மீண்டும் வாக்குசீட்டு
🔹விடிய விடிய கொட்டிய கனமழை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
🔹தமிழ்நாட்டை ஒட்டிய கடலோர பகுதிகளில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி. அடுத்த 3 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு.
🔹தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் நீதிமன்ற காவலில் சிறையிலடைப்பு. விடிய விடிய 5 மணி நேரம் நீடித்த வாதங்களுக்குப் பிறகு நீதிபதி உத்தரவு.
🔹தனக்கு எதிராக கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேயர் பிரியா புகார். அவதூறு பரப்புவதன் பின்னணியில் கூட்டுச் சதி உள்ளதா? என்பதை விசாரிக்கவும் வலியுறுத்தல்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக முன்னாள் நிர்வாகி ஒருவர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிர்வாகிகளின் பின்னணியைச் சரிபார்ப்பது தொடர்பாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தலைமைச் செயலக வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவலின்படி, கட்சி நிர்வாகிகளின் பின்னணி குறித்து உளவுத்துறை சமர்ப்பித்த ரகசிய அறிக்கை முதலமைச்சர் விஜய்க்கு சென்றுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்குவதற்கு முன்பு அவர்களின் பின்னணியை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கட்சியில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் அதிகமாக ஊடுருவியுள்ளனர்.அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விவகாரங்கள் தொடர்ந்தால் கட்சிக்குமட்டுமல்ல அரசுக்கும் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அறிக்கையின் முழு விவரங்களோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகிகள் குறித்த தகவல்களோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த விவகாரத்தில் தவெக தலைமை எத்தகைய நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது. நிர்வாகிகளின் பின்னணியைச் சரிபார்க்கும் நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்படுமா, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளன.மீண்டும் வாக்குசீட்டு
இந்தியாவில் தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது அவ்வப்போது எழும் விமர்சனங்கள், சமீபகாலமாகப் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.
அதிலும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நாள் முதல், தேர்தல் ஆணையமே ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது.
பிரதமர் மோடி தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறையை மாற்றிய நாளில் இருந்தே, அதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறாரோ என்கிற சந்தேகம் அனைவருக்குமே எழுந்தது.
அதன் தொடர்ச்சியாக சமீபகாலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள், வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறைகள் காரணமாக தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
கடந்த 2025ம் ஆண்டு பீகார் மாநில சட்டசபை தேர்தலின்போது, எஸ்ஐஆர் பெயரில் வாக்குதிருட்டுகள் அப்பட்டமாக நடந்தன. அம்மாநிலத்தில் மட்டுமே சுமார் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன.
ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்கிற குற்றச் சாட்டுக்காக சிலரது வாக்குகள் திருடப்பட்டன.
இதை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தின.
தமிழக சட்டசபை தேர்தலிலும் அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் எல்லாம் தவெக எளிதில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாடு முழுவதும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நாடு முழுவதிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்துள்ள திமுக எம்பிக்கள் கூட்டத்திலும் மக்களுக்கு தேர்தல்கள் மீதான நம்பிக்கை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும், வாக்குச்சீட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடக்க வழிவகுக்கும் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த’ நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளை விமர்சித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கப்போவதாகவும் திமுக அறிவித்துள்ளது.
உலகின் பல வளர்ந்த நாடுகள் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாறியுள்ளன. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களின் வெளிப்படைத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியிலும் எழ தொடங்கியுள்ளன. பெட்டி மாற்றம் என்கிற சந்தேகம் சாதாரண கிராம மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக உள்ளது.
மேலும் எஸ்ஐஆர் என்பதே ஒரு மோசடி வேலை என்கிற எண்ணமும் மக்கள் மத்தியில் தழைத்தோங்க தொடங்கியுள்ளது. தீவிர வாக்காளர் சரிபார்ப்பு என்ற பெயரில் சிறுபான்மையினர், இளைஞர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்திய ஜனநாயகத்தில் இன்னமும் மக்களின் நம்பிக்கையாக இருப்பது தேர்தல்களும், நீதிமன்றங்களுமே ஆகும். அவற்றின் மீதும் அரசியல் கறை படியுமானால், காலப்போக்கில் ஜனநாயகமே கேலி கூத்தாகிவிடும். எனவே தேர்தல் களத்தில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமளிக்காத வகையில், தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
எனவே தலைமை தேர்தல் ஆணையரை மாற்றிவிட்டு, மீண்டும் தேர்தல் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும்.

