மக்களைக் காப்பாற்றிய அரசு?

📰 சென்னை, திருவண்ணாமலை, விருதுநகர் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை.. மதுரை நகரில் கொட்டிய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி📰 விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல்..சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை📰 திருப்புகழ் கமிட்டியின் நீண்டகால பரிந்துரைகளை நிறைவேற்ற முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தல்.. திராவிட மாடல் அரசு மேற்கொண்ட வடிகால் பணிகளை கண்காணித்து நிறைவேற்றவும் கோரிக்கை.📰 டெல்லி விமானநிலையத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.. துபாயில் தங்கத்தை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை📰 இந்தோனேசியாவில்  திடீரென வெடித்து சிதறிய மவுண்ட் டுகோனோ எரிமலை.. மலையேற்ற வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு.📰 மணிப்பூரில் விறகு சேகரிக்கச் சென்ற கிராம மக்கள் மீது ஆயுதமேந்திய குழுவினர் துப்பாக்கிச்சூடு.. இரு உடல்களை முதலமைச்சர் வீட்டின் எதிரே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு📰 ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் பேரழிவை சந்திக்க நேரிடும்.. அமெரிக்காவுக்கு ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை.


அதிகாரிகள் இல்லாமல் "ஆந்திரா ரெட்டி கேங்" மற்றும் "கலெக்சன் கேங்" ஆகியோருடன் ஆந்திரா சென்று ஆந்திர முதல்வர் மற்றும் சாராய ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மர்மம் என்ன? என முதலமைச்சர் விஜய்க்கு, முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து அப்பாவு வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”பா.ஜ.க-வின் கங்காணியாக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் கலெக்சன்குமார் என்ற சங்கி நிர்மல் குமார் தமிழகத்தின் மின் நிறுவுத் திறனில் 65% உற்பத்தியை 35% ஆக குறைத்து செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி, தினம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது, அறிவிப்பு இல்லா மின் கட்டண உயர்வு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி செல்போன் ரிசார்ச் செய்வது போல் மின் கட்டணமும் வசூலிக்க ஏற்பாடு செய்து தனியாருக்கு கொடுக்க பல ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருப்பதாக வரும் செய்தி பார்ட்டி ஃபண்டா? அல்லது பர்சனல் ஃபண்டா CM sir ?


காற்றாலை, சோலார் மின் உற்பத்தி மூலம் பல ஆயிரம் MW மின் உற்பத்தி செய்துள்ள தனியாருக்கு ஒப்புதல் வழங்க

MW - 1-க்கு ரூபாய் 15 லட்சம் வீதம் சுமார் 1,500 கோடி ரூபாய் நிர்மல் குமார் வாங்கியிருப்பதாக உலா வரும் செய்திகளை இல்லை என்று மறுக்க முடியுமா CM sir ?


உங்கள் சொத்துக்களை சோதனையிட வந்த வருமான வரித்துறை அதிகாரி அருண் ராஜ்-ஐ கட்சியில் சேர்த்து அமைச்சரவையிலும் இடம் கொடுத்து செவிலியர் கல்லூரிகள் ஒவ்வொன்றிற்கும் அங்கீகாரம் வழங்க ரூபாய் 75 லட்சம் வீதம் பணம் வசூலிப்பது உங்களுக்கு தெரியுமா CM sir ?


கோட்டையில் யாருக்கு அதிகாரம் என்பதில் "ரெட்டிகேங் ", "தலைமைச் செயலாளர் ", அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடையே நடக்கும் போட்டியை பார்த்து மற்ற அமைச்சர்கள் யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் "விளைந்த காட்டுக்குள் புகுந்த யானை" போல் சகட்டுமேனிக்கு மாமுல் வசூலித்து நாட்டை சூறையாடி வருவது உங்கள் கவனத்திற்கு வரவில்லையா CM Sir..?


இதே போல் தான் தமிழக அரசு அதிகாரிகள் இல்லாமல்

"ஆந்திரா ரெட்டி கேங்" மற்றும் "கலெக்சன் கேங்" ஆகியோருடன் ஆந்திரா சென்று ஆந்திர முதல்வர் மற்றும் சாராய ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மர்மம் என்ன?


"தமிழகடாஸ்மாக் " நிறுவனத்தை அவர்களுக்கு விலைக்கு கொடுக்க முடிவு செய்து விட்டதாக வரும் செய்திகள் உண்மையா CM Sir ?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களைக் காத்தது எந்த அரசு!

ஒரு நாள் பெய்த மழைக்கே மக்களைக் காக்கத் தவறியது த.வெ.க. அரசு. எந்த திட்டமிடுதலும் செய்யவில்லை. ஆனால் பெரு மழைக் காலங்களில் மக்களைக் காத்தது தி.மு.க. அரசு.


மழை பெய்யும் போது தண்ணீர் நிற்கும். மழை நின்றதும் தண்ணீர் வடிந்து விடும். அத்தகைய நிலைமையைச் சென்னையில் உருவாக்கி வைத்திருந்தது கழக அரசு. அதற்குக் காரணம் முன்கூட்டியே செய்த திட்டமிடல்கள் தான்.

மழை பெய்து சில மணி நேரத்தில் வெள்ளம் வடிந்து விடக் கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த தி.மு.க. அரசு செய்து வைத்திருந்தது. அதனால் எங்கும் மழை, வெள்ளம் தேங்கவில்லை.


சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது தி.மு.க ஆட்சியில். ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன. சென்னைக்கு ஏற்படும் வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்ய முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.


அவர்கள்கொடுத்த 161 ஆலோசனைகளில் 101 ஆலோசனைகள் ஏற்கப்பட்டு படிப்படியாக செய்து தரப்பட்டது.

சென்னையில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் தொடர்ந்து தூர் வாரப்பட்டது. புறநகர் கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டன.


மிகப்பெரிய மழை பெய்தாலும் உடனடியாக நீர் வடிந்துவிடக் கூடிய அமைப்பை தி.மு.க. அரசு உருவாக்கியது. தி.மு.க. ஆட்சிக் காலத் திட்டமிடுதல்களை கண்காணித்து ஓராண்டு காலத்துக்குள் முடித்துவிட்டால் எங்கும் தண்ணீர் நிற்கவில்லை என்பது மெய்ப்பிக்கப்பட்டு விடும்.


மேலும், மழை - வெள்ளக் காலங்களில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் முன்னுதாரணமாகச் செய்து காட்டியது திராவிட மாடல் அரசு .


பருவமழையால் மக்கள் வாழும் தாழ்வானப் பகுதிகளில் தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், மக்கள் அச்சமின்றி தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட உதவும் வகையிலும் அனைத்து ஏற்பாடுக- ளையும் தி.மு.க. அரசு செய்து தந்தது.


அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துவார்.


மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை அளித்திடும் நோக்கில் வெள்ள நிவாரண முகாம்கள் உடனடியாக அமைக்கப்படும். இந்த முகாம்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்து தரப்படும். இதற்காக சமையல்கூடங்கள் தயார் நிலையில் இருக்கும்.


நிலையான மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவ முகாம்கள் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தாழ்வானப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்படும்.


மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட மோட்டார் பம்புகள் தயாராக இருக்கும். காற்றில் விழும் மரங்களை அகற்றுவதற்காக மர அறுவை இயந்திரங்கள் தயாராக இருக்கும். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் தொடர்ந்து பராமரிக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் தேவைகளை உடனடியாகத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும். இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள்.


சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்கும். தனியார் மருத்துவமனைகளுக்கும் அரசு சிறப்பு உத்தரவு களைப் போட்டு வைத்திருக் கும்.

இவை அனைத்தும் செய்து வைத்திருந்தால் அது தி.மு.க. அரசு.


இவை எதுவம் செய்யாமல், கடந்த ஆட்சி மீது குறை சொல்லி ரீல்ஸ் போட்டுக் கொண்டிருந்தால் அது த.வெ.க. அரசு. ஆனால் இன்று என்ன நடக்கிறது?

முதலமைச்சரின் பெரம்பூர் தொகுதியில் மக்கள் குறைகளைக் கேட்க த.வெ.க. அரசில் யாருமில்லை, அந்தக் கட்சியிலும் யாருமில்லை.

எந்த அமைச்சரும் வரவில்லை 'சாப்பிட்டீங்களா என்று எங்களைக் கேட்கக்கூட அரசாங்கத்தில் இருந்து யாரும் வரவில்லை' என்கிறார்கள் பொதுமக்கள்.


தொடர் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நான்கு மணி நேரம், ஆறு மணி நேரம் மின்சாரம் இல்லை. அதைக் கவனிப்பார் யாருமில்லை. மரங்கள் முறிந்து விழுகிறது.

அப்புறப்படுத்த அரசு முயற்சிக்கவில்லை.


சென்னை ராயபுரத்தில் ஏழு மணி நேரமாக மின்வெட்டு. மக்களே வீதிக்கு வந்து சாலை மறியல் செய்துள்ளார்கள். வேளச்சேரிக்கு அமைச்சர் குமார் என்பவர் வந்துள்ளார். (ஐந்து மாதம் கழித்து இப்பதான் உங்களைப் பார்க்கிறோம்’ என்று மக்கள் முற்றுகையிட்டுள்ளார்கள்.


புகார்சொல்ல வந்த பொதுமக்களை த.வெ.க. நிர்வாகிகள் விரட்டி அடித்துள்ளார்கள்.

மழை, வெள்ளக் காலங்களில் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற முன் திட்டமிடுதலே இல்லாமல், மழையன்று காலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு முதலமைச்சர் விஜய் வந்து பார்ப்பதால் என்ன பயன்?


ஒரு படத்தில், டிரைவர் தனது காரை பின்னால் ரிவர்ஸ் எடுப்பார். எடுக்கும் போது, ‘பின்னால் இடிக்குதா?' என்று பார்க்கச் சொல்வார். பின்னால் சுவரில் இடித்த பிறகு, 'இடிச்சிருச்சு' என்று சொல்வார். அதுபோல மழை பெய்யும் அன்று காலையில் வந்து வரப்போகும் வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

நாடு இன்னும் எத்தனை விதமான கொடுமைகளை எல்லாம் பார்க்கப் போகிறதோ?

வடகொரியா

 அதிபர் கிம் ஜாங் உன்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்த தகவல்கள் தற்போது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 உனக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் சீனா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தாக இணையத்தில் சில தகவல்கள் உலாவுகின்றன.சர்வதேச அளவில் இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், வடகொரியா அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. 

ஆனால், என்ன நடக்கிறது என்பது எப்போதுமே வெளி உலகத்திற்கு தெரியாத நிலையில் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

வடகொரியாவில் நீண்ட காலமாக கிம் குடும்பம் தான் ஆட்சியில் இருந்து வருகிறது. அவரது தாத்தா, தந்தைக்குப் பிறகு தற்போது ஆட்சியில் இருக்கிறார் கிம் ஜாங் உன். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்களும் வதந்திகளும் பரவுவது வழக்கம்தான்.

பொதுவாக அவர் ஏதாவது நிகழ்ச்சிகளில் நீண்ட காலம் பங்கேற்காவிட்டால் அவர் உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள்தவறாக எழுப்பப்படுவது வழக்கம்.

 இந்த நிலையில், தற்போது கிம் ஜான் உன்னுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் கோமாநிலைக்கு சென்று பின்னர் உயிரிழந்ததாக சில ஊடக தகவல்களும் சமூக வலைதளம் பதவிகளும் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் கொரிய அரசு தரப்பில் இருந்து இதுவரை தெளிவான விளக்கம் எதுவும் அளிக்கப்பட்டதாக தெரியவில்லை.

 ஒருவேளை அது உண்மையாக இருந்தால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதுதான் உலக நாடுகளின் ஆர்வத்தை தூண்டி உள்ளது. மேற்கத்திய ஊடகங்கள் இது தொடர்பாக அதிகமாக விவாதித்தும் வருகின்றன.

வழக்கமாக கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து மேற்கத்திய ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதும் வழக்கம். தற்போது இந்த தகவல் அப்படி இருக்கலாம் என்றும் ஒரு சாரார் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். 

அதே நேரத்தில் உன் இறந்து விட்டால் அடுத்து அந்நாட்டை ஆட்சி செய்யப்படுவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.தற்போதைக்கு கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்-கின் பெயர் தான் தற்போது பலமாக அடிபடுகிறது. வடகொரிய அரசியலில் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்தபடியாக அரசியல் செல்வாக்கு மிக்கவராக கிம் யோ ஜாங் கருதப்படுகிறார்

. இதனால் கிம் ஜாங் உன்னுக்கு பிறகு அவரது சகோதரி தான் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ வடகொரியாவின் எதிர்கால தலைமை ஏற்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

 ஏற்கனவே அவர் தான் தந்தையுடன் பல்வேறு ராணுவ நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இதனால் சகோதரியா? மகளா? என்ற போட்டி அவர்களுக்குள் எழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கிம் ஜான் சிகிச்சைக்காக சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியில் தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வடகொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார உறவு வலுவாக இருக்கிறது. 

வடகொரியாவின் முக்கிய நட்பு நாடாக சீனா இருக்கிறது. ஏற்கனவே சீன அதிபரை பலமுறை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார் கிம் ஜாங் உன். அதனால் அவர் சீனாவுக்கு சென்று இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

 ஆனால், இவை யாவும் உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உள்ளன.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி