இதுதான் சுயசார்பு ?

🗞️  தென்னிந்திய பகுதிகளில் இன்று தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை. சராசரியை விட கூடுதல் மழைப்பொழிவு இருக்கும் என வானில் ஆய்வாளர்கள் கணிப்பு.🗞️  தேனி, கோவை, நீலகிரி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிப்பு.🗞️  மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு இன்றோடு நிறுத்தம் என தகவல். தவெக அரசு தங்களை கைவிட்டு விட்டதாக சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர்.🗞️  ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம். இருமடங்கு கட்டணத்தை உயர்த்தியதால் பயணிகள் அதிர்ச்சி.🗞️  மக்களின் போராட்டத்தை முடக்கினால் அரசுக்கு எதிரான அதிருப்திதான் அதிகரிக்கும். போராட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுத்த தவெக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.🗞️  யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்வது வெற்றி மெகா ஊழல் என பழனிசாமி கடும் விமர்சனம். மின்வெட்டை செயற்கையாக உருவாக்கி கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது ஊழல் செய்வதாக் குற்றச்சாட்டு.🗞️  அதிகாரத்துக்காக கட்சி மாறும் அரசியல் வியாபாரி ஆதவ் அர்ஜுனா என எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனாவிடம் முதலமைச்சர் விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்.🗞️  அதிமுக பொதுக்குழுவை கூட்டி இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க வலியுறுத்தல்.. நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு இருப்பது புதிதல்ல என்றும் சி.வி.சண்முகம் பேட்டி🗞️  வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு தடை விதிக்கப்படுமா?. ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.🗞️ 🗞️  ஆந்திராவின் ராமகிரி மலை சுரங்கத்தில் தங்கம் இருப்பதாக யூடியூப்பில் பரவிய வீடியோ. சுரங்கத்தில் கயிறு கட்டி இறங்கி சிக்கிய நபரை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்.வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் செல்லும் என்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்னாள் நீதிபதி அபய் ஒகா வலியுறுத்தல்.🗞️  அரியலூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி 5 மணி நேரம் போராட்டம். நிரந்தரமாக மூடப்படும் என உறுதி அளித்ததால் பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்.🗞️  புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நைட்ரஜன் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்து. வணிக வளாக கட்டடத்தின் காவலாளி உயிரிழப்பு.... படுகாயமடைந்த மற்றொருவருக்கு சிகிச்சை.🗞️  நாகர்கோவில் அருகே குடும்ப பிரச்சினையை தீர்ப்பதாக நகை, பணத்தை பறித்த சாமியார்.. கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் ரத்தம் கக்கி இறப்பீர்கள் என மிரட்டியதாக புகார்.





   ஊரான் வீட்டு நெய்யில்

மெட்ரோ 

_ஒரு காலப் பயணம்

தி.மு.க.வின் கொடை!

சென்னை மெட்ரோ - 2 திட்­டத்தை தொடங்கி வைத்­துள்­ளார் பிர­த­மர் மோடி. உண்­மை­யில் அத­னைத் திறந்து வைக்­கும் முழுத் தகுதி படைத்­த­வர் முன்­னாள் முத­ல­மைச்­சர் - தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்­தான்.

பூந்­த­மல்லி - போரூர் – வட­ப­ழனி இடை­யே­யான சென்னை மெட்ரோ வழித்­த­டம் ( திட்­டம் 2) என்­பது முழுக்க முழுக்க திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் சென்னை மக்­க­ளுக்­குச் செய்து கொடுக்­கப்­பட்ட மாபெ­ரும் கொடையே ஆகும்.

சென்­னை­யின் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைக்­க­வும், சென்னை மக்­க­ளுக்கு மிக வச­தி­யான போக்­கு­வ­ரத்­துத் திட்­டங்­க­ளைத் தர­வும் உரு­வாக்­கப்­பட்­ட­து­தான் மெட்ரோ ரயில் திட்­டம் ஆகும். இது தி.மு.க.

