கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.

🗞️ தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு. சிறைக்கு பின்னால் இருந்த வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஒருவரை பிடித்த போலீசார்.🗞️ தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது. வரும் நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு.🗞️ அரசியல் காழ்ப்புணர்வோடு அன்பில் மகேஸை தவெக அரசு கைது செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைப்பதாகவும் விமர்சனம்.🗞️ வங்கக்கடலில் மிக தீவிரப் புயலாக வலுப்பெற்றது அர்னாப் புயல். அதிகபட்சமாக 140 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவுக்கு ரெட் அலர்ட்.🗞️ வடகிழக்கு பருவமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. பவானிசாகர், பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.தப்பிப்போம் வா!

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி உள்ளது. 

காரணம் தமிழகத்திலேயே முதல் முறையாக 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறையில் இருந்து தப்பிய இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்த  கைதிகள் காவலர்களை கூண்டோடு தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

 நேற்று இரவு முழுவதும் தேனி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் இவர்களைப் பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

 இதில் மதுரையைச் சேர்ந்த பிரவின் என்ற கைதி நேற்று இரவே கைது செய்யப்பட்டான். அதனைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி அருகே சிலம்பரசன் என்ற கைதியையும் போலீசார் கைது செய்தி ருந்தனர்.

இந்தநிலையில் ராஜா சிக்கந்தர், ராஜ்குமார் ஆகிய இருவரை போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர். இதனால் தப்பி ஓடிய 17 கைதிகளில் மொத்தம் நான்கு பேர் தற்போது வரை பிடிபட்டுள்ளனர். 

மீதமுள்ள நபர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். தற்பொழுது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மீதமுள்ளவர்கள் பதுங்கி இருக்கும் இடங்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். 

கைதிகளை பிடிப்பதற்காக 17 தனி ப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட சிறையில் ஆய்வு செய்த பிறகு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தப்பி ஓடியவர்கள் மதுரை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அதேபோல் இதில் மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு சென்னை புழல் சிறையில் இருந்து இரு கைதிகள் தப்பியோடிய சம்பவமும் அதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.அது அடங்கும்முன்னரே17 பேர் தப்பித்தது காவல்துறைக்கு பேரிடி.

'அர்னாப்' கள(புயல்)நிலவரம்

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் வலுப்பெற்று, மேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ‘அா்னாப்’ புயலாக வலுப்பெற்றது. 

இந்தப் புயலானது ஆந்திரம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதியில் நாளை (அக்டோபர் 28) கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய கிழக்கு அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் கடந்த 24-ஆம் தேதி வலுப்பெற்றது. இது மேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை காலை 5.30 மணியளவில் மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ‘அா்னாப்’ புயலாக வலுப்பெற்று, காலை 8.30 மணியளவில் அதே பகுதியில் நிலவியது.

இது மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும், செவ்வாய்க்கிழமை (அக். 27) மிக தீவிர புயலாகவும் அதே பகுதிகளில் வலுப்பெறக்கூடும். 

இது மேலும் வடமேற்கு திசையில் நகா்ந்து ஆந்திரம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக புதன்கிழமை (அக். 28) முற்பகலுக்குள் கரையைக் கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 140 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை 5.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கடலோர தமிழக பகுதிகளுக்கு நகா்ந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது.

 சுமாா் 3.1 கி.மீ. உயரம் வரை லட்சத்தீவு பகுதியிலிருந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் வரை தெற்கு கேரளம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (அக்டோபர் 27) மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலை நிலவக்கூடும்.

நாளை (அக். 28) மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.விஜய் ஆய்வு நடத்தியுமா சிறை இப்படி இருக்கிறது?-இபிஎஸ் கண்டனம்

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர்.

 மீதமுள்ள சிறைவாசிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி உள்ளது. 

காரணம் தமிழகத்திலேயே முதல் முறையாக 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறையில் இருந்து தப்பிய இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

 வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை  சந்தி சிரிக்க, மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை Fuse பிடுங்கிய நிலையில் இருக்க,

தற்போது சிறைத்துறையும் அந்த List-ல் சேர்ந்துவிட்டது. மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் Highlight!எப்போது பார்த்தாலும் “மைக்” வெறி பிடித்து அலைந்து, தூக்கத்தில் கூட “அண்ணாதிமுக புராணம்” பாடிக் கொண்டிருக்கும் சிடிஆர்.நிர்மல்குமார் -ன் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு!

ஏற்கனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே தமிழக சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் இந்த அரசுக்கோ, அமைச்சருக்கோ நேரம் இல்லை போலும்! 

அது சரி, புழல் ஜெயிலுக்கு Inspection எல்லாம் போனீர்களே முதல்வர் விஜய் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? 

நீங்கள் நடத்தியது ஆய்வு தானா? அல்லது, சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா?கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்? 

அதிகரிக்கும் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம்,தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள், சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்,

இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் “150 நாள் வெற்றி மலர்” வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

 தப்பியோடிய கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி