தாவும் கழுதைகள்...?
விஜய்யின் ஆந்திரா பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை! நீர்வளத்துறை செயலாளர் இல்லை?. ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு அங்கே என்ன வேலை? என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
12 ஆண்டுகள் தாமதத்துக்கு பிறகு சீனா - வடகொரியா இடையே யாலு ஆற்று பாலம் திறப்பு
பாகிஸ்தான் பெஷாவர் அருகே தனியார் பள்ளி கட்டட மேற்கூரை இடிந்ததில் மாணவர்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழப்பு

28 எம்எல்ஏக்களுடன் தவெகவுக்கு தாவ முயலும் குதிரை பேரத்தில் விலைபோன கழுதைகள்!
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கிலியை கொடுக்க 28 எம்எல்ஏக்களிடம் எஸ்.பி.வேலுமணி அன்ட் டீம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள், 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல், அதன் பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தல்கள், 2023 ஆம் ஆண்டு இடைத்தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2025 இடைத்தேர்தல், 2026 சட்டசபை தேர்தல், தற்போது நடந்து முடிந்த இரு தொகுதி இடைத்தேர்தல் என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்ந்து படுதோல்வியை சந்தித்துள்ளது.
தேர்தலில் வெற்றி என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரைதான். அதன் பிறகு தலைமை பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியால் அந்த வெற்றியை பெற முடியவில்லை.
இதை எதிர்க்கட்சிகளும் 10 தோல்வி பழனிசாமி, 11 தோல்வி பழனிசாமி என எண்ணை வைத்து பெயரிட்டு விமர்சித்து வருவது அதிமுகவில் பாரம்பரியமாக இருக்கும் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மன உளைச்சலை தருகிறது.எனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணியும், அவரது அணியினரும் சேர்ந்து மிகப் பெரிய பூகம்பத்தை வெடிக்க செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
13 தேர்தல்களில் தோற்றும் தன்னிச்சையாக முடிவு எடுப்பது, சர்வாதிகார போக்கு, யாரையும் மதிக்காத தன்மை, மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுக்காதது, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆலோசிக்காமல் 47 தொகுதிகளில் வென்றிருக்கிறோம் என பேசுவது உள்ளிட்டவைகள்தான் எடப்பாடி பழனிசாமி மீது நிர்வாகிகள் வைக்கும் ஆதங்கம்!
அதிலும் கொங்கு மண்டலத்தில் கொடி கட்டி பறந்து வரும் எஸ்.பி.வேலுமணியை போய் எடப்பாடி பழனிசாமி ஓரம்கட்ட முடிவு செய்தால் அது நடக்குமா? அது போல் வடக்கு மாவட்டம் என்றால் சி.வி.சண்முகம்! அவரையும் மதிக்காத போக்கு, அவருக்கு எதிராக ஆட்களை உருவாக்க முயற்சி என எடப்பாடி பழனிசாமி மீது ஏகப்பட்ட கோபத்தில் நிர்வாகிகள் உள்ளனர்.
இது போல் அவரது தொடர் புறக்கணிப்புகளையும், அவமானங்களையும் தாங்கி கொள்ள முடியாததால்தான் எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகமும் தனி அணி போல் செயல்பட்டு வருகிறார்கள்
. இடைத்தேர்தல் தோல்வி முதலே சென்னை எம்ஆர்சி நகர் வீட்டில் எஸ்.பி,வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோர் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
28 எம்எல்ஏக்கள்
அதாவது எடப்பாடி பழனிசாமி தங்கள் வழிவருகிறாரா என பார்த்துவிட்டு அப்படி இல்லாவிட்டால் 28 அதிமுக எம்எல்ஏக்களுடன் தவெகவில் இணைய தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இனி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலையே தூக்காது என்ற நிலைக்கு இவர்கள் வந்துவிட்டனர்.
அதிமுகவில் நிலவும் இந்த உள்கட்சி பூசலை பயன்படுத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள இந்த 28 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்றது. அதில் மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.
அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதி இடைத்தேர்தலில் அவர்களே வேட்பாளராக்கப்பட்டு தற்போது வென்றுள்ளனர்.
எனவே தற்போதைய சூழலில் சட்டசபையில் அதிமுகவின் பலம் 41 எம்எல்ஏக்கள் ஆகும். இதில் 2/3, அதாவது குறைந்தது 27 பேர் கட்சி தாவினால் கட்சி தாவல் தடை சட்டம் பாயாது. இதனால் இந்த 28 பேரும் அப்படியே தவெக எம்எல்ஏக்களாகிவிடுவர்.
அப்போது 109 ஆக இருக்கும் தவெகவின் பலம், சட்டசபையில் 137 ஆக உயர்ந்துவிடும். இதனால் தனிப்பெரும் கட்சியாக தவெக எந்த இடையூறும் இல்லாமல் ஆட்சியை செய்யலாம் என்பதுதான் விஜய்யின் கணக்கு!
எனவே இந்த 28 எம்எல்ஏக்கள் எப்போது வேண்டுமானாலும் தவெகவில் இணையலாம் என சொல்லப்படுகிறது.

