ஏன் தாமதம்?







கொலையுதிர் காலம்..?

தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் தொடர் கொலை மற்றும் பாலியல் குற்றச் சம்பவங்களைக் குறிப்பிட்டு, தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோரை அ.தி.மு.க. மற்றும் பிற எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தி.மு.க.வின் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் தற்போதைய ஆட்சிக்கு எதிராகக் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், தற்போதைய அரசை “Sofa Model ஆட்சி” என்றும், முதலமைச்சரை “Dummy CM” என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது.

 இந்தத் தாக்குதலில் மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் கணவரும் மகனும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தச் சம்பவத்தின் போது, உயிரிழந்த பெண்ணின் 2 மகள்களை அந்த மர்ம கும்பல் கடத்திச் சென்றதாகவும், சில மணி நேரத் தேடலுக்குப் பின்னரே அவர்கள் மீட்கப்பட்டதாகவும் உதயநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்குச் சான்றாக அண்மையில் நடந்த அடுத்தடுத்த சம்பவங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

வேளாங்கண்ணி கொடூரம்: வீட்டை விட்டு வெளியேறி வந்த 2 சிறுமிகளை விடுதி ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம்.

  திருநெல்வேலி கூட்டுப் பாலாத்த்காரம்: திருநெல்வேலியில் வீட்டை விட்டு வெளியேறிய மற்றொரு சிறுமிக்கு நேர்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை.

  தவெக பிரமுகர் அத்துமீறல்: கன்னியாகுமரி மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு.

விவரம் பின்வருமாறு,
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? Sleep Mode-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில், மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இந்தக் கொடூர தாக்குதலில் அந்தப்பெண்ணின் கணவரும், மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் 2 மகள்களையும் அந்தக்கும்பல் கடத்தியுள்ளது. சில மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு வெளியேறி வந்த 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும்,

 திருநெல்வேலியில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது.மேலும், த.வெ.க.வின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.


இந்த SofaModel ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.

ஆனால், இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது தான் முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா?


ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் Reels Shoot செய்யும் Dummy CM, எப்போது தான் குற்றங்களைக் கட்டுப்படுத்துவார்?


இந்தக்குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.ஏன் இந்த தாமதம்..?

தமிழகத்தில் கடந்த 1996, 2001, 2006, 2011 ஆகிய வருடங்களில் உள்ளாட்சி மன்ற தேர்தல்கள் ஒரே கட்டமாக நடந்தன.


2016ம் ஆண்டு உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். ஆனால், உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காரணத்தால், குறிப்பிட்ட காலத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்த முடியவில்லை.


இதனால் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி அமைப்புகள், அந்தந்த மாவட்ட தனி அதிகாரிகளின் நிர்வாகத்துக்குள் சென்றது. அதேசமயம், ஜெயலலிதாவின் உடல் நலம் குன்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு ஆர்வம் காட்டவில்லை.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் பொறுப்புக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி மன்ற அமைப்புகளை, கிராமப்புற உள்ளாட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகள் என இரண்டாக பிரித்தார். இதில், கிராமப்புறங்களில் தங்களுக்கு செல்வாக்கு உள்ளது எனக்கருதி, கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தினார்.2021-ம் ஆண்டு அவரது ஆட்சி முடிந்து, திமுக அரசு பதவி ஏற்றதை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தினார்.

இந்நிலையில், மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக, 9 மாவட்டங்களை தவிர்த்து, அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம், கடந்த திமுக ஆட்சியின்போதே முடிந்துவிட்டது.


அந்த பதவிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து, கிராம பஞ்சாயத்துகளின் நிர்வாகம் கவனிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் பதவி காலம் கடந்த 19ம்தேதியுடன் முடிவடைந்துவிட்டது.

அந்த வகையில், தமிழகத்தில் தற்போது கிராம உள்ளாட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் யாரும் பதவியில் இல்லை. ஊராட்சிகளில் உள்ள அரசு அலுவலர்கள்தான் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.

அதேபோல், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளில் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் வருகிற 2027 பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது.

இந்த சூழலில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வழக்கமாக, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்.

இதுதான், பல ஆண்டு காலமாக பின்பற்றப்படும் நடைமுறை. ஆனால், தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து பல மாதங்களாக மக்கள் பிரதிநிதிகள் பணியிடம் காலியாக உள்ளது.

அத்துடன், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலமும் மிக விரைவில் நிறைவுபெற உள்ளது. எனவே, வரும் டிசம்பர் மாதத்திலேயே இதற்கான அறிவிப்பு வெளியிட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

இப்படி செய்யும்பட்சத்தில், பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

நாட்காட்டி பெறுக

ஆனால், வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதும், அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி அமைப்புகளை கொடுப்பதும், அதிகார வர்க்கம் குவிவதற்கு வழி வகுத்துவிடும். இதைத்தான் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் எதிர்க்கின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி