விலை உயர்வை கூறியதற்கு கைது!

 சமீபத்தில், செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பொருளாதார வல்லுநர் கலையரசன், தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து கவலை தெரிவித்திருந்தார். குறிப்பாக, தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அதிகமாக இருப்பதாகவும், இதைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னை அடையாறில் உள்ள கலையரசனின் வீட்டுக்கு சாதாரண உடையில் 3 போலீசார் சென்றுள்ளனர்.

 வீட்டின் கதவைத் திறந்த கலையரசனிடம் பெயரைக் கேட்ட போலீசார், பின்னர் அவரது செல்போனை வாங்கிக் கொண்டு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர். 

எஎன்ன வழக்கு, என்ன புகார் என்ற விவரங்களை கலையரசனிடம் போலீசார் முதலில் தெரிவிக்கவில்லை.

பின்னர்தான், பல்லாவரம் தொகுதி தவெக எம்எல்ஏ காமாட்சியின் இன்ஸ்டாகிராம் பதிவில் தகாத வார்த்தைகளால் கருத்து பதிவிட்டதாகக் கூறி கலையரசனை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் தெரிவித்தனர். 

ஆனால், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே கிடையாது என்றும், சம்பந்தப்பட்ட கருத்தைத் தான் பதிவிடவில்லை என்றும் கலையரசன் மறுத்துள்ளார்.

நீண்ட நேரம் கழித்து, கலையரசனை மீண்டும் அடையாறில் உள்ள வீட்டுக்கே அழைத்துச் சென்று விட்டுள்ளனர்.

 இதையடுத்து, தன்னை போலீசார் துன்புறுத்தியதாக தமிழக காவல்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார் 🔹ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவரிடம் மனு. தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் புகார்.🔹SIR மூலம் நீக்கப்பட்டவர்களை புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ நிரப்ப வற்புறுத்துவதா? சட்டவிரோதம் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.🔹முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை. முக்கிய திட்டங்கள், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி ஆலோசிக்க வாய்ப்பு.🔹தேனி மாவட்ட கிளைச் சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் பிடிபட்டனர். 15 பேர் சிக்கிய நிலையில், எஞ்சிய 2 பேரும் கூடலூர் காவல் நிலையத்தில் சரண்.🔹ஆந்திராவில் அர்னாப் புயல் பாதிப்புகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு. 70,000 ஹெக்டர் விளைநிலங்கள், 6,000 மின் கம்பங்கள் சேதம்.



'வெற்றி’ சிறை தப்பும் திட்டம்!

விஜய், தொடங்கி வைக்­கா­மல் பல திட்­டங்­கள் நாட்­டில் நடை­மு­றை­யில் இருக்­கி­றது. அதில் ஒன்று ‘வெற்றி’ தப்பி ஓடும் திட்­டம் ஆகும். 

மத்­திய சிறை­யில் இருந்து கிளை சிறை­கள் வரைக்­கும் கைதி­கள் சர்­வ­சா­தா­ர­ண­மா­கத் தப்பி ஓடு­கி­றார்­கள்.

இதனை ஒரு திட்­ட­மாக அமல் செய்­துள்­ளார்­களா? அல்­லது பரி­கா­ரம் என்ற அடிப்­ப­டை­யில் ஆஸ்­தான ஜோசி­யர் சொல்லி தப்ப விடு­கி­றார்­களா? என இன்­ன­மும் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.நாம் நமது படங்­க­ளின் மூல­மாக பல்­வேறு சமூக விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தி­னோம்’ என்று தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் சொன்­னார் முத­ல­மைச்­சர் விஜய். 

ஆமாம், அவை பாடத் திட்­டத்­தில் வைக்க வேண்­டிய கருத்­துக்­கள் தான். ஒரு படத்­தில் சிறை­யில் இருக்­கும் விஜய், வலிப்பு வந்­த­தைப் போல நடிப்­பார். காவ­லர்­கள் கத­வைத் திறப்­பார்­கள். அதில் இருந்து விஜய் தப்­பிப்­பார்.

இத­னால் விழிப்­பு­ணர்வு பெற்ற கைதி­கள் சிலர் அதே போல தப்பி இருக்­கி­றார்­கள். எவ்­வ­ளவு பெரிய நல்­வழி காட்டி இருக்­கி­றார் முத­ல­மைச்­சர் விஜய்!

தேனி மாவட்­டச் சிறைச்­சா­லை­யா­னது தேக்­கம்­பட்­டி­யில் செயல்­பட்டு வரு­கி­றது. 200 கைதி­கள் வரை இங்கு வைக்­கப்­ப­ட­லாம்.

 ஆனால் 334 கைதி­கள் இருக்­கி­றார்­கள். கடந்த 26 ஆம் தேதி இரவு 10.00 மணி அள­வில், மூன்­றா­வது பிளாக்­கில் உள்ள ஒரு கைதிக்கு வலிப்பு நோய் ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறி சில கைதி­கள் கூச்­ச­லிட்­ட­னர். அந்த பிளாக்­கில் பாரா

காவ­ல­ரா­கப் பணி­யாற்­றிய ஸ்டாலின் பிரபு உள்ளே போய் பார்த்­துள்­ளார். அப்­போது அவ­ரைக் கைதி­கள் தாக்கி இருக்­கி­றார்­கள்

 முன் வாச­லுக்கு வந்து அங்கு இருந்த காவ­லர்­க­ளை­யும் தாக்கி சாவி­யைப் பறித்து கத­வைத் திறந்து தப்­பித்­து­விட்­டார்­கள். மொத்­தம் 17 கைதி­கள் தப்பி விட்­டார்­கள்.

சிறைத்­துறை வர­லாற்­றில் மிகப்­பெ­ரிய சம்­ப­வ­மாக இதைச் சொல்­ல­லாம். அ.தி.மு.க. ஆட்­சி­யில் 1995 ஆகஸ்ட் 15 அன்று 43 கைதி­கள் தப்­பிச் சென்ற நிகழ்­வு­தான் தமி­ழக வர­லாற்­றில் மிகப் பெரிய சிறை நிகழ்வு.

வேலூர் கோட்­டை­யில் இருந்த திப்பு மஹால் சிறப்பு முகா­மில் அடைக்­கப்­பட்­டி­ருந்த விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தைச் சேர்ந்த 43 கைதி­கள், 153 அடி நீள­முள்ள சுரங்­கப் பாதை­யைத் தோண்­டித் தப்­பித்­தார்­கள். தப்பி ஓடி­ய­வர்­களில் 21 பேர் மட்­டுமே பிடி­பட்­ட­னர்.

இந்த சம்­ப­வம் நடந்த 31 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு தேனி ஆண்­டி­பட்டி அருகே உள்ள தேக்­கம்­பட்டி மாவட்­டச் சிறை­யி­லி­ருந்து ஒரே நேரத்­தில் 17 விசா­ர­ணைக் கைதி­கள், சிறைக் காவ­லர்­க­ளைத் தாக்­கி­விட்டு தப்­பி­யோ­டிய அதிர்ச்சி சம்­ப­வம் நடந்­தி­ருக்­கி­றது.

 பணி­யில் கவ­னக்­கு­றை­வாக இருந்­த­தற்­காக, தேனி மாவட்­டச் சிறைச்­சா­லை­யைச் சேர்ந்த 9 சிறைப் பணி­யா­ளர்­கள் பணி­யிடை நீக்­கம் செய்­யப் பட்­டுள்­ள­னர். கைதி­க­ளைப் பிடித்து வரு­கிறார்­கள்.

3-வது பிளாக்­கில் உள்ள ஒரே அறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்த கைதி­க­ளில் ஒரு­வ­ருக்கு திடீ­ரென வலிப்பு ஏற்­பட்­டது போல நாட­க­மாடி உள்­ளார். இதை உண்மை என நம்பி சிறப்பு எஸ்.ஐ. மதன்­மோ­கன் மற்­றும் சிறைக் காவ­லர் தங்­க­பாண்டி ஆகி­யோர் அறை­யைத் திறந்து வலிப்பு நிற்­ப­தற்­காக சாவிக் கொத்தை மொத்­த­மாக கொடுத்­த­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கி­றது. சிறை­கள்

எவ்­வ­ளவு மெத்­த­ன­மா­கக் கையா­ளப்­ப­டு­கின்­றன என்­ப­தற்கு இது ஒருஉதா­ரணம் ஆகும்.

கைதி­கள் தாக்­கி­ய­தில் காவ­லர் தங்­க­பாண்­டிக்கு தலை­யில் பலத்த காயம் ஏற்­பட்டு அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப் பட்­டுள்­ளார். 

சம்­ப­வம் நடந்த அன்று இரவு நான்கு காவ­லர்­கள் மட்­டுமே பணி­யில் இருந்­தது கைதி­கள் எளி­தில் தப்­பிக்க உத­வி­ய­தா­க­வும் தக­வல் வெளி­யாகி உள்­ளது. தப்­பிச் செல்­லும் போது பணி­யில் இருந்த காவ­லர் அணிந்­தி­ருந்த தங்­கச் சங்­கி­லியை கைதி­கள் பறித்­துச் சென்­றுள்­ள­னர்.

த.வெ.க. ஆட்­சி­யில் கைதி­கள் தப்­பிப்­பது சர்வ சாதா­ர­ண­மாக ஆகி­விட்டது. கடந்த ஐந்து மாதத்­தில் 50 கைதி­கள் பல்­வேறு சிறை­க­ளில் இருந்து தப்பி இருக்­கி­றார்­கள்.

« ஜூன் 21 -செங்­கல்­பட்டு சிறார் கூர் நோக்கு இல்­லம் - 5 பேர் தப்­பி­யோட்­டம்.

« ஜூலை 1 - தேனி காவல் நிலை­யம் -ஒரு­வர் தப்­பி­யோட்­டம்

« ஜூலை 2 - பாளை­யங்­கோட்டை மத்­திய சிறை -ஒரு­வர் தப்­பி­யோட்­டம்

« ஜூலை 12 - செங்­கல்­பட்டு சிறார் கூர் நோக்கு இல்­லம் -12 பேர் தப்­பி­

யோட்­டம்

« ஜூலை 13, 14 - செங்­கல்­பட்டு சிறார் கூர் நோக்கு இல்­லம் - 11 பேர் தப்­பி­யோட்­டம்

« ஆகஸ்ட் 10 -கன்­னி­யா­கு­மரி அரசு மருத்­து­வ­மனை -ஒரு­வர் தப்­பி­யோட்­டம்.

« அக்­டோ­பர் 20 -புழல் சிறை -ஒரு­வர் தப்­பி­யோட்­டம்

« அக்­டோ­பர் 21 - புழல் சிறை -ஒரு­வர் தப்­பி­யோட்­டம்

« அக்­டோ­பர் 26 - தேனி மாவட்ட சிறை - 17 பேர் தப்­பி­யோட்­டம்

திரு­வா­ளர் விஜய் அவர்­கள் ஆட்­சி­யின் சிறை சரித்­தி­ரம் இது. 

போதை சரித்­தி­ரம் தனி. பாலி­யல் சரித்­தி­ரம் தனி. காவல் நிலை­யங்­க­ளில் ‘சரித்­திர பதி­வேடு குற்­ற­வா­ளி­கள்’ என்று பட்­டி­யல் வைத்­தி­ருப்­பார்­கள். அத்­த­கைய குற்­ற­வா­ளி­கள் துள்­ளிக் குதிக்­கும் ஆட்­சி­யாக த.வெ.க. ஆட்சி நடந்து கொண்டு இருக்­கி­றது.தேனி மாவட்ட சிறை­யில் இருந்து கைதி­கள் தப்­பி­னார்­கள் என்ற செய்தி வந்த அன்று சேலம் ஆட்­டை­யாம் பட்டி காவல் நிலை­யத்­தில் இருந்து ரவு­டி­கள் தப்பி ஓட்­டம் என்ற செய்தி வெளி­யா­னது. விசா­ர­ணைக்கு காவல்­நி­லை­யம் அழைத்து வரப்­பட்ட 2 பேர் தப்பி ஓடி இருக்­கி­றார்­கள்.

குழந்­தை­கள் கடத்­தல், - குழந்­தை­கள் காணா­மல் போதல், - சிறு­மி­கள் பாலி­யல் தொல்­லைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­தல், - போதைப் பொருட்­கள் எளி­தில் கிடைத்­தல், - செயின் பறித்­தல், - பக­லில் வெட்­டு­தல், - கைதி­கள் தப்­பித்­தல் - இவை எல்­லாம் ஒரு மாநி­லம் எந்­த­ள­வுக்கு சட்­டம் ஒழுங்­கில் மிக­மிக மோச­மாக இருக்­கி­றது என்­ப­தற்­கான அள­வு­கோல்­கள் ஆகும். இந்த அள­வு­கோல்­கள் அனைத்­தி­லும் விஜய் அரசு முன்­ன­ணி­யில் இருக்­கி­றது.

சட்­டம் ஒழுங்கு முத­ல­மைச்­சர் விஜய் கையில் இருக்­கி­றது. அவர் காவல் துறை விழாக்­க­ளில் கலந்து கொண்டு சல்­யூட் வைப்­ப­து­தான் தனது கடமை என்று நினைக்­கி­றார் போலும்!

சிறைத்­து­றை­யைக் கையில் வைத்­துள்­ளார் மின்­வெட்­டுத் துறை அமைச்­சர் நிர்­மல்­கு­மார். அடுத்­த­வர் துறைக்கு எல்­லாம் வரிந்து கட்­டிக் கொண்டு துரை பதில் சொல்­வார். ஆனால் தன் கைவ­சம் இருக்­கும் அனைத்­துத் துறை­க­ளி­லும் ஓட்டை.

உத­வாக்­க­ரை­க­ளின் ஆட்­சி­யில் நாடே திறந்­த­வெ­ளிச் சிறைச்­சா­லை­யாக மாறிக் கொண்டு இருக்­கி­றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி