ஆயுத பூசை..,





🔹

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் தொப்பி அணிந்தபடி வந்தது தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ளது. பாஜக தலைவர்கள் அமைச்சர்களிடம் விளக்கம் கோரியுள்ளனர். இவ்விவகாரம் மத அடையாளம் மற்றும் கோயில் நடைமுறைகள் தொடர்பான அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

🔹 மின்சாரக் கொள்முதல் விவகாரம்

மின்பற்றாக்குறையைச் சமாளிக்க யூனிட் ஒன்றுக்கு ₹35 விலையில் மின்சாரம் வாங்கும் தமிழக அரசின் முடிவை இடதுசாரிக் கட்சிகள் விமர்சித்துள்ளன. கொள்முதல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

🔹 மின்வாரியத் தொழிற்சங்கப் போராட்டம்

ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டம் மற்றும் மின்துறையில் தனியார் பங்களிப்புக்கு எதிராக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடி வருகின்றன. கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நவம்பர் 2-க்குப் பிறகு வேலைநிறுத்தம் நடத்துவதாக எச்சரித்துள்ளன.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் துர்கா பூஜைப் பந்தலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர்; 25 பேர் காயமடைந்துள்ளனர் என இன்று காலை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. மழையும் அதிகக் கூட்டமும் விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம். 12 பேர் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

🔹 அமெரிக்கா–உக்ரைன் உறவில் பதற்றம்

அமெரிக்க அதிபர் மற்றும் உக்ரைன் அதிபர் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. உக்ரைனுக்கான அமெரிக்காவின் ராணுவ உதவி மற்றும் உளவுத் தகவல் பகிர்வு பாதிக்கப்படுமோ என்ற கவலை எழுந்துள்ளது.


🌦️ 4. தூத்துக்குடி வானிலை — இன்று

📍 தூத்துக்குடி – 628001

  • 🌡️ அதிகபட்ச வெப்பநிலை: சுமார் 32°C
  • 🌙 குறைந்தபட்ச வெப்பநிலை: சுமார் 27°C
  • ⛈️ எதிர்பார்ப்பு: பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
  • 🌧️ மழை நிலவரம்: மழைக்கான வாய்ப்பு உள்ளது; 

  • ஆயுத பூஜையால் அழிந்த ராஜ்யம்!

    தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பவன் பீஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான்.

    வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை  எடுத்து வந்த சமயமானது ஆயுதபூஜை சமய மாகும். படை வீரர்களது படைக் கலங்கள் எல்லாம் ஆயுத பூஜைக்காக கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.

    மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்த வனாய் பார்ப்பன மந்திரிகளையும் பார்ப்பனக் குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள்,  “மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின் மீது படை எடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜி யாவான். அவனோ ஓர் இந்து, மேலும் பரம வைணவன்.

    ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத் துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவிவிட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான்” என்று சொன்னார்கள்.

    மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான்.

    வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவித்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதி விரை வாகவும் அனாயசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கவ்விக்கொண்டு நகருக்குள் புகுந்தன. இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன், “வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்துழாயினை மதிக்கவில்லை. ஆகவே அவனுடன் போர் செய்தல் கூடாது” என்று கூறி யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான்.

    வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின.

    இதனால் தானோ  “பார்ப்புப் பெருத்தல்லோ நாயக்கத் துரைத்தனம் கெட்டது” என்ற பழமொழி ஏற்பட்டது போலும்.

    ஆயுத பூஜையால் ஆட்சியும் அரண்மனையும் அழிந்த கொடுமையைப் பார்த்தீர்களா?

    (‘இந்துமதப் பண்டிகைகள்’ நூலிலிருந்து)

ஞானேஷ் குமாரை நெருக்கும் '4 முனை' அழுத்தம்! 

 அடுத்த அணி.?. கலக்கத்தில் டெல்லி !


மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கேவுக்கு சிறப்பு நிர்வாக நீதிபதி (SEM) நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 பிளேஸின் சென்ட்ரல் பூங்காவில், ‘லெஹ்ரா தோ திரங்கா’ போராட்டத்தில் ஈடுபடச் சென்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) 126 மற்றும் 170 ஆகிய பிரிவுகளின் கீழ், அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.


நேற்று இரவு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் அவரைப் பார்க்க முயன்றபோதும், காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால், “அபிஜித் எங்கே?” என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்களும் அபிஜித் திப்கே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.


இந்த நிலையில், அபிஜித் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் டெல்லி காவல்துறை அறிவித்தது. அதன்படி, தற்போது நீதிமன்றம் சமாதானப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்துள்ளது.


CJP செயல்பாட்டாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஏற்கெனவே திகார் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. போராட்ட தளம் அல்ல என அறிவிக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் மூவர்ண கொடி ஏந்தி கோஷம் போட்டாதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை கன்னாட் பிளேஸில் நடைபெற்ற ‘லெஹ்ரா தோ திரங்கா’ போராட்டப் பேரணியின்போது, அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தலைவர் நேகா போராவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டார்.


டெல்லி காவல்துறைச் சட்டத்தின் 65-வது பிரிவின் கீழ், காவல்துறையின் அறிவிப்பை மீறியதாக நேஹா போரா கைது செய்யப்பட்டார். அவரைப் பல காவலர்கள் இணைந்து வலுக்கட்டாயமாக வாகனத்துக்குள் திணிக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.


நேகாவையும் வழக்கறிஞர்களோ ஆதரவாளர்களோ சந்திக்கக் காவல்துறை அனுமதிக்கவில்லை. அவர் வெவ்வேறு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. நள்ளிரவு வரை காவல்துறை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் தெரிவிக்காத நிலையில், இன்று அதிகாலையில் நேகா விடுவிக்கப்பட்டார்.


தீப்கே விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, CJP தேசியப் பொறுப்பாளர் அஜன்கியா ஷிண்டே, “கரப்பான் பூச்சிகள் ஒருபோதும் இறப்பதில்லை” எனச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


அபிஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு நாள் மொபைல், வைஃபை வசதிகள் இல்லாமல் காவலில் இருந்தது வயதானதைப் போன்ற உணர்வைக் கொடுப்பதாகக் கூறும் மீம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.


அக்டோபர் 10 அன்று டெல்லி விமான நிலையத்தில், விமானத்திற்குள்ளேயே வைத்து டெல்லி காவல்துறையினர் தீப்கேவைக் கைது செய்தனர். அப்போது, ஓராண்டுக்கு அமைதியைக் குலைக்க மாட்டேன் என அவர் ஒரு பிணைப்பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தார். அப்போது, அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் காவல்துறையினர் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நேகா போராவும் அபிஜித் திப்கேவும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) செயல்முறையை நிறுத்த வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். மேலும், அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இன்று விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நேகா போரா, “நான் மண்டி ஹவுஸில் தடுத்து வைக்கப்பட்டு, இரவு முழுவதும் அதிகாலை 5 மணி வரை இங்கே (காவல் நிலையத்தில்) வைக்கப்பட்டிருந்தேன்.


“நீங்கள் (காவல்துறையினர்) ஏன் இந்தச் சட்டவிரோதத் தடுப்புக் காவல்களை மேற்கொள்கிறீர்கள்? இந்த நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன.


இந்தச் சம்பவம் இத்தகைய தடுப்புக் காவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

“சட்டம் ஒழுங்கைப் பின்பற்றுவதாகவும், சட்டப்படி செயல்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அப்படி எதுவும் நடப்பதில்லை” என்று தெரிவித்தார்.

“இந்தப் போராட்டத்தின்போது, அவர்கள் (காவல்துறையினர்) மாலையில் மக்களைக் கைது செய்து, மறுநாள் காலையிலோ அல்லது மாலையிலோ விடுவித்து வருகின்றனர்.


இத்தகைய கைதுகளை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது என்பது எங்களுக்குப் புரியவில்லை.

அபிஜித் திப்கே உட்படக் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். மத்திய டெல்லியில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.


ஞானேஷ் குமார் முதல் பாஜக அரசு வரை அனைவரும் தங்களது ஆணவத்தைக் கைவிட வேண்டும். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) செயல்முறை நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் டெல்லி மற்றும் இந்திய மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) செயல்முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, தங்களது போராட்டம் தொடரும் என AISA அமைப்பு தெரிவித்துள்ளது.


அபிஜித் திப்கே, நேகா போரா ஆகியோருடன் மேலும் 150 பேர், பொது அமைதியைப் பாதுகாக்கும் நோக்கில் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நான்காவது நாளாக சிறையில் இருக்கும் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா நாளை விடுதலை செய்யப்படுவார்கள் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனது நண்பர்கள் வெளியே வருவதற்காக காத்திருப்பதாக அபிஜித் தீப்கே கூறியுள்ளார்.


நேகா போரா கூறியாதன்படி விரைவில் இளைஞர்கள் போராட்டம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.


ஜந்தர் மந்தருக்கு பதில் போராட்ட களமாக அறிவிக்கப்பட்ட ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் வரும் நவம்பர் 1ம் தேதி போராட்ட பேரணி நடத்த டெல்லி காவல்துறையிடம் அனுமதி பெற்றுள்ளது.

இளைஞர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் விவசாயிகளும் இணைய இருக்கின்றனர்.


வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) அமைப்பின் கீழ் பல்வேறு விவசாய அமைப்புகள் அக்டோபர் 23 அன்று டெல்லிக்கு பேரணி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில் நீதிமன்றத்திலும் ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கு வலுத்து வருகிறது. தேர்தல் ஆணையரிடம் வைக்கப்பட்டுள்ள புகார்களுக்கு விளக்கம் கேட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

4 முனைகளில் இருந்து ஞானேஷ் குமாருக்கு எதிரான அழுத்தம் எழுவதால் மத்திய அரசின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


கடும் போலீஸ் பாதுகாப்பு, தடுப்புக்காவல், இணையத் தடை போன்ற நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொள்ளப் போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி