எல்லா சுமையும் மக்களுக்கே....
6 மாத விஜய் ஆட்சியின் தோல்வி!
திமுக மீது பழிபோட முடிவு?
சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு பெய்த கனமழை, நகரின் பல முக்கியப் பகுதிகளை மீண்டும் வெள்ளக் காடாக மாறின. முக்கியமாக விஜய்யின் தொகுதியான பெரம்பூர், வேளச்சேரியில் உள்ள ராம் நகர், பாரிமுனை, அண்ணா சாலை, கிளாம்பாக்கம் உள்ளிட்ட நகரின் முக்கியப் போக்குவரத்து சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.
மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும், வாகன ஓட்டிகள் சாலைகளில் சிக்கித் தவித்தும் பெரும் இன்னல்களைச் சந்தித்தனர்.தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சியமைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு, ஆட்சிக்கு வந்த இந்த ஆறு மாதங்களில் மழை வெள்ளத்தைக் கையாள எந்தவொரு முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை என்பது இந்த ஒரே நாள் மழையிலேயே வெட்டவெளிச்சமாகியுள்ளது.
முதல் தேர்விலேயே தோல்வியடைந்த தவெக அரசு
பருவமழை தொடங்கும் முன்னரே மழைநீர் வடிகால்களைத் தூர்வாருவது, பம்பிங் மோட்டார்களை தயார் நிலையில் வைப்பது, அடைப்புகளை நீக்குவது போன்ற அடிப்படைக் களப்பணிகளை அரசு முடுக்கிவிட்டிருக்க வேண்டும்.
ஆனால், களத்தில் எந்தவொரு ஆக்கப்பூர்வமான பணிகளும் நடக்கவில்லை என்பதை நேற்றைய நிலைமை உணர்த்துகிறது.
வடசென்னையின் பல இடங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழை பதிவானது உண்மைதான். ஆனால், ஒரு தலைநகரத்தின் நிர்வாகம் என்பது எதிர்பாராத இயற்கை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ, வெள்ளத் தடுப்புத் திட்டங்களோ திட்டமிட்டு செயல்படுத்தப்படவில்லை.
அரசு இயந்திரத்தை முன்கூட்டியே தயார்படுத்துவதில் புதிய தவெக அரசு முழுமையாகக் கோட்டைவிட்டுவிட்டது என்பதை மக்கள் நேரடியாகவே அனுபவித்து வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், கடந்த சில ஆண்டுகளில் பெய்த மிகக் கடுமையான மழை மற்றும் புயல்களின் போதுகூட வெள்ளப் பாதிப்பை பெருமளவு கட்டுக்குள் வைத்திருந்தன.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெள்ளத்தில் மிதந்த தி நகர், வேளச்சேரி போன்ற இடங்களில்கூட மழைநீர் தேங்காமல் உடனடியாக வடிந்ததை மக்கள் பார்த்தார்கள்.
ஆனால், அந்த கட்டமைப்புகளைப் முறையாகப் பராமரிப்பதற்கும், பருவமழைக்கு முன் தூர்வாரி தயார் நிலையில் வைப்பதற்கும் தவெக அரசு எந்தவொரு அக்கறையும் காட்டவில்லை. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும், தங்களுக்குக் கிடைத்த நிர்வாக இயந்திரத்தை சரியாகப் பயன்படுத்தத் தவறியதே நேற்றைய வெள்ள பாதிப்புக்கு நேரடி காரணமாக அமைந்துள்ளது.
தி.மு.க அரசு கட்டிய,திட்டங்களை திறந்து வைத்த விஜய்.தான் கட்டியது போல் பெயர் வாங்குவதுபோல் மழை நீர் வடியும் தி.மு.க திட்டங்களிக்கும் பெயர் வாங்க தனது தற்குறிகள் மூலம் முயற்சிக்கிறார்.ஆனால் அதற்குமுன் தி.மு.க.வை தாக்கிஅதன்மூலம் அம்பலப்பட்டுப் போகிறார்கள்.
மக்கள் எல்லோருமே தற்குறி முட்டாள்கள் அல்ல.
இரட்டை வேடம் போடும் தவெக: எங்கும் அரசியல், எதிலும் தப்பியோட்டம்
வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே களத்தில் நின்று நிவாரணப் பணிகளை வேகப்படுத்துவதை விட்டுவிட்டு, தவெக தரப்பினர் வழக்கம்போல முந்தைய திமுக அரசின் மீது பழிபோடும் போக்கையே கையாள்கின்றனர்.
எங்கெல்லாம் மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் "கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு உருப்படியாக எந்த வேலையும் செய்யவில்லை; அதனால்தான் இந்த நிலைமை" என்று கூச்சலிடுகிறார்கள்.
அதேசமயம், கடந்த திமுக அரசு அமைத்த உயர்தர மழைநீர் வடிகால்கள் காரணமாக எந்தெந்தப் பகுதிகளில் மழைநீர் வடிந்து பாதிப்பு இல்லையோ, அங்கெல்லாம் "பார்த்தீர்களா, எங்கள் தவெக ஆட்சியின் சிறப்பான செயல்பாடு!" என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்.
பாதிப்பு வந்தால் முந்தைய அரசு மீது பழி, பலன் கிடைத்தால் மட்டும் தாங்களே உரிமை கொண்டாடுவது என்பது நகைப்புக்குரியது மட்டுமல்ல, மிகவும் பொறுப்பற்ற அரசியல் அணுகுமுறையாகும். மக்கள் இந்த இரட்டை வேடத்தைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர்.
விளம்பர ஆட்சிக்கு மக்கள் தரும் தீர்ப்பு
ஆட்சி நிர்வாகம் என்பது மேடைகளில் முழங்குவது போலவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்வது போலவோ எளிதானது அல்ல.
பருவமழை போன்ற இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்க முறையான திட்டமிடலும், அதிகாரிகளை வழிநடத்தும் ஆளுமையும், களத்தில் நிற்கும் உழைப்பும் தேவை.
வெறும் ஆறு மாதங்களிலேயே சென்னை மக்களை மீண்டும் வெள்ள அவதிக்குள் தள்ளியதன் மூலம், தவெக அரசு தனது நிர்வாகத் திறமையின்மையை நிரூபித்துள்ளது. கடந்த அரசின் மீது குறை சொல்வதை நிறுத்திவிட்டு, இனியாவது போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், வரவிருக்கும் நாட்களுக்கு உரிய வடிகால் பணிகளை மேற்கொள்ளவும் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், மக்களின் கோபத்திற்கு அரசு நேரடியாகப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் ரூ.650 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில், த.வெ.க மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்தவரும், வழக்கறிஞருமான பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/91bab08a-de4.jpg)
இந்தநிலையில், இதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர கிராமத்திலிருந்து, தடைசெய்யப்பட்ட செயற்கை போதைப்பொருளான கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைனை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த எடை 137 கிலோ கிராம் ஆகும்.
/indian-express-tamil/media/post_attachments/f75dd339-031.jpg)
மத்திய உளவுத்துறையின் தகவல் அடிப்படையில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், 2026 அக்டோபர் 16, 17 தேதிகளில் தீவிர கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் மூலம், போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கடலோர போதைப்பொருள் கடத்தல் கும்பலை அதிகாரிகள் வெற்றிகரமாகக் கண்டுபிடித்தனர்.
இந்த போதைப் பொருள், கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்தது. கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள்களின் சந்தை மதிப்பு சுமார் ₹100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/cbc31f32-9b1.jpg)
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 5 கிலோ எடை கொண்ட 27 வெள்ளித் தகடு பொட்டலங்கள் அடங்கிய ஆறு டஃபிள் பைகள் மீட்கப்பட்டன. அந்தப் பொட்டலங்களில், மெத்தம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் ஒரு வெள்ளை நிறப் படிகப் பொருள் இருந்தது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேகத்திற்குரிய நபரின் இடத்தில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், விற்பனை மூலம் கிடைத்த வருமானம் என சந்தேகிக்கப்படும் ₹10 லட்சம் ரொக்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு நான்கு சக்கர வாகனங்களும், ஒரு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக நான்கு நபர்கள், கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
த.வெ.க, அரசின் திட்டமிட்ட
தவறுகள் மூலம்
நிதிச்சுமை முழுக்கமக்களுக்கே...
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி, கடந்த மே மாதம் அமைந்தது. இந்த அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே, மாநிலம் முழுவதும் நீடித்த மின்தடை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், கடந்த கால அரசுகளின் செயல்பாடுகளே இதற்கு காரணம்.
அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி ஊழல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.அதோடு ஓரிரு வாரங்களில் தங்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரித கதியில் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். ஆனால், 5 மாதங்கள் ஆகியும், தமிழகத்தில் மின்வெட்டு என்பது குறைந்தபாடில்லை.
பல்வேறு பகுதிகளில் மின்வெட்டை கண்டித்து, பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட, மின்வெட்டு என்பது அடிக்கடி தலைகாட்டி போகிறது.
ஆனால், அமைச்சர்களும், அதிகாரிகளும் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தமிழகத்தில் நிலவும் மின்தடையை சமாளிக்க முடியாமல், தவெக அரசு விழி பிதுங்கி நிற்பது அம்பலமாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது மழைக்காலம் என்பதால், மின்பற்றாக்குறை நிலவுகிறது.
எனவே, தனியாரிடம் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படும். யூனிட் ரூ.35 என்ற விலை கொடுத்து இந்த மின்சாரம் வாங்கப்படும் என்ற அறிவிப்பை, மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார்.
கடந்த திமுக ஆட்சியில் யூனிட் மின்சாரம் ரூ.15 முதல் ரூ.20 என்ற விலையில் வாங்கப்பட்டது. இது மிகவும் அதிகமான தொகை என்று கூப்பாடு போட்டார் தற்போதைய மின்சாரத் துறை அமைச்சர்.
ஆனால், தற்போது அதற்கு மேலும் ரூ.15 அதிகம் கொடுத்து ரூ.35க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவது என்ன ரீதியிலான நிர்வாக நடவடிக்கை என்ற கேள்வியை, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முன்வைத்துள்ளனர்.
இதனால் அரசுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படும். இது மெகா ஊழலுக்கான விதை என்றும் கண்டனங்கள் வலுத்துள்ளன.
இதற்கிடையில், மாலை நேர தேவைக்காக, தனியாரிடம் இருந்து மேலும் 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சாரக்கழகம் முடிவு செய்துள்ளது.
இந்த மின்சாரம் யூனிட் ரூ.37 என்ற ரீதியில் வாங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆட்சியில் போடப்பட்ட மின்நுகர்வு ஒப்பந்தத்தை, கண்மூடித்தனமாக ரத்து செய்தது தவெக அரசு.
இதுவே தற்போது ரூ.15 அதிகம் கொடுத்து மின்சாரத்தை வாங்குவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம், அரசுக்கு பல கோடிகளில் இழப்பு ஏற்படும் என்று அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க, இப்போது மேலும் 1000 மெகாவாட் மின்சாரம், யூனிட் ரூ.37க்கு வாங்கப்படுவது, மேலும் நஷ்டத்தை உருவாக்கி மக்கள் தலையில் நிதிச்சுமையை ஏற்றி விடும் .
பொதுவாக அரசுக்கு ஏற்படும் எந்தவொரு நிதி இழப்பும், வரி அல்லது கட்டண உயர்வு என்ற பெயரில் மக்கள் பக்கமே திருப்பி விடப்படும்.
அந்த வகையில், தொடர்ந்து அதிக விலை கொடுத்து தவெக அரசு மின்நுகர்வு செய்கிறது. இதனால் ஏற்படும் நிதிச்சுமை என்பதும், ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் மக்கள் தலையில் தான் விழும்.
இதை தவிர்ப்பதற்கு, சொந்த மின்உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்பதேதமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.