ஆட்­சி­யில் உரு­வா­னது. பதி­னெட்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் இதற்­கான விதை போடப்­பட்­டது.

மெட்ரோ - 1 என்ற திட்­டத்­துக்­காக அன்­றைய முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு கலை­ஞர் அவர்­க­ளின் உத்­த­ர­வின் பேரில் அன்­றைக்கு உள்­ளாட்­சித் துறை அமைச்­ச­ராக இருந்த மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­க­ளும் அதி­கா­ரி­க­ளும் 7.2.2008 அன்று ஜப்­பான் தலை­ந­கர் டோக்­கியோ சென்று அங்­குள்ள ஜப்­பான் பன்­னாட்டு கூட்­டு­றவு முக­மை­யு­டன் (Japan InternationalCo-Operation Agency) பேச்­சு­வார்த்தை நடத்தி நிதி­யு­தவி பெற்­றார்­கள். அதன் அடிப்­ப­டை­யில் கடன் வழங்­கு­வ­தற்­கான ஒப்­பந்­தம் 2.11.2008 அன்று ஒன்­றிய அர­சுக்­கும் ஜப்­பான் அர­சுக்­கும் இடையே கையெ­ழுத்­தா­னது.

 ஒன்­றிய- மாநில அர­சு­க­ளின் நிதி 41 சத­வி­கி­தம், ஜப்­பான் பன்­னாட்டு கூட்­டு­றவு முக­மை­யின் நிதி 59 சத­வி­கி­தம் என்று அந்­தத் திட்­டம் உரு­வா­னது.

இன்­றைக்கு சென்னை மக்­கள் மெட்ரோ ரயி­லில் பய­ணிக்க கார­ணம் தலை­வர் கலை­ஞ­ரும், திரா­விட நாய­கன் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளும்­தான்.

இந்த அடிப்­ப­டை­யில் தான் மெட்ரோ -2 என்ற திட்­டம் உரு­வா­னது. இதற்கு நிதி ஒதுக்­கா­மல் ஒன்­றிய பா.ஜ.க. அரசு முடிந்­த­வ­ரை­யில் டிமிக்கி கொடுத்து வந்­தது.

மெட்ரோ இரண்­டாம் கட்ட திட்­டத்­தின் நிதி ஒதுக்­கீடு என்­பது ஒன்­றிய அர­சும், மாநில அர­சும் 50 : 50 விழுக்­காடு பங்­கிட்­டுத் தர வேண்­டும். இந்­தத் திட்­டத்­துக்கு ரூ.63 ஆயி­ரம் கோடி செல­வா­கும். இதற்­கான ஒப்­பு­த­லை­யும் தரா­மல் இருந்­தது ஒன்­றிய அரசு. மாநில அரசு செலவு செய்­வ­தற்­கான நிதி­யைத் திரட்ட பன்­னாட்டு கட­னு­தவி பெறு­வ­தற்கு அனு­ம­தி­யும் தர­வில்லை. தி.மு.க. அரசு ரூ. 9 ஆயி­ரம் கோடியை ஒதுக்­கி­யது. 

ஒன்­றிய அர­சின் நிதி வர­வில்லை என்­றால் இந்­தத் திட்­டத்தை முழு­மை­யாக மாநில அர­சின் நிதி­யில் இருந்து தான் செயல்­ப­டுத்த வேண்­டும். ஆண்­டுக்கு ரூ. 12 ஆயி­ரம் கோடியை இதற்­காக ஒதுக்­கி­னால் தான் மெட்ரோ இரண்­டாம் கட்ட திட்­டத்தை செயல்­ப­டுத்தி முடிக்க முடி­யும். இப்­ப­டிப்­பட்ட நெருக்­க­டி­யில் தள்­ளி­யது ஒன்­றிய அரசு.

கடு­மை­யான நிதி நெருக்­க­டிக்கு இடை­யி­லும், 2024 செப்­டம்­பர்

நில­வ­ரப்­படி, மாநில அர­சின் சொந்த நிதி­யி­லி­ருந்து 11,762 கோடி ரூபா­யும், வெளி­நாட்டு நிதி நிறு­வ­னங்­க­ளின் கட­னு­தவி மூலம் ரூ.6,802 கோடி என மொத்­தம் 18,564 கோடி ரூபா­யைச் செல­விட்டு திரா­விட மாடல் ஆட்­சி­யில் இரண்­டாம் கட்­டப் பணி­களை நிறுத்­தா­மல் தொட­ரப்­பட்­டது. 

அத­னால்­தான் இன்று பிர­த­மர் மோடி­யால் திறந்து வைக்­கப்­ப­டும் நிலைக்கு வந்­தது. இல்­லா­விட்­டால் அப்­ப­டியே மூடப்­பட்டு இருக்­கும்.* சென்னை மெட்ரோ இர­யில் திட்­டம் - 1 நிறைவேற்­றி­ய­தும் தி.மு.க. அரசே!

* சென்னை விமான நிலை­யம் – சென்னை சென்ட்­ரல் இர­யில் நிலை­யம் – கோயம்­பேடு புற­ந­கர்ப் பேருந்து முனை­யம் எனச் சென்­னை ­யின் முக்­கி­ய­மான போக்­கு­வ­ரத்து மையங்களை ரயில் மூல­மாக இணைத்­த­தும் தி.மு.க. அரசே!

* சென்னை மெட்ரோ ரயில் திட்­டம் - பணி­களை 2021 ஆம் ஆண்டு விரைவுபடுத்­தி­ய­தும் தி.மு.க. அரசே!

* மூன்று ஆண்டு கால­மாக நிதியே கொடுக்­கா­மல் வைத்­தி­ருந்த ஒன்­றிய பா.ஜ.க. அரசை வலி­யு­றுத்தி நிதி கொடுக்க வைத்­த­தும் தி.மு.க. அரசே!

* ஒன்­றிய அரசு பணம் தரா­விட்­டால் என்ன என்று நினைத்து மாநில அர­சின் நிதியை ஒதுக்­கி­ய­தும் தி.மு.க. அரசே!

* மெட்ரோ திட்­டத்­தின் ஒவ்­வொரு கட்­டத்­தை­யும் முத­ல­மைச்­ச­ராக இருந்தபோது ஆய்வு செய்து வந்­தார் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள்.

* இதன் அடுத்த கட்­ட­மாக மூன்­றாம் கட்ட மெட்ரோ விரி­வாக்­கப் பணி­க­ளை­யும் திட்­ட­மிட்­டது திரா­விட மாடல் ஆட்சி. இவை­யும் செயல்­ப­டுத்­தப்­பட்­டால் அதி­கப்­ப­டி­யான மெட்ரோ ரயில் ஓடும் நக­ர­மாக சென்னை உய­ரும்.

* சென்­னை­யைப் போலவே கோவை, மதுரை நக­ரங்­க­ளி­லும் மெட்ரோ திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று முத­ல­மைச்­ச­ராக இருந்த போது திட்­ட­மிட்டு அதனை ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்கு அனுப்பி வைத்­தார். அதனை ஒன்­றிய அரசு மறுத்­துள்­ளது. செயல்­ப­டுத்த

முடி­யாது என்று சொல்லி விட்­டது. திரா­விட மாடல் ஆட்சி தொடர்ந்­தி­ருந்­தால் அத­னை­யும் ஒன்­றிய அர­சி­டம் தொடர் வலி­யு­றுத்­த­லைச் செய்து செயல்­ப­டுத்த வைத்­தி­ருப்­பார் திரா­விட நாய­கன் மு.க.ஸ்டாலின் அவர்­கள்.

‘‘ஆண்­டுக்­க­ணக்­கில் நான் சுமந்து வளர்த்­தெ­டுத்த சென்னை மெட்ரோ இர­யில் எனும் குழந்தை அடி­யெ­டுத்து வைப்­ப­தில் தாய்மை உணர்­வு­டன் பெருமை கொள்­கி­றேன்” என்று அவர் அறிக்கை வெளி­யிட்டு இருப்­பது முழு­மை­யான உண்மை ஆகும்.

யார் திறந்து வைத்­தா­லும், யார் வேடிக்கை பார்த்­தா­லும் சென்னை மெட்ரோ ரயில் கனவை நிறை­வேற்­றித் தந்­தது தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞ­ரும், திரா­விட நாய­கன் மு.க.ஸ்டாலி­னும் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­க­ளுமே!

இது பிர­த­மர் மோடிக்­குத் தெரி­யும். 

அத­னால் தான் தனது உரை­யில் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­க­ளது பெய­ரை­யும் மறக்­கா­மல் குறிப்­பிட்­டார்.

இதுதான் சுயசார்பு ?

₹9,500 கோடி லாபம் ஈட்டும் வங்கியை விற்பதா.?

ஐ.டி.பி.ஐ வங்கியில் இருக்கும் மத்திய அரசின் 30.48 சதவிகிதப் பங்கையும், எல்.ஐ.சியின் 30.24 சதவிகிதப் பங்கையும் கனடா நிறுவனமான ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் வாங்க நேற்று (அக்டோபர் 14) ஒப்புதல் வழங்கியுள்ளது மத்திய அரசு.

வங்கித் தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் (United Forum of Bank Unions – UFBU) மத்திய அரசின் இந்த நகர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் நாளை (அக்டோபர் 16) போராட்டத்தை அறிவித்துள்ளது.

இப்போது லாபத்தை ஈட்டுகிறது IDBI!

யூ.எஃப்.பி.யூ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசின் தனியார்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐடிபிஐ வங்கியில் தங்களுக்கு உள்ள பங்குகளை விற்பனை செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.

ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்
ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்

இந்திய அரசும் எல்.ஐ.சி நிறுவனமும் இணைந்து ஐடிபிஐ வங்கியின் 94% பங்குகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

அதிகளவிலான வராக் கடன்கள் காரணமாக, இந்த வங்கி முன்னர் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்தது. ஆனால் இப்போது வங்கி சிறப்பாகச் செயல்பட்டு வருவதுடன், ஆண்டுதோறும் ஈர்க்கக்கூடிய வகையில் கணிசமான லாபத்தையும் ஈட்டி வருகிறது.

முன்னர் ஐடிபிஐ நிறுவனம் ஐடிபிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டபோது, எந்தவொரு சூழலிலும் அரசின் பங்குகள் 51 சதவீதத்திற்குக் குறையாது என்று நாடாளுமன்றத்தில் அரசு உறுதியளித்திருந்தது.

ஆனால், தற்போதைய அரசோ ஐடிபிஐ வங்கியை விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது.

எவ்வளவு நிகர லாபம்?

இன்று வங்கியில் உள்ள மொத்த பொதுமக்களின் வைப்புத்தொகை சுமார் ₹3,50,000 கோடி ரூபாயாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் இவ்வங்கி முறையே ₹5,600 கோடி, ₹7,500 கோடி மற்றும் ₹9,500 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இவ்வாறாக, சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒரு வங்கியே தாரைவார்க்கப்படுகிறது.இது வெறும் தனியார்மயமாக்கல் மட்டுமல்ல. மாறாக அந்நியமயமாக்கல்.

வங்கியின் 60% பங்குகளைக் கனடாவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஃபேர்ஃபாக்ஸுக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

அறிக்கை

இதுதான் சுயசார்பு ?

அரசு ‘ஆத்மநிர்பார்’ (சுயசார்பு) பற்றிப் பேசுகிறது, ஆனால் பொதுமக்களின் சேமிப்பைக் கொண்ட இந்த முக்கிய வங்கி ஒரு வெளிநாட்டு முதலீட்டாளருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது முற்றிலும் தேவையற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும். இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அரசின் இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி