ரேஷன் அரிசிக்கு பாலிஷ்
தமிழ்நாடு முழுமைக்கும் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவடைந்த நிலையில் நாளை புயலாகவும் வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்
இந்தியா-பாக். போரை நிறுத்தினேன்... ஆனா நோபல் பரிசு தரல: அமெரிக்க இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் வேதனை.(எதையாவது கொடுங்க.புலம்பல் தாங்க முடியல்ல.)
கொடைக்கானலில் உள்ள குணா குகை, பைன் காடு, தூண் பாறை, மோயர் பாயிண்ட், மன்னவனூர் பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், சில்வர் கேஸ்கேட் அருவி, பேரிஜம் ஏரி, கிரீன் வேலி வியூ, டால்பின்ஸ் நோஸ், பேரி அருவி ஆகிய அனைத்துச் சுற்றுலாத் தலங்களும்.மூடப்பட்டன.
கோத்தகிரி: பர்ன்சைடு பகுதியில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் துரைசாமி (59) என்பவரை காட்டு யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழப்பு .
கனமழையால் பெரியகுளத்தில் இருந்து அடுக்கு வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் 10.க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் மரங்கள் விழுந்து சாலை முற்றிலும் சேதம் அடைந்தது.
வறண்டு பாலைவனம் போல் காட்சியளித்த வைகை ஆற்றில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துசவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், வானூர்தி எரிபொருள் மீதான வரியைக் குறைப்பதற்கு த.வெ.க.அரசு நடவடிக்கை எடுப்பது கடும் கண்டனத்திற்குரியது என சீமான தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 
ரேஷன் அரிசிக்கு பாலிஷ் போட்டு கொள்ளை அடிக்கும் த.வெ.க,அரசு.,!
மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் Dummy CM சொன்ன மாற்றமா?
அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது.
அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர்.
கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த MLA.தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் - அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள்.ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை?
என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்?
த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது?
இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்..என உதயநிதி ஸ்டலின் பதிவிட்டுள்ளார்.
இவ்வளவு இணையதளங்கள் முடங்கின?
கடந்த புதன்கிழமை (அக்டோபர் 21) உலகம் முழுவதும் திடீர்னு ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டுச்சு. ஜப்பான் நிதி அமைச்சகம், அமெரிக்காவின் பேம்புஎச்ஆர் (BambooHR), நெதர்லாந்தின் ரோட்டர்டாம் துறைமுகம், மற்றும் விக்கிப்பீடியாவை நடத்தும் விக்கிமீடியா ஃபவுண்டேஷன் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் இணையதள சேவைகள் திடீர்னு முடங்கிப் போனது.
இன்டர்நெட் உலகத்துல ரொம்ப முக்கியமான 'பிஎச்பி' (PHP) புரோகிராமிங் லாங்குவேஜில் ரெண்டு பெரிய பாதுகாப்புப் பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டதால்தான்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடக்கம் நடந்துச்சு. இந்தத் தொழில்நுட்பக் கோளாறுக்கு 'பிஎச்பி2ஷெல்' (PHP2Shell) அப்படின்னு பெயர் வச்சிருக்காங்க.
PHP (Hypertext Preprocessor) என்பது இணையதளங்களின் பின்னணியில் அமைதியாக வேலை செய்யுற ஒரு ஒபன் சொர்ஸ் புரொகிராமிங் லாங்குவேஜ்.
இந்த விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடர்கிறது
ஆன்லைனில் லாகின் பண்றது, அப்ளிகேஷன் போடுறது, அல்லது ஆன்லைன்ல ஷாப்பிங் பண்றதுனு எல்லா வேலைகளையும் பின்னணியில இருந்து பாக்குறது இந்த பி.எச்.பி. தான்.
சர்வர் மொழி அடையாளம் காணக்கூடிய வெப்சைட்டுகளில் சுமார் 70% இதுலதான் ஓடுது.
இது முழுக்க முழுக்க இலவசமானது; தன்னார்வலர்களால் பராமரிக்கப்பட்டு வருது.
உலகத்துல இருக்குற வெப்சைட்டுகளில் 40%-க்கும் மேல இயங்குற 'வேர்ட்பிரஸ்' (WordPress) கூட இந்த பிஎச்பி-ஐ வச்சுத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிளாக்குகள், அரசுத் தளங்கள், செய்தி தளங்கள் எல்லாமே அடங்கும்.இந்த 'பிஎச்பி2ஷெல்' என்பது என்ன? என்னதான் பிரச்சனை?
பிஎச்.பி கோடுகளில் (Code) பல ஆண்டுகளாக இருந்த இரண்டு தீவிரமான ஓட்டைகளைத்தான் ஒட்டுமொத்தமா 'பிஎச்பி2ஷெல்' அப்படின்னு சொல்றாங்க.
அது என்னென்ன பிரச்சனைன்னா:
நினைவகம் தீர்ந்துபோகும் போது (Memory Out):இப்போ நீங்க ஒரு ஜாப் போர்ட்டல்ல உங்க பயோ டேடாவை அப்லோட் பண்றீங்கன்னு வச்சுப்போம்.
அப்போ தேவையான மெமரி இல்லாம பிஎச்பி நடுவுல தடைபட்டுப் போச்சுன்னா, அந்த பாதியளவு தகவலையே சரியானதுன்னு அது தப்பா நம்பிடும்.
இதான் ஹேக்கர்களுக்குச் சாதகமா மாறிடும்.
பழைய டேட்டா மிச்சம் நிக்கிறது (Leftover Info):முதல் நபர் ஒரு வெப்சைட்டை யூஸ் பண்ணிட்டுப் போன பிறகு, கம்ப்யூட்டர் மெமரியில இருந்து டேட்டா அழிஞ்சாலும் கூட பிஎச்பி. அதைத் தன் நினைவகத்துல வச்சிருக்கும்.
அடுத்ததா வர்ற இரண்டாவது ஆளுக்கு அந்தப் பழைய டேட்டாவையே தப்பா யூஸ் பண்ணிடும். ஹேக்கர்கள் இந்தத் குழப்பத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்தி சர்வரைக் கைக்குள் கொண்டு வருவாங்க.
ஹேக்கர்களுக்கு இந்த வெப்சைட்டில் எந்த அக்கவுண்டும் இருக்கணும்னு அவசியமே இல்லை; நேரில் போய்க் கூட சர்வரைத் தொடத் தேவையில்லை.
இன்டர்நெட் மூலமாகவே ஒரு சின்ன தீங்கிழைக்கும் கோரிக்கையை அனுப்பி, சர்வரையே அவங்க கண்ட்ரோல் கொண்டு வர முடியும்.இதனால பயனர்களின் பாஸ்வேர்ட், தனிப்பட்ட தகவல்கள், அப்லோட் செய்யப்பட்ட ஆவணங்கள் எல்லாம் பெரும் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும். குறிப்பா, செயற்கை நுண்ணறிவு( AI) கருவிகள் மூலமா ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடிச்சது போலவே, ஹேக்கர்களும் இன்னும் வேகமா தாக்குதல்களை நடத்த இது வழிவகுத்துடும்னு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கிறாங்க.
ஹேக்கர்கள் இந்த ஓட்டையைப் பயன்படுத்தி வெப்சைட்டுகளைக் கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறதால, பாதுகாப்பு முகமைகள் உடனடியாக வெப்சைட் ஓனர்ஸுக்கு ஒரு வார்னிங் கொடுத்தாங்க. "உடனே சிஸ்டத்தை அப்டேட் பண்ணுங்க, அப்படி முடியலன்னா முன்னெச்சரிக்கையா வெப்சைட்டை தற்காலிகமாக ஆஃப் பண்ணிடுங்க" அப்படின்னு சொன்னாங்க.
ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி உள்ளிட்ட பல தலைவர்கள் வெப்சைட்டுகளை உடனடியாகப் பாதுகாக்க வலியுறுத்தினார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சைபர் பாதுகாப்பு அமைப்பு (CERT-EU) மற்றும் இந்தியாவின் சைபர் பாதுகாப்பு (CERT-In) அமைப்பும் அவசர எச்சரிக்கைகளை விடுத்தன.
இந்தச் சமயத்தில் பிஎச்பி டெவலப்பர்கள் உடனடியாக பாதுகாப்புக்கான அப்டேட்களை வெளியிட்டுவிட்டனர். பல சிறிய வெப்சைட்டுகளை நடத்துகிறவர்கள் தங்கள் சர்வர் விவரங்களைச் சரியா நிர்வகிக்கத் திணறினாலும், இந்த அப்டேட்டை உடனே இன்ஸ்டால்செய்யுமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.






