 ஆக பதிவாகி இருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் தமிழ்நாட்டின் சில்லறைப் பணவீக்கம் 3 விழுக்காடாக மட்டுமே இருந்தது. ஜூன் மாதம் 5.24 ஆனது.

 ஜூலையில் 5.44 ஆனது. ஆகஸ்ட் மாதத்தில் 5.92 ஆனது. பணவீக்கம் அதிகம் ஆவது ஒரு ஆட்சியின் மிகமிக மோசமான நிலையையே வெளிப்படுத்துகிறது. அனைத்துப் பொருட்களும் விலை அதிகம் ஆவதன் வெளிப்பாடு இது.

மின் கட்டணம், பேருந்துக் கட்டணம், பால் விலை ஆகிய அனைத்தும் உயர்ந்து போனதன் அடையாளம்தான் சில்லறைப் பணவீக்கம். இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர்.

‘எம்.எல்.ஏ.க்கள் ஷாப்பிங்கில்’ இருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு, பொதுமக்களின் ‘அன்றாட ஷாப்பிங்’ மனதில் இருக்குமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி